ஃபிக்ஸட் டெபாசிட்-ல் 1 கோடி சம்பாதிக்க எத்தனை வருடம் தேவை..? #SafeInvestmentIdea

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1 கோடி ரூபாய் என்பது சிலருக்குப் பெரிய விஷயமாக இல்லையென்றாலும் பல கோடி சாமானிய மக்களுக்கு 1 கோடி ரூபாய் என்பது வாழ்நாள் கனவு. 1 கோடி ரூபாய் என்ற கனவு தொகையை நீங்கள் பாதுகாப்பாகவும், எவ்விதமான ரிஸ்க் எடுக்காமலும் சம்பாதிக்க வேண்டும் என்றால் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..? எதில் முதலீடு செய்ய வேண்டும்..? எவ்வளவு வருடத்தில் நமக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும்..? ஆகிய கேள்விகளுக்கான பதிலைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்தோர், எதிர்காலத்தில் வலிமையான நிதி நிலையில் இருக்க வேண்டும் எனத் திட்டமிடுவோர், பென்ஷன் மற்றும் வியாபாரத்தில் கிடைத்த பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என நினைப்போர், பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாதோர் எனப் பல தரப்பினருக்கு இந்தக் கட்டுரை பயன்பெறும்.

கோடீஸ்வரனாகத் தயாரா..? வாங்கக் கட்டுரைக்குள் போகலாம்..!

1000 ஊழியர்கள் பணிநீக்கம்.. சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் முடிவால் ஊழியர்கள் பீதி..! 1000 ஊழியர்கள் பணிநீக்கம்.. சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் முடிவால் ஊழியர்கள் பீதி..!

முதலீடு

முதலீடு

தற்போது சந்தையில் பல முதலீட்டுத் திட்டங்கள் அதிகளவிலான லாபத்தையும், வருமானத்தையும் கொடுத்தாலும், அன்று முதல் இன்று வரையில் பாதுகாப்பான முதலீடு எனக் கருதப்படுவது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் தான். ஆபத்து மிகவும் குறைவு, அதேபோல் குறிப்பிட்ட லாபம் நிச்சயம் கிடைக்கும் என்பதால் சாமானியர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி வைப்பு நிதியில் எப்போதும் முதலீடு செய்து வைத்து வருகின்றனர்.

இது ஃபிக்ஸட் டெபாசிட் எதிர்காலத்தில் உதவவில்லை என்றாலும், ஆபத்துக் காலத்தில் நிச்சயம் உதவும். எனவே இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை வைத்துத் தான் 1 கோடி ரூபாய் சம்பாதிக்கும் வழிகளைப் பார்க்கப் போகிறோம்.

 

முதலீட்டு முறை

முதலீட்டு முறை

தற்போது வங்கி வைப்பு நிதியில் பல சலுகைகள் வந்துள்ள நிலையில், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் Lumpsum முறையிலும் முதலீடு செய்யலாம், அல்லது மாதாமாதம் முதலீடும் செய்யலாம்.

அந்த வகையில் முதலில் நாம் மொத்தமாக முதலீடு செய்வதன் மூலம், பல்வேறு வட்டி விகிதத்தில் எத்தனை வருடத்தில் நாம் 1 கோடி ரூபாயைப் பெறப்போகிறோம் என்பதைப் பார்க்கலாம். மேலும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் அவ்வப்போது ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றத்தால் வங்கி வைப்பு நிதியின் வட்டி விகிதம் மாறுபட்டு வரும் நிலையில் பல்வேறு வட்டி விகித மாற்றத்தால் ஏற்படும் மாற்றங்களையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

 

5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்

5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்

  • 6 சதவீத வட்டியில் - 51 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 8 சதவீத வட்டியில் - 39 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 10 சதவீத வட்டியில் - 31 வருடத்தில் 1 கோடி ரூபாய்
    கிடைக்கும்
  • 12 சதவீத வட்டியில் - 26 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 15 சதவீத வட்டியில் - 21 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்

10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்

  • 6 சதவீத வட்டியில் - 40 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 8 சதவீத வட்டியில் - 30 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 10 சதவீத வட்டியில் - 24 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 12 சதவீத வட்டியில் - 20 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 15 சதவீத வட்டியில் - 16 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்

20 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்

  • 6 சதவீத வட்டியில் - 28 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 8 சதவீத வட்டியில் - 21 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 10 சதவீத வட்டியில் - 17 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 12 சதவீத வட்டியில் - 14 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 15 சதவீத வட்டியில் - 12 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
30 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்

30 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்

  • 6 சதவீத வட்டியில் - 21 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 8 சதவீத வட்டியில் - 16 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 10 சதவீத வட்டியில் - 13 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 12 சதவீத வட்டியில் - 11 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 15 சதவீத வட்டியில் - 9 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்தால்

மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்தால்

  • 6 சதவீத வட்டியில் - 40 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 8 சதவீத வட்டியில் - 33 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 10 சதவீத வட்டியில் - 29 வருடத்தில் 1 கோடி ரூபாய்
    கிடைக்கும்
  • 12 சதவீத வட்டியில் - 25 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 15 சதவீத வட்டியில் - 22 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
மாதம் 10000 ரூபாய் முதலீடு செய்தால்

மாதம் 10000 ரூபாய் முதலீடு செய்தால்

  • 6 சதவீத வட்டியில் - 30 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 8 சதவீத வட்டியில் - 26 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 10 சதவீத வட்டியில் - 22 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 12 சதவீத வட்டியில் - 20 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 15 சதவீத வட்டியில் - 17 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
மாதம் 20,000 ரூபாய் முதலீடு செய்தால்

மாதம் 20,000 ரூபாய் முதலீடு செய்தால்

  • 6 சதவீத வட்டியில் - 21 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 8 சதவீத வட்டியில் - 18 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 10 சதவீத வட்டியில் - 16 வருடத்தில் 1 கோடி ரூபாய்
    கிடைக்கும்
  • 12 சதவீத வட்டியில் - 15 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 15 சதவீத வட்டியில் - 13 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
மாதம் 40,000 ரூபாய் முதலீடு செய்தால்

மாதம் 40,000 ரூபாய் முதலீடு செய்தால்

  • 6 சதவீத வட்டியில் - 14 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 8 சதவீத வட்டியில் - 12 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 10 சதவீத வட்டியில் - 11 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 12 சதவீத வட்டியில் - 10 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்
  • 15 சதவீத வட்டியில் - 9 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்

 

1 கோடி ரூபாய்

1 கோடி ரூபாய்

இன்றைய வாழ்க்கை முறைக்கு 1 கோடி ரூபாய்ப் போதுமானதாக இருக்கும் ஆனால் 20 வருடமோ 50 வருடத்திற்குப் பின் இந்த 1 கோடி ரூபாய் என்பது மிகவும் சிறிய தொகையாக இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் பணவீக்கம். ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் 20, 30 வருடத்திற்குப் பின் நம் கையில் இருக்கும் 1 கோடி ரூபாய் என்பது போதுமானதாக இருக்காது. ஆனால் இந்தப் பணம் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்பது உறுதி.

வரி

வரி

அவை அனைத்திற்கும் மேலாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு, அதன் பின்பு வரும் வட்டி வருமானத்திற்கு வரிச் செலுத்தியாக வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: investment fixed deposit
English summary

How fast will you become a crorepati by investing via Fixed deposit #SafeInvestmentIdea

How fast will you become a crorepati by investing via Fixed deposit #SafeInvestmentIdea
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X