இந்தியாவில் தற்போது பல்வேறு பிராண்டுகளின் பெயர்களில் ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பிராண்டுகளின் ஆடைகள் தான் நாம் அதிகம் விரும்புபவையாக இருக்கின்றன. அப்படி ஒரு பிராண்டு தான் முஃப்தி (Mufti).
ஆண்களுக்கான ஆடைகளை விற்பனை செய்து வரக்கூடிய இந்த நிறுவனம் வெறும் 10000 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா. இந்தியாவில் ஆண்களுக்கான பிரீமியம் ஆடைகளை விற்பனை செய்யக்கூடிய மிகப்பெரிய நிறுவனமாக முஃப்தி நிறுவனம் வளர்ந்து நிற்கிறது. இதன் சந்தை மூலதன மதிப்பு மட்டும் 1150 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

10000 ரூபாய் கடனில் தொடங்கப்பட்டு தற்போது 1150 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக இதனை உயர்த்திய பெருமை இதன் நிறுவனர் கமல் குஷ்லானியையே சாரும். தன்னுடைய 19 வயதில் தந்தையை இழந்தவர் இவர். குடும்பத்தில் நிதி சிக்கல் ஏற்படவே வேலைக்கு செல்ல தொடங்கினார் . கேசட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
சிறுவயதிலிருந்தே ஃபேஷன் துறையில் ஆர்வம் இருந்தாலும் அதை ஒரு தொழிலாக கொண்டு செல்வதற்கான நிதி அவரிடம் இல்லை. எனவே கிடைத்த வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இருந்தாலும் அவருடைய துணிமணி மற்றும் அவற்றை அவர் ஸ்டைல் செய்யும் விதத்தை கண்டு அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவ்வப்போது அவரிடம் அறிவுரை கேட்பார்களாம்.இதன் பின்னர் தான் கமலுக்கு நாம் சொந்தமாக ஒரு பேஷன் பிராண்டினை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
1992 ஆம் ஆண்டு தன்னுடைய அத்தையிடமிருந்து பத்தாயிரம் ரூபாயை கடனாக பெற்ற அவர் சொந்தமாக ஆண்களுக்கான சட்டை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். மிஸ்டர் & மிஸ்டர் என முதலில் இதற்கு பெயர் சூட்டினார். தன்னுடைய வீட்டையே உற்பத்தி ஆலையாக மாற்றினார்.
துணி வாங்குவதிலிருந்து அதனை தைப்பது, விற்பனைக்கு கொண்டு செல்வது என அனைத்து பொறுப்புகளையும் தனிநபராக அவரே கவனித்து வந்தார். பின்னர் 1998 ஆம் ஆண்டு தன்னுடைய நிறுவனத்தின் பெயரை முஃப்தி என பெயர் மாற்றம் செய்தார். ஆண்களுக்கு தேவையான தரமான மற்றும் பிரீமியம் ஆடைகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கிய முஃப்தி பிராண்டுக்கு ஆண்களிடையே பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்தது.
இருந்தாலும் 2000ஆம் ஆண்டு முதன்முறையாக ஆண்களுக்கான stretch jeans அறிமுகம் செய்தது பெரிய ஏற்றத்தை தந்தது. இந்தியாவிலேயே இப்படி ஒரு ஜீன்ஸை அறிமுகம் செய்த முதல் பிராண்ட் இதுதான் இது வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது . இதனை அடுத்து முஃப்தி நிறுவனம் தனியாக தங்களுடைய பிராண்ட் விற்பனை நிலையத்தை தொடங்கும் அளவிற்கு இந்த வெற்றி அவரை ஊக்குவித்தது.
தற்போது முஃப்தி நிறுவனம் 379 நேரடி விற்பனை நிலையங்களை கொண்டிருக்கிறது . அது தவிர 1305 மல்டி பிராண்ட் விற்பனை நிலையங்களில் முஃப்தி நிறுவனத்தின் ஆடைகள் கிடைக்கின்றன. பல்வேறு ஆன்லைன் தளங்களிலும் நாம் இதனை வாங்க முடியும். நம்முடைய ஆர்வத்தை எப்படி தொழிலாக மாற்றி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் இவர்.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications