தேவனஹள்ளி, கர்நாடகா: ஒரு இடத்தில் ஒரு தொழிற்சாலை அமைகின்ற போது அந்த தொழிற்சாலை சுற்றி பல்வேறு மேம்பாடுகள் நடைபெறும். மிகப்பெரிய தொழிற்சாலையாக அது அமைகிறது என்றால் அந்த பகுதியின் அடையாளமே மாறிவிடும். அதற்கு உதாரணமாக மாறி இருக்கிறது கர்நாடகா மாநிலத்தின் தேவனஹள்ளி பகுதி.
ஒரு பெரிய தொழிற்சாலை அமைந்தால் குறிப்பிட்ட பகுதியில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், தொழிற்சாலையில் வேலை செய்ய வருபவர்களுக்கு என குடியிருப்புகள், உணவகங்கள், போக்குவரத்து வசதிகள் என பல்வேறு துறைகளும் இதனால் வளர்ச்சி பெறும். எனவே தான் ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தியை பெருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஏனெனில் இவை வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமில்லாமல் அது சார்ந்து பல்வேறு தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும் உதவியாக இருக்கின்றன.

அந்த வகையில் பெங்களூருவுக்கு அருகில் தேவனஹள்ளி ஃபாக்ஸ்கான் நிறுவியுள்ள ஆலை மிகப்பெரிய மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறது. தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ் கான் நிறுவனம் இங்கே மிகப்பெரிய உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. இந்த ஆலையை சுற்றி இருக்கும் பகுதிகளில் எல்லாம் ரியல் எஸ்டேட்டின் மதிப்பு பல மடங்கு உயர தொடங்கிள்ளது. ஃபாக்ஸ் கான் நிறுவனம் இந்தியாவில் தமிழ்நாட்டில் தன்னுடைய ஆலையை நிறுவி ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது பெங்களூருவில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது. தேவனஹள்ளி பகுதியில் 13 மில்லியன் சதுர அடி பரப்பளவில் ஃபாக்ஸ் கான் இந்த உற்பத்தி ஆலையை அமைத்திருக்கிறது. 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை சீனாவுக்கு அடுத்தபடியாக ஃபாக்ஸ் கான் நிறுவனம் நிறுவியிருக்கும் மிகப்பெரிய இரண்டாவது மிகப்பெரிய ஆலை என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த ஆலை மூலம் 40,000 வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்திக்காக சீனாவை சார்திருக்கும் போக்கை மாற்றி இந்தியாவில் உற்பத்தியை பெருக்க திட்டமிட்டுள்ளது. எனவே ஃபாக்ஸ் கான் நிறுவனமும் இந்தியாவில் ஐபோன் ஆலைகளின் எண்ணிக்கையையும் உற்பத்தி திறனையும் மேம்படுத்து வருகிறது. தேவனஹள்ளி பகுதியில் நிறுவி வரும் ஆலைக்கு ஃபாக்ஸ் கான் பிராஜெக்ட் எலிபேண்ட் என பெயர் சூட்டியுள்ளது.
ஃபாக்ஸ் கான் நிறுவனம் இந்த ஆலையில் தன்னுடைய ஐபோன் உற்பத்திகளை பெருக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது. 2023 ஆம் ஆண்டிலேயே கர்நாடக மாநில அரசு தேவனஹள்ளி பகுதியில் ஃபாக்ஸ் கான் ஆலையை நிறுவுவதற்கு அனுமதி தந்துவிட்டது. இதன் பிறகு அந்த பகுதியை சுற்றி ரியல் எஸ்டேட் மதிப்பு படிப்படியாக உயரத் தொடங்கியது. ஃபாக்ஸ் கான் நிறுவனம் அங்கே கட்டுமான பணிகளை தொடங்கிய உடன் சொத்துக்களின் மதிப்பு 35 சதவீதம் அதிகரித்து இருந்ததாம்.
தற்போது சொத்துக்களின் மதிப்பு 55 சதவீதம் வரை உயர்ந்துவிட்டதாக அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றனர். தேவனஹள்ளி பகுதியை பொறுத்தவரை அங்கே பெரும்பாலும் விவசாயம் தான் முக்கியமான தொழிலாக இருந்தது. அந்த பகுதியில் தான் ஃபாக்ஸ் கானின் உற்பத்தி ஆலை அமைய இருக்கிறது. இதன் மூலம் அந்த பகுதி ஒரு உற்பத்திக்கான பகுதியாக மாறுகிறது என்பது மட்டும் இல்லாமல் பல்வேறு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பகுதியாகவும் மாறி இருக்கிறது.
இந்த ஆலை அமைந்து இங்கே 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது எனும்போது இந்த 40,000 பேருக்கு தேவையான வீட்டு வசதி ,போக்குவரத்து வசதி, உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து மேம்பாட்டு பணிகளும் தேவனஹள்ளி பகுதியில் நடக்கும். இது ஒட்டுமொத்தமாகவே தேவனஹள்ளி பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக அமைந்திருக்கிறது.
ஃபாக்ஸ்கான் இந்த ஆலையில் பணிபுரிய தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்த இருப்பதால் அவர்களுக்கு தேவையான வீட்டு வசதிகளையும் பக்கத்திலேயே ஏற்படுத்துகிறது. இதற்காக உள்ளூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறதாம். இது தவிர ஃபாக்ஸ் கான் நிறுவனம் ஐபோன் ஆலைக்கு பக்கத்திலேயே மின்சார வாகனங்களுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஆலையையும் நிறுவ இருக்கிறது.

எனவே கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆலையை சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் பகுதிகளில் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களுடைய கட்டுமான திட்டங்களை தொடங்கி இருக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், பிளாட்டுகள் உள்ளிட்டவற்றின் மதிப்பு 34 லட்சத்திலிருந்து 6 கோடி ரூபாய் வரை இருக்கிறதாம்.
2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஃபாக்ஸ் தான் ஆலையை சுற்றி இருக்கக்கூடிய நிலங்கள் மதிப்பு 55 சதவீதம் அதிகரித்து இருக்கிறது .அதாவது 5000 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் வரை ஒரு சதுர அடி நிலத்தின் மதிப்பு உயர்வு கண்டுள்ளது என இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். பலரும் தற்போது இந்த பகுதியில் நிலத்தை வாங்கி வீட்டைக் கட்டி வாடகை விடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என சொல்லப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் ராமகிரி என்பவர் இந்த பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார் அவர் வாங்கியதை விட தற்போது அதன் விலை 70% உயர்ந்திருக்கிறதாம் . தற்போது இந்த பகுதியில் ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் கூட சேவைகளை வழங்க தொடங்கிவிட்டன. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தங்கள் ஆலையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளை குத்தகைக்கு எடுக்கும் வேலைகளையும் தொடங்கி விட்டதாம்.
எனவே முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்து இருந்த ஒரு பகுதி தற்போது தொழில் துறை சார்ந்த பகுதியாக மாற இருக்கிறது .அடுத்த சில ஆண்டுகளில் இந்த பகுதி மிகப் பெரிய ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கும் மையமாக மாறும் என துறை சார்ந்த பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஃபாக்ஸ் கான் ஆலை அமைத்த பிறகு பல்வேறு நிறுவனங்களும் தங்களின் உற்பத்தி ஆலைகளை இங்கே அமைப்பதற்கு முன்வரும். அந்த வகையில் தேவனஹள்ளி பகுதியின் அடையாளமே மாற போகிறது. ஐடி நகரகமாக இருக்கும் பெங்களூரு உற்பதிக்கான மையமாகவும் மாற போகிறது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்த ஆலையில் ஐபோன்கள் மட்டுமில்லாமல் ஐவாட்ச், ஐபாட் உள்ளிட்டவற்றையும் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications