ராணி எலிசபெத்-க்கு கிடைத்த 'அந்த' சலுகை புதிய மன்னர் சார்லஸ்-க்கும் கிடைக்குமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன் ராணியான இரண்டாம் எலிசபெத் 2ஆம் உலகப் போர் முடிந்த பின்பு முக்கியமான காலகட்டத்தில் வெறும் 21 வயதில் பல ஆசைகளை விடுத்து பிரிட்டன் நாட்டின் ராணியாக அரியணை ஏறினார்.

ராணி எலிசபெத் கடந்த சில நாட்களாகவே மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த எலிசபெத் தனது 96 வயதில் காலமானார். ராணி எலிசபெத் மறைவிற்குப் பில் கேட்ஸ், ஜெப் பெசோஸ் முதல் மோடி வரையில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சரி ராணி எலிசபெத் தலைமையிலான பிரிட்டன் அரசு குடும்பம் எப்படி வருமானம் ஈட்டுகிறது தெரியுமா..?

சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..! சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..!

ராணி 2ஆம் எலிசபெத்

ராணி 2ஆம் எலிசபெத்

ராணி 2ஆம் எலிசபெத் தலைமையிலான பிரிட்டன் அரசு குடும்பம் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களையும், பொருட்களையும் வைத்திருந்தாலும், இக்குடும்பத்தின் பெரும் பகுதி வருமானம் பிரிட்டன் அரசை நம்பி தான் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..?

 பிரிட்டன் அரசு குடும்பம்

பிரிட்டன் அரசு குடும்பம்

பிரிட்டன் அரசில் இக்குடும்பத்தின் ஆதிக்கம் என்னவோ மிகவும் குறைவு என்றாலும், அரசு ஒவ்வொரு வருடமும் பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை அளித்து வருகிறது எத்தனை பேருக்கு தெரியும்.

பிரிட்டன் மக்களின் வரிப் பணம்

பிரிட்டன் மக்களின் வரிப் பணம்

பிரிட்டன் மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஒரு பகுதியைப் பிரிட்டன் அரசு Sovereign Grant ஆகப் பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு அளித்து வருகிறது. இந்தத் தொகையை வருடாந்திர அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

ஜார்ஜ் III மன்னர்

ஜார்ஜ் III மன்னர்

ஜார்ஜ் III மன்னர் தனக்காகவும், அரச குடும்பத்தின் எதிர்காலச் சந்ததியினருக்காகவும் நிலையான வருடாந்திர கொடுப்பனவைப் பெறுவதற்காகப் நாடாளுமன்றத்தில் இருந்து தனது வருமானத்தை வருடாந்திர அடிப்படையில் அரசு குடும்பத்திற்கு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

86 மில்லயன் பவுண்ட்

86 மில்லயன் பவுண்ட்

இந்த ஒப்பந்தம் முதலில் Civil List என அழைக்கப்பட்டு வந்தது, 2012ல் இதை Sovereign Grant ஆகப் பிரிட்டன் அரசு மாற்றியது. இப்படிப் பிரிட்டன் அரசு குடும்பம் 2021- 2022 காலக்கடத்தில் பிரிட்டன் அரசிடம் இருந்து சுமார் 86 மில்லயன் பவுண்ட் பெற்றது.

பக்கிங்ஹாம் அரண்மனை

பக்கிங்ஹாம் அரண்மனை

இந்தத் தொகையில் பெரும் பகுதி அரசு குடும்பத்தின் அரசு முறை பயணம், சொத்துப் பராமரிப்பு மற்றும் ராணியின் குடும்ப வீடான பக்கிங்ஹாம் அரண்மனையின் இயக்க அல்லது பராமரிப்புச் செலவுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த 86 மில்லயன் பவுண்ட் தொகையில் ராணியின் சம்பளம் மட்டும் இல்லை.

இளவரசர் சார்லஸ்

இளவரசர் சார்லஸ்

பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரிட்டன் தேசிய கீதம் 1952க்குப் பின் மாற்றம் செய்யப்படவுள்ளது. பிரிட்டனின் தேசிய கீதம் இனி "காட் சேவ் தி கிங்" என மாற்றம் செய்யப்படுகிறது. 1952 முதல் பெண் பதிப்புக்கான தேசிய கீதம் பாடப்படாததால், இந்த மாற்றாம் இளைய தலைமுறையினரைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ்

இதேபோல் பிரிட்டன் மன்னராகச் சார்லஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில் பிரிட்டன் மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஒரு பகுதியை பிரிட்டன் அரசு Sovereign Grant ஆக வருடாந்திர அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது தொடரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How does the Queen get paid? does Sovereign Grant continue for king charles

How does the Queen get paid? does Sovereign Grant continue for king charles. This grant amount was set to just over 86 million pounds in 2021 and 2022.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X