இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 1 ஆம் தேதி தனது முதல் டிஜிட்டல் ரூபாயின் (e₹) சோதனை திட்டம் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, டிஜிட்டல் ரூபாயின் முதல் பைலட் திட்டம் மொத்த விற்பனை சந்தையில் (e₹-W) செவ்வாய்க்கிழமை தொடங்கும்.
ரூபாய்க்கு எப்படி ₹ என்ற குறியீடு உள்ளதோ அதேபோல் டிஜிட்டல் ரூபாய் - e₹, மொத்த விலை விற்பனை சந்தையில் பயன்படுத்தும் டிஜிட்டல் ரூபாய்க்கு e₹-W, சில்லறை விற்பனை சந்தையில் பயன்படுத்தும் டிஜிட்டல் ரூபாய்க்கு e₹-R நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் ரூபாய்க்கும், கிரிப்டோகரன்சிக்கும் என்ன தொடர்பு..?
டிஜிட்டல் கரன்சி
டிஜிட்டல் கரன்சி என்பது 5 வருடத்திற்கு முன்போ அல்லது 10 வருடத்திற்கு முன்போ வந்தது இல்லை, 1983ல் டேவிட் சம் என்பவர் முதன் முதலில் டிஜிட்டல் கரன்சி என்ற கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தார்.
சடோஷி நக்மோட்டோ
1983-2007 வரையில் பல டிஜிட்டல் கரன்சி வந்து சென்றாலும், எதுவும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை, ஆனால் சடோஷி நக்மோட்டோ உருவாக்கிய பிட்காயின் தான் முதன் முதலில் நம்பகமான டிஜிட்டல் கரன்சியாக உருவானது.
சரி டிஜிட்டல் ரூபாய்க்கும், கிரிப்டோகரன்சிக்கும் என்ன தொடர்பு..? டிஜிட்டல் ரூபாய் எப்படி இயக்குகிறது..? டிஜிட்டல் ரூபாய் மூலம் என்ன பயன்..?
கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சியை பொருத்த வரையில் decentralized money அதாவது யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம், அரசோ அல்லது மத்திய வங்கிகளோ அதை நிர்வாகம் செய்யத் தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. இதேபோல் கிரிப்டோகரன்சி உருவாக்கப்படுவது பிளாக்செயின் டெக்னாலஜி மற்றும் கிரிப்டோகிராபி செயல்பாடுகள் அடிப்படையில் தான்.
பிட்காயின் தேவை
முதன் முதலில் பிட்காயின் உருவாக்கப்பட்டதே ஈமெயில் அனுப்புவது போல் பணத்தை இண்டர்நெட் வாயிலாக அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் உருவாக்கப்பட்டது, ஆனால் இதில் பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
3 சிறப்புகள்
தற்போதைய நடைமுறையில் இருக்கும் கட்டமைப்பில் அதிகக் கட்டணமும், அதிகப்படியான செயல்பாடுகளும் உள்ளது, இதை உடைக்கும் வகையில் உருவானது தான் பிட்காயின். பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் உருவாக்கப்பட்டும் blockchain, decentralisation மற்றும் cryptography அடிப்படையில் தான் டிஜிட்டல் ரூபாயும் உருவாக்கப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் ரூபாய்
டிஜிட்டல் ரூபாய் பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு பரிமாற்றத்தையும் digital ledger சேமிக்கப்பட்டு வங்கிகள், ஆர்பிஐ மத்தியில் பகிரப்படும். இதை யாராலும் அழிக்க முடியாது, அதேபோல் யாரும் ஹேக் செய்ய முடியாது. இதேபோல் கிரிப்டோகரன்சி Decentralisation என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் டிஜிட்டல் ரூபாய் ஆர்பிஐ ஒற்றைத் தலைமையுடன் நிர்வாகம் செய்யும்.
Cryptography முக்கியம்
இதில் Cryptography என்பது மிகவும் முக்கியமான பணியைச் செய்கிறது, இந்தத் தொழில்நுட்பத்தில் எதுவும் பரிமாற்றம் செய்யப்படமாட்டாது, ஆனால் Cryptography மூலம் உங்கள் கணக்கில் ஒவ்வொரு பணப் பரிமாற்றம் மூலம் திருத்தம் செய்யப்படும்.
டிஜிட்டல் ரூபாய் பயன்கள்
டிஜிட்டல் ரூபாய் மூலம் கள்ள நோட்டு, கருப்புப் பணம் போன்றவற்றை முழுமையாக நீக்க முடியும். இதேபோல் பணம் எங்கு, யாரிடம் இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட பணம் யாரிடம் இருந்து வந்தது என்பது போன்ற அனைத்து விஷயத்தையும் ஆர்பிஐ நொடியில் தெரிந்துகொள்ள முடியும்.
டிஜிட்டல் ரூபாய் மூலம் சேமிப்பு
இதேபோல் பணப் பரிமாற்றத்தில் இருக்கும் செலவுகள் முற்றிலுமாக நீக்கப்படும். குறிப்பாக ஆர்பிஐ - வங்கிகள், வங்கிகள் - வங்கிகள் மத்தியிலான பரிமாற்றத்தில் இருக்கும் பரிமாற்ற செலவுகள், கட்டமைப்புச் செலவுகள் போன்றவை முழுமையாகக் குறைக்க முடியும்.
அனைத்தையும் தாண்டி டிஜிட்டல் ரூபாய்க் கொண்டு உலகளாவிய பணப் பரிமாற்றத்தை நொடிப் பொழுதில் செய்ய முடியும்.
முக்கிய வித்தியாசம்
நாம் ஏற்கனவே பார்த்தது போல் கிரிப்டோகரன்சியும், டிஜிட்டல் ரூபாயும் கிட்டத்தட்ட ஒன்று தான், இரண்டுக்கும் உள்ள முக்கியமான மற்றும் பெரிய வித்தியாசம் டிஜிட்டல் ரூபாய் ஆர்பிஐ ஒற்றைத் தலைமையுடன் நிர்வாகம் செய்வது தான். மேலும் டிஜிட்டல் ரூபாயை எந்தத் தனிநபராலும் உருவாக்க முடியாது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications