இந்தியாவில் செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. தங்களுடைய 40 வயதுகளில் இருப்பவர்கள் தான் பெரும்பாலும் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் 40 களில் இருப்பது இருப்பவர்கள் தங்களுடைய வேலையை தக்க வைத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் ,பணி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும் ,வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாந்தனு தேஸ்பாண்டே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

தங்களுடைய 40களில் இருக்கக்கூடிய தொழில் நிபுணர்கள் பல்வேறு சுமைகளை சுமக்க வேண்டி இருக்கிறது. குழந்தைகளுக்கான நிதி, தங்களை சார்ந்து இருக்கும் பெற்றோர் மற்றும் வீட்டிற்கான இஎம்ஐ உள்ளிட்ட பல்வேறு சுமைகளை சுமந்து இருக்கின்றனர். ஆனால் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை என வரும்போது முதலில் இவர்கள் மீது தான் கை வைக்கும். எனவே தங்களுடைய நாற்பதுகளில் இருக்கக்கூடிய நபர்கள் பணி நீக்க நடவடிக்கையில் இருந்து தற்போது குறிப்பிட்ட சிலவற்றை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
40களில் இருப்பவர்கள் திடீரென வேலை இழப்பது என்பது நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடுகிறார். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் குறித்து உங்களின் திறன்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும், அதிக பணத்தை சேமிக்க தொடங்க வேண்டும், தொழில் தொடங்குவதற்கான மனநிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும் என கூறி இருக்கிறார்.
அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் முன்கூட்டியே திட்டமிட்டு எதிர்கால தேவைகளுக்காக முதலீடு செய்திருப்பவர்கள் மற்றும் இரண்டாவதாக ஒரு வருமானத்தை ஏற்படுத்தி இருப்பவர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அதிலிருந்து சில காலம் நிதி ரீதியான சிக்கல்கள் இல்லாமல் தப்பிக்க முடியும் என அறிவுரை வழங்கியிருக்கிறார். 40களில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் தங்களுடைய குடும்பம் சார்ந்த சுமைகளே அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்வதில் பெரிய அளவில் கவனம் செலுத்த மாட்டார்கள் இதுதான் நிறுவனங்கள் அவர்களை பணிநீக்கம் செய்வதற்கு காரணமாகிவிடுகிறது என ஒரு பயனர் குறிப்பிட்டு இருக்கிறார்.
40களில் இருப்பவர்கள் கணிசமான பணி அனுபவம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு பெரிய அளவிலான சம்பளத்தை வழங்க வேண்டும். அவ்வாறு பெரிய அளவிலான சம்பளம் பெறுபவர்கள் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்யாமல் இருப்பதால் நிறுவனங்கள் முதலில் அவர்களின் வேலையில் தான் கை வைக்கின்றன. அவர்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஃபிரஷர்களாக இரண்டு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தலாம் என்ற எண்ணம் நிறுவனங்களுக்கு தோன்றுகிறது என ஒரு பயனர் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications