டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் சேவையின் குழுத் தலைவராக தமிழகத்தினை சேர்ந்த அசோக் எல்லுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக திகந்து வரும் டெஸ்லா, எலக்ட்ரில் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஆட்டோபைலட் சேவையின் குழுத் தலைவராகத் தான் அசோக் எல்லுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்படியொரு சந்தோஷமான அறிவிப்புக்கு மத்தியில், டெஸ்லா நிறுவனம் 2021ல் 9,36,172 வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2020ஐ காட்டிலும் 87% அதிகமாகும். இது 2020ல் வெறும் 4,99,550 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
4வது காலாண்டில் சாதனை
டெஸ்லா நிறுவனம் கடந்த நான்காவது காலாண்டில் மட்டுமே 3,08,000 வாகனங்களை டெலிவரி செய்துள்ளது. இது கொரோனா, ஓமிக்ரான் அச்சம், மூலதன பொருட்கள் பற்றாக்குறை என பல்வேறு சவால்களுக்கும் மத்தியிலும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டெலிவரியில் எஸ் மாடல் மற்றும் ஓய் ரக மாடல் கார்கள் பெரும் அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதிரடி திட்டம்
இதில் ஏற்றுமதியிலும் மாடல் 3 மற்றும் Y மாடல்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் டெஸ்லா ஆண்டுக்கு ஆண்டு விற்பனையை 50% அதிகரிப்பதை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே டெஸ்லா வாகனங்கள் சர்வதேச சந்தையை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. இது மேற்கொண்டு இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவாலான நிலை
சர்வதேச அளவில் நிலவி வரும் சிப் பற்றாக்குறைக்கு மத்தியில், சர்வதேச அளவில் கடும் போட்டியும் நிலவி வருகின்றது. இதற்கிடையிலும் டெஸ்லா அதன் விற்பனையை இருமடங்கு அதிகரித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பெரும்பாலான மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்கள் மூலதன பொருட்கள் பற்றாக்குறை காரணமாக உற்பத்தியினை குறைத்தனர். ஆனால் அப்படி சவாலான நிலையில் கூட டெஸ்லா வெற்றிக் கொடியினை நாட்டியுள்ளது.
டெஸ்லாவின் வளர்ச்சி
குறிப்பாக சீனா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் பெரும் வளர்ச்சியினை எட்டியுள்ளது. இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் கைகொடுத்துள்ளது. இதன் காரணமாக லாபம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதன் பங்கு விலையும் அதிகரித்துள்ளது. இது டெஸ்லாவின் விரைவான விரிவாக்கத்திற்கும் பெரும் உதவிகரமாகவும் அமைந்துள்ளது.
ட்விட்டரை தொடர்ந்து டெஸ்லா
இப்படியொரு நல்ல விஷயங்களுக்கு மத்தியில் தான் டெஸ்லா நிறுவனம், ட்விட்டரை தொடர்ந்து ஒரு இந்தியரை தலைமை பொறுப்பினை கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது டெஸ்லா.. இவர் தான் டெஸ்லாவின் ஆட்டோபைலட் சேவையின் குழுத் தலைவராகத் நியமிக்கப்பட்டுள்ள அசோக் எல்லுசாமி, கடந்த 2015ம் ஆண்டில் இந்த ரோலுக்கு விண்ணப்பிக்க ட்விட்டரில் எலான் மஸ்க் கூறியிருந்த போது விண்ணப்பித்து இணைந்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.
ட்விட்டர் மூலம் தேர்தெடுக்கப்பட்டார்
இது குறித்து டெஸ்லா நான் ஒரு ஆட்டோ பைலட் குழுவை தொடங்க உள்ளதாக ட்வீட் செய்தேன். அந்த ட்வீட் மூலம் ஆட்டோ பைலட் குழுவில் அசோக் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று மஸ்க் பெருமையுடன் கூறியுள்ளார். டெஸ்லாவில் இணைவதற்கு முன்பு wABCOவில் அசோக் வாகன கட்டுப்பாடு அமைப்பில் பணிபுரிந்தார். மேலும் வோக்ஸ்வாகன் எல்க்ட்ரானிக் ரிசர்ச் லேப்பில் பயிற்சியும் பெற்றுள்ளார்.
திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம்
சென்னையில் படித்த அசோக், கல்லூரியில் படிக்கும்போதே சிறந்த மாணவராக திகழ்ந்தவர். பலதரப்பு திறனை வளர்த்துக் கொள்வதிலும் பெரும் ஆர்வம் காட்டியுள்ளார். இன்று அந்த ஆர்வமும், திறனும் இன்றும் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது எனலாம்.
ஆட்டோபைலட் என்றால் என்ன?
ஆட்டோபைலட் என்பது சென்சார் வாயிலாக எதிர்வரும் தடைகளை கண்டறிந்து தானாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகனத்தின் பிரேக், ஆக்ஸலரேட்டர் ஆகியவற்றி கன்ட்ரோல் செய்து வாகனம் செல்ல வேண்டிய பாதையில் பாதுகாப்பாக செல்ல உதவும் ஒரு உயர்தர தொழில் நுட்பமாகும்.
இன்றைய காலகட்டத்தில் ஆட்டோமொபைல் துறையின் அதிநவீன தொழில்நுட்பமாக விளங்குகிறது இந்த ஆட்டோபைலட். டெஸ்லா நிறுவனம் இத்தொழில்நுட்பத்துல் புகுந்து விளையாடும் நேரத்தில் சக போட்டி நிறுவனங்கள் இன்னும் ஆரம்பக்கட்டத்தை கூட அடையவில்லை. இது வாகன ஓட்டிகளுக்கு மிக பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications