பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி: எவ்வளவு மழை பெய்தாலும் இங்க மட்டும் தண்ணீர் தேங்காது.. கெத்து..!

பெங்களூரு: பெங்களூருவில் இரு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து சாலைகள் எங்கும் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறுகிய தொலைவைக் கடக்க கூட நீண்ட மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு ஏராளமானவர்கள் நடந்தே சென்றதை சமூக வலைதளங்களில் நாம் காண முடிந்தது.

குண்டும் குழியுமாக இருக்கும் மற்றும் சேதமடைந்த சாலைகளையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தனர். ஆனால் பெங்களூருவில் இந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சாலைகள் குண்டும் குழியும் ஏதும் இல்லாமல் சீராக காணப்படுகிறது.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி: எவ்வளவு மழை பெய்தாலும் இங்க மட்டும் தண்ணீர் தேங்காது.. கெத்து..!

அதற்கு முக்கிய காரணம் நவீன தொழில்நுட்பமாகும். பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மட்டும் சாலைகளில் நாம் எந்தவித சேதத்தையும் காண முடியாது. இதற்கு முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதால் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சாலைகள் எப்போதும் புதிதாக போடப்பட்டது போலவே இருக்கின்றன.

Elcita எனப்படும் எலக்ட்ரானிக் சிட்டி இண்டஸ்ட்ரியல் டவுன்சிப் அதாரிட்டி-யின் தொழில்நுட்ப ரீதியான ஒரு முயற்சி தான் பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள சாலைகளை பராமரிக்க உதவி இருக்கிறது. 2002 ஆம் ஆண்டு எல்என்டி நிறுவனம் சார்பாக தான் இந்த பகுதியில் சாலைகள் போடப்பட்டன.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி: எவ்வளவு மழை பெய்தாலும் இங்க மட்டும் தண்ணீர் தேங்காது.. கெத்து..!

எலக்ட்ரானிக் சிட்டி இண்டஸ்ட்ரியல் டவுன்சிப் அதாரிட்டி மிகத் திறமையான முறையில் இந்த சாலைகளை பராமரித்து வருகிறது. சாலை பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களை ஒரு கூட்டாளிகளாக எடுத்துக்கொண்டு அவர்களோடு இணைந்து உயர்தரமான சாலைகள் போடப்படுவது உறுதி செய்யப்படுகிறது. அறிவியல் பூர்வமான முறையில் இந்த பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக சாலைகளில் தண்ணீர் தேங்கும்போதுதான் அங்கே குண்டு, குழி ஏற்படுகின்றன. ஆனால் சிறப்பான வடிகால் வசதி இருப்பதால் இந்த பகுதியில் மழைநீர் தேங்குவது கிடையாது.

இந்த வலுவான வடிகால் அமைப்புகள் மற்றும் 75 இடங்களில் மழை நீரை சேகரிக்க கூடிய தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே எவ்வளவு மழை பெய்தாலும் இந்த சாலைகளில் தண்ணீர் தேங்குவது கிடையாது. இது சாலைகளை சேதமடையாமல் பராமரிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி: எவ்வளவு மழை பெய்தாலும் இங்க மட்டும் தண்ணீர் தேங்காது.. கெத்து..!

அது மட்டும் இன்றி ரோட் மெட்ரிக்ஸ் எனப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியினை பயன்படுத்தி நாள்தோறும் இந்த பகுதியிலுள்ள சாலைகள் கண்காணிக்கப்படுகின்றன. அதாவது இந்த செயற்கை நுண்ணறிவு கருவியானது ஒவ்வொரு சாலையையும் ஸ்கேன் செய்து ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறதா மாற்றங்கள் செய்ய வேண்டுமா பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமா என்ற தகவல்களை வழங்கி விடும்.

உடனடியாக அந்த சாலைகளில் சீரமைப்பு பணி நடத்தப்பட்டு விடும்.
இதற்காகவே ஒரு தனிக் குழுவை எலக்ட்ரானிக் சிட்டி இண்டஸ்ட்ரியல் டவுன்சிப் அதாரிட்டி நியமனம் செய்துள்ளது.எனவே தொடர்ச்சியான கண்காணிப்பும் பராமரிப்பும் இந்த பகுதி சாலைகளை பாதுகாக்க உதவுகிறது. இதனை நகரம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி: எவ்வளவு மழை பெய்தாலும் இங்க மட்டும் தண்ணீர் தேங்காது.. கெத்து..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+