ரிசர்வ் வங்கி சமீபத்தில் இந்தியாவில் அதிக மதிப்புடைய கரன்சியான 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதன் மூலம் 2000 ரூபாய் நோட்டுக்களை ரொக்கமாக வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அதைத் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தோ அல்லது வங்கியில் பிற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து புழக்கத்தில் 4 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வர உள்ளது. மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய்க்கு நோட்டுக்கு மாற்றாக பிற நாணயங்களை பெற்றாலும், கணிசமான தொகை வங்கியில் டெபாசிட் ஆகவும் வந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை நாட்டின் பல வங்கிகளில் நிதி இருப்பை அதிகரிக்கும், பொதுவாக வங்கி வர்த்தகத்தை தாண்டி கூடுதலாக டெபாசிட் தொகை வரும் போது சில முக்கியமான மாற்றங்கள் நடக்கும். இதில் முக்கியமான ஒன்று வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வது.
பொதுவாக வங்கிகள் தனது கடன் வர்த்தகத்திற்காக கூடுதல் நிதி தேவை ஏற்படும்போது, எளிதாக நிதி திரட்டும் ஒரு வழி டெபாசிட், வங்கி வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை சிறிய அளவில் உயர்த்தினால் கூட பல ஆயிரம் கோடி நிதியை வங்கிகளால் சில நாட்களில் திரட்டி விட முடியும்.
வங்கி வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை உயர்த்தும் போது சாமானிய மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவது மூலம் வங்கிகளிடம் போதுமான நிதிஆதாரம் டெபாசிட் மூலம் பெற்றுள்ளதன் வாயிலாக வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் இல்லை. இதன் மூலம் வங்கிகளும் அதிகப்படியான கடனை கொடுத்து கூடுதல் வருமானத்தையும் பெற முடியும்.

சொல்லப்போனால் இந்த மாதம் ஆர்பிஐ தனது இரு மாத நாணய கொள்கையை நடத்த உள்ளது, இதில் ரெப்போ விகித்தை உயர்த்தினால் கூட வங்கிகள் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. காரணம் 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் ஆக மாறியுள்ளது தான். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்ட 6-8 ஜூன் 2023 தேதிகளில் நடக்கிறது.
இதைவிட முக்கியமாக சில வங்கிகள் தங்களிடம் அடுத்த 6 மாதத்திற்கு தேவையான நிதியை டெபாசிட் வாயிலாக பெற்றால், தற்காலிகமாக வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என Transcend Consultants தலைவர் கார்டிக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications