டிவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் மீண்டும் ஒப்புக்கொண்ட நிலையில், டிவிட்டர் மஸ்க்-கிற்கு எதிராகத் தொடுத்த வழக்கு விசாரணையில் வியாழக்கிழமை கால அவகாசம் கேட்டுள்ளார்.
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை ஏற்கனவே அறிவித்த 44 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்க தயார் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அதற்கான பணத்தைத் திரட்ட அக்டோபர் 28 வரையில் கால அவகாசம் கேட்டுள்ளார். இதற்கு டிவிட்டர் தரப்பில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் அனைவரின் முக்கியமான கேள்வி என்னவென்றால் எலான் மஸ்க் எப்படி இந்த 44 பில்லியன் டாலர் தொகையைத் திரட்ட போகிறார் என்பது தான்.
54.20 டாலர் விலை
எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த போதே ஒரு பங்கை 54.20 டாலர் விலைக்கு வாங்கத் தாயார் என்றும் ஆனால் அதைக் கடன் உத்தரவாதங்கள் உடன் தான் அளிக்க முடியும் எனக் கண்டிஷன் போட்டு இருந்தார். இதற்கு டிவிட்டர் நிர்வாகமும் ஒப்புதல் அளித்து.
46.5 பில்லியன் டாலர் தேவை
அப்படிப் பார்த்தால் எலான் மஸ்க் மீண்டும் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த பின்னர், சுமார் 46.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் தேவை. இதில் 44 பில்லியன் டாலர் என்பது டிவிட்டர் நிறுவனத்திற்கானது, மீதம் ஒப்பந்தத்தை முடிப்பதற்கான செலவு.
கால அவகாசம்
இந்த 46.5 பில்லியன் டாலர் பணத்தைத் திரட்டவே தற்போது எலான் மஸ்க் அக்டோபர் 28 வரையில் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரினார்.
வங்கி கடன்
தற்போது மோர்கன் ஸ்டான்லி, பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் சில வங்கிகள் இணைந்து 13 பில்லியன் டாலர் வரையில் கடனை அளிக்க உள்ளது. மீதமுள்ள 33.5 பில்லியன் டாலர் தொகைக்கு ஏற்கனவே 4 பில்லியன் டாலர் மதிப்பிலான 9.6 சதவீத டிவிட்டர் பங்குகளை எலான் மஸ்க் வைத்துள்ளார்.
சொந்த முயற்சிகள்
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் தனது சொந்த முயற்சியில் ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன், சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் போன்றோரிடம் சுமார் 7.1 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் திரட்டியுள்ளார். தற்போது மீதமுள்ள தொகை 22.4 பில்லியன் டாலர், இதை எப்படித் திரட்டப் போகிறார் என்பது தான் முக்கியமான ஆட்டமே உள்ளது.
22.4 பில்லியன் டாலர்
51 வயதான எலான் மஸ்க் 219 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சுமார் உலகின் பெரும் பணக்காரராக உள்ளார். எலான் மஸ் கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர், 2022ல் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தது மூலம் சுமார் 20 பில்லியன் டாலர் தொகையைத் திரட்டி பணமாக வைத்துள்ளார்.
2-3 பில்லியன் டாலர் மட்டுமே மீதம்
இப்போது மீதமுள்ள 2-3 பில்லியன் டாலர் மட்டுமே இதை டெஸ்லா பங்கு விற்பனை மூலமாகவோ அல்லது பங்குகளை அடைமானமாக வைத்து கடன் பெறவோ உள்ளார் எலான் மஸ்க். இதை எப்படிச் செய்யப்போகிறார், இந்த 46.5 பில்லியன் டாலர் தொகையை எவ்வளவு விரைவாக ஒன்று சேர்த்து டிவிட்டரை வாங்க உள்ளார் என்பதில் தான் தற்போது சவால் உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications