உலகிலேயே மிகப்பெரிய சாலை இணைப்புகளை கொண்ட ஒரு நாடு இந்தியா. பெருநகரங்களில் தொடங்கி குக் கிராமங்கள் வரை சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இந்தியாவின் சரக்கு போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்து என அனைத்திற்கும் மிக முக்கிய காரணியாக இருப்பது நமது சாலை கட்டமைப்புகள் தான். பொதுவாகவே நமது நெடுஞ்சாலைகளை பார்த்தோம் என்றால் அதற்கு NH 44, NH 14 என எண்களை கொண்டே பெயரிடப்பட்டிருக்கும். தேசிய நெடுஞ்சாலைகள் ஏன் எண்களை கொண்டு குறிப்பிடப்படுகின்றன என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு எண்களை ஒதுக்குவதில் ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது. அனைத்து முக்கியமான நெடுஞ்சாலைகளுக்கும் ஓரிலக்க அல்லது இரண்டு இலக்க எண்கள் பயன்படுத்தப்படுவதை நாம் காணலாம். நாட்டின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதி வரை இருக்கக்கூடிய நெடுஞ்சாலைகளுக்கு இரட்டை படை எண்கள் சூட்டப்படுகின்றன. நீங்கள் கிழக்கிலிருந்து மேற்கு பகுதிக்கு செல்லும் போது இந்த எண்களானது அதிகரிக்கும். கிழக்கில் இருந்து மேற்கே செல்ல கூடிய நெடுஞ்சாலைகள் ஒற்றை படை எண்களை கொண்டிருக்கும்.

உதாரணமாக தேசிய நெடுஞ்சாலை NH 2 வடகிழக்கு மாநிலங்களில் இருக்கிறது, அதுவே NH 68 என்பது ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் வடக்கு பகுதியில் அமைந்திருந்த தேசிய நெடுஞ்சாலை NH8 என அழைக்கப்படுகிறது, அதே தமிழ்நாட்டின் தெற்கு பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை NH 87 என அழைக்கப்படுகிறது.
மேற்கு நோக்கி நகர்ந்து வடக்கிலிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலைகளுக்கான எண் மதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வரும். உதாரணமாக NH 4 ஒரு கிழக்கு மாநிலத்தை அதன் வடக்கு தெற்கு பயணத்தில் இருக்கிறது என்றால் மேற்கு மாநிலத்தின் அதன் எதிர்ப்பகுதி கண்டிப்பாக எண் நான்கிற்கு மேல் உள்ள எண்ணை கொண்டு பெயரிடப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு என கிளை நெடுஞ்சாலைகள் கூட உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளின் சிக்கலான சாலை அமைப்புகளை இணைக்க உதவுபவை தான் கிளை நெடுஞ்சாலைகள். இந்த கிளை நெடுஞ்சாலைகளுக்கு 344 என மூன்று இலக்க எண்களில் பெயரிடப்படுகின்றன. NH 244, 144 என்ற கிளை நெடுஞ்சாலைகள் முக்கிய நெடுஞ்சாலை ஆன NH 44இன் கிளைகளாகும் .
இந்த துணை நெடுஞ்சாலை எண்களில் உள்ள முதல் இலக்கம் அவற்றின் திசைநோக்கு நிலையை காட்டுகிறது. ஒற்றைப்படை தொடக்க இலக்கங்கள் கிழக்கு மேற்கு பாதைகளையும் ,இரட்டை இலக்கங்கள் வடக்கு தெற்கு பாதைகளையும் குறிக்கின்றன இந்த அடையாளங்களை கொண்டு நாம் பயணிக்கு நெடுஞ்சாலையின் பாதையை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications