ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யப்போறீங்களா? எப்படி டெவலப்பர்ஸ் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள்?

உங்களின் வழக்கமான வாழ்க்கைக்கு அப்பால், கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா..? புதிதாக ஒரு தொழிலை தொடங்க விரும்பினாலோ அல்லது முழுநேர தொழில்முனைவோராக மாற விரும்பினாலோ அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ரியல் எஸ்டேட் பிசினஸை தேர்வு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறுவது போல், தற்போது ரியல் எஸ்டேட் தொழிலிலும் பலர் நுழைந்துள்ளனர்.

ரியல் எஸ்டேட் தொழிலை இரண்டு விதமாக செய்யலாம். வீடு வாங்கிக் கொடுப்பது, விற்பனை செய்து தருவது, மார்க்கெட்டிங் செய்து தருவது போன்ற வேலைகளை கையில் எந்தப் பணமும் வைத்திருக்காமல் கூட செய்யலாம். இப்படி செய்வதாலும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். அதேபோல், ரியல் எஸ்டேட்டில் சிலர் பணத்தை முதலீடு செய்தும் சம்பாதிப்பார்கள். இவர்கள் கையில் ஒரு தொகையை வைத்துக் கொண்டு ஒரு இடத்தை வாங்குவார்கள். பின்னர், நல்ல விலைக்கு வந்ததும் அதை விற்பனை செய்து நிறைய பணம் சம்பாதிப்பார்கள் அல்லது புதிய வீட்டை கட்டி விற்பனை செய்வார்கள்.

ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யப்போறீங்களா? எப்படி டெவலப்பர்ஸ் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள்?

ரியல் எஸ்டேட் தொழில் என்றாலே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யக் கூடிய தொழில் ஆகும். சிலர் தங்களது மொத்த சேமிப்பையும் கொண்டு வந்து வீடு வாங்கவோ அல்லது நிலம் வாங்கவோ முடிவு செய்வார்கள். இதற்காக அணுகும்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் பொறுப்புடன் செயல்படுவது மிக அவசியமாகும். இதனை கையாள தெரியாதவர்கள் சிலர், சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் செய்யும் சில தவறுகளால், கனவுடன் வீடு அல்லது நிலம் வாங்க வருவோரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள். இதனால், அவர்களுக்கு இழப்பும் பெரியளவில் இருக்கும்.

இதனால், அனுபவம் வரும் வரை ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் நுட்பங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இடத்தின் அளவு, வீடு அல்லது நிலம் இருக்கும் திசைகள், வாஸ்துப்படி எப்படி வீடு வாங்கித் தருவது என்பது குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். ரியல் எஸ்டேட்டில் மலிவு விலையில் வீடு வழங்குவதோ அல்லது பிரீமியம் வீடுகளை கட்டுவதாக கூட இருக்கலாம். ஆனால், இதை சொந்தமாக தொடங்க நினைத்தாலும் சரி அல்லது நிறுவனங்களுடன் உதவியுடன் செய்தாலும் சரி சில மூலதனத்தை செய்ய முடிந்தால் நீங்களும் ரியல் எஸ்டேட் டெவலப்பர் ஆகலாம்.

முக்கியமாக வாடிக்கையாளரின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் நீங்கள் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும். இது அவர்களை நிலம் அல்லது வீடு வாங்க ஊக்குவிக்கும். அப்போது தான், உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரும். மற்ற தொழில்களைப் போல் அல்லாமல், ரியல் எஸ்டேட் தொழிலில் சிறிது காலத்திற்குள்ளேயே அதிக பணம் சம்பாதிக்க முடியும். சொத்துக்களை வாங்கும் போதும், விற்கும் போதும் சட்டப்பூர்வ நடைமுறைகளை கட்டாயம் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல், வாடிக்கையாளர்களுக்கும் நீங்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். சொத்து தொடர்பான ஆவணங்கள், விற்பனையாளரின் அடையாளம், வில்லங்கம், வரி செலுத்தும் முறை, ஆக்கிரமிப்புச் சான்றிதழ், கட்டுமான ஒப்புதல்கள் ஆகியவை வீடு வாங்குபவர் வீடு வாங்குவதற்கு முன் செய்ய வேண்டிய சில முறைகள் ஆகும்.

ரியல் எஸ்டேட் டெவலப்பர்களை பொறுத்தவரை நிறைய வழிகளில் பணம் சம்பாதிக்கலாம். முதலில் நிலம் வாங்கி, அதில் பிளான் அனுமதி, சாலை, குடிநீர் வசதிகள், மின்சாரம் மற்றும் நிலத்தை தயார் செய்து வீடு கட்டமால், பிளாட்டாகவே விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். அதேபோல், நிலத்தில் அபார்ட்மெண்ட், வீடுகள் அல்லது வணிக வளாகங்களை கட்டி, விற்பனைக்கு முன்பே புக்கிங் அட்வான்ஸ், ப்ரீ-லாஞ்ச் விலை, கட்டுமான செலவுகளை வசூலித்து பணம் சம்பாதிக்கலாம். மேலும், கட்டிய பிறகு அதை விற்பனை செய்வது அல்லது வாடகைக்கு விடுவது போன்றவைகளால் பணம் ஈட்டலாம்.

மேலும், குறிப்பிட்ட சொத்துக்களை வாடகைக்கு விடுவதால், அதிலிருந்து நிலையான வருமானம் மாதந்தோறும் பெறலாம். ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் விற்பனை, வாடகை, முதலீடு, முன்பணம் வசூல், கூட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். திட்டம் பெரிதாக இருந்தாலும் லாபம் அதிகம் கிடைக்கும். ஆனால், இதில் பல ஆபத்துகளும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+