Google Pay இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமென்ட் தளங்களில் ஒன்று, இந்திய அரசு உருவாக்கிய UPI தளத்தைப் பயன்படுத்தி மொபைல் வாயிலாகப் பணம் செலுத்தலும், பணத்தைப் பெறவும், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பணத்தைப் பேமெண்ட் செய்யவும், பல்வேறு சேவைகளுக்கு பில் செலுத்தவும் இன்ன பிர சேவைகளையும் அளித்து வருகிறது.
மக்களின் தினசரி வாழ்க்கையில் ஒன்றாக மாறியிருக்கும் கூகுள் பே தளத்தின் பெரும்பாலான சேவைகளுக்கு எவ்விதமான கட்டணமும் செலுத்துவது கிடையாது. பின்பு எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

Google Pay தளத்தில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது யூபிஐ பேமெண்ட் தான், இதற்கு ரிசர்வ் வங்கி எவ்விதமான கட்டணத்தையும் விதிப்பதில்லை, இதேபோல் விதிக்கவும் கூடாது என உத்தரவிட்டு உள்ளது. ஆர்பிஐ டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு, ஏடிஎம் பயன்பாடு, ஏன் கடன் வாங்கினால் கூடப் பிராசசிங் சார்ஜ் வசூலிக்க அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அனுமதிக்கிறது.
ஆனால் யூபிஐ பேமெண்ட்-க்குக் கட்டணத்தை விதிக்காத காரணம் இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றத்தைப் பெருநகரங்கள் முதல் சிறு கிராமம் வரையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் ஆர்பிஐ தொடர்ந்து இலவசமாகவே வைத்துள்ளது. இப்படியிருக்கையில் கூகுள் பே எப்படி வருமானத்தை ஈட்டுகிறது..?
மொபைல் ரீசார்ஜ் கமிஷன் : கூகுள் பே-ஐ பயன்படுத்தி மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது, Google Pay-க்கு மொபைல் ஆப்ரேட்டர்களிடமிருந்து ஒரு சிறிய கமிஷன் கிடைக்கும். இந்தக் கமிஷன் பொதுவாக ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகையில் 2-3% ஆகும்.
பில் செலுத்துவதில் கமிஷன் : கூகுள் பே-ஐ பயன்படுத்திப் பில்களைச் செலுத்தும்போது, Google Pay-க்குப் பில் வழங்குநர்களிடமிருந்து ஒரு சிறிய கமிஷன் கிடைக்கும். இந்தக் கமிஷன் பொதுவாகச் செலுத்தப்பட்ட தொகையில் 1-2% ஆகும். உதாரணமாகக் கரன்ட் பில், பிரான்ட்பேன்ட் பில், பிற பில்களுக்கான கட்டணம் செலுத்தும் போது வருமானம் கிடைக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங் கமிஷன் : Google Pay-ஐ பயன்படுத்தி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, கூகுள் பே-க்கு ஆன்லைன் ரிட்டெய்லர்களிடமிருந்து ஒரு சிறிய கமிஷன் கிடைக்கும். இந்தக் கமிஷன் பொதுவாக வாங்கிய பொருட்களின் மதிப்பில் 2-5% ஆகும்.
பிற சேவைகள் : Google Pay-ஐ பயன்படுத்திப் பணம் அனுப்புதல், திரைப்பட டிக்கெட்டுகளைப் பதிவு செய்தல், ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்தல் போன்ற சேவைகளுக்காகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
விளம்பரங்கள் : கூகுள் பே-ல் தோன்றும் விளம்பரங்களிலிருந்தும் Google Pay வருவாய் ஈட்டுகிறது. இந்த விளம்பரங்கள் பொதுவாகப் பயனரின் தேடல் வரலாறு மற்றும் பயனர் நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் காட்டப்படும். இதேபோல் சில நிறுவனங்கள் உடன் கூட்டணி வைத்து செயல்பாட்டுக்கு ஏற்ப வருமானத்தைப் பெறுகிறது.
மொத்தத்தில், கூகுள் பே பல வழிகளில் பணம் சம்பாதிக்கிறது. இந்த முறைகள் அனைத்தும் கூகுள் பே-ஐ இந்தியாவில் மிகவும் லாபகரமான நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இது கூகுளின் மொத்த எகோசிஸ்டத்தை மேம்படுத்தித் தனது விளம்பர வருவாய் கட்டமைப்பை வலிமைப்படுத்துகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications