திருப்பூர்: இந்தியாவின் டெக்ஸ்டைல் ஹப் ஆக இருக்கும் திருப்பூர் கடந்த சில மாதங்களாக பெரும் சவால்களை சந்தித்து வந்தது. இந்திய அரசின் பங்களாதேஷ் நாட்டுடன் செய்து கொண்ட ப்ரீ டிரேட் வர்த்தக ஒப்பந்தத்தால், இறக்குமதி வரி இல்லாமல் குறைந்த விலையில் துணி வகைகள் இறக்குமதி செய்யப்பட்டதால், திருப்பூர் டெக்ஸ்டைல் தொழில் பாதிக்கப்பட்டது. ஆனால், தற்போது பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சனையால் திருப்பூர் டெக்ஸ்டைல் தொழிலுக்கு புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மை தன்மை என்னவென்று தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சனை இந்தியாவுக்கும், திருப்பூர்-க்கும் இருவேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருபுறம் திருப்பூர் டெக்ஸ்டைல் தொழில் துறைக்கு புதிய வர்த்தகம், அதிக வளர்ச்சியை கிடைக்கும் இதேவேளையில் உற்பத்தி செலவு அதிகரித்து லாப அளவீடுகள் குறைய வாய்ப்பு உள்ளது.

மறுபுறம் குறைந்த கூலியில் அதிகப்படியான டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் கிடைக்கும் காரணத்தால் பங்களாதேஷ் நாட்டில் தொழிற்சாலை அமைத்த இந்தியர்கள் இந்த உள்நாட்டு பிரச்சனையால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
இதேவேளையில் இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு பருத்தி, பருத்தி நூல் மற்றும் துணி ஆகியவை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் பாதிக்கும். இந்தியாவின் மொத்த டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் 17 சதவீதம் அளவுக்கு பங்களாதேஷ் நாட்டிற்கு செய்யப்படுகின்றன. இதனால் பங்களாதேஷ் உள்நாட்டு பிரச்சனையால் இந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
வங்கதேசத்தில் உள்ள டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளில் சுமார் 25 சதவிகிதம் இந்தியர்களுக்கு சொந்தமானவை என்பது தான் நிதர்சனமான உண்மை. பங்களாதேஷ் உள்நாட்டு பிரச்சனையால் இந்த தொழிற்சாலைகள் இந்தியாவுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷ் உள்நாட்டு பிரச்சனையால், இந்தியாவின் டெக்ஸ்டைல் ஏற்றுமதி 10 முதல் 11 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் மாதத்திற்கு 300 முதல் 400 மில்லியன் டாலர் வரை கிட்டத்தட்ட 3400 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் வருவாய் கிடைக்கும். குறிப்பாக திருப்பூர் டெக்ஸ்டைல் துறைக்கு இது பெரும் வாய்ப்பாக அமையும். இந்தியாவின் மொத்த துணி ஏற்றுமதியில் திருப்பூர் 50 சதவிகிதம் பங்களிக்கிறது. எனவே, பங்களாதேஷ் இழப்பு திருப்பூர்-க்கு லாபகரமானதாக அமைகிறது. இதேபோல் உலகளவில் நிலவும் தேவையை பூர்த்தி செய்ய திருப்பூர்-க்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
சீனா மற்றும் பங்களாதேஷ் நாட்டில் இருந்து கடுமையான போட்டியை சந்தித்து வந்த திருப்பூர்-க்கு இந்தியாவின் FTA ஒப்பந்தத்தால் பெரும் பாதிப்பை கொடுத்தது. இதனால், பங்களாதேஷ் நாட்டில் இருந்து knitted fabrics மற்றும் knitwear garments இறக்குமதி கிட்டத்தட்ட 60 சதவிகிதம் அதிகரித்தது. இதன் வாயிலாக திருப்பூர் 60 சதவிகிதம் உள்நாட்டு வர்த்தகத்தை இழந்தது.
ஆனால், வங்கதேச நெருக்கடி திருப்பூருக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளால் கூடுதலாக மாதத்திற்கு 300 முதல் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இந்தியா - பங்களாதேஷ் மத்தியிலான டெக்ஸ்டைல் ஏற்றுமதி, பங்களாதேஷ் நாட்டில் இயங்கி வரும் இந்தியர்களின் நிறுவனம் அனைத்தும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது என்பதே நிதர்சனம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications