அமெரிக்காவின் பங்குச் சந்தை கண்காணிப்பாளர் அமைப்பான SEC, FBI, நீதி துறை ஆகியவை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, அசூர் பவர் குளோபல் நிறுவனத்தின் நிர்வாகி சிரில் கபனஸ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு தொடுத்துள்ளது, இதோடு கௌதம் அதானிக்கு பிடிவாரன்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதானி குழுமம் இந்தியாவில் மாபெரும் சோலார் திட்டத்தை வாங்க இந்திய அரசு ஊழியர்களுக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், இதை வைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் 3 பில்லியன் டாலர் கடன் பெற்று, இந்த பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இதில் தமிழ்நாட்டின் பெயர் அடிப்பட்டு உள்ளது.

2020-ஆம் ஆண்டில், அதானி குழுமத்தின் கிரீன் எனர்ஜி கிளை நிறுவனம், உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டமான 16 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டத்தை வென்றது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அதானி குழுமம் இந்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (SECI) க்கு 12 கிகாவாட் சோலார் மின்சாரத்தை வழங்க வேண்டியிருந்தது.
ஆனால், அதிக மின் கட்டணம் காரணமாக இந்த திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குள்ளானது. SECI-க்கு கிடைக்கும் அதானி உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விற்பனை செய்வது கடினமாக இருந்தது. இந்த சவால்களை சமாளிக்க கௌதம் அதானியும் அவரது உறவினர் மற்றும் கூட்டாளிகள் களத்தில் இறங்கினர்.
கௌதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் இந்தியாவில் பல்வேறு மாநில அரசாங்க அதிகாரிகளுக்கு 247 மில்லியன் டாலர் அதாவது 2100 கோடி ரூபாய் வரையில் லஞ்சம் கொடுத்துள்ளனர். மாநில அரசுகளுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் நிலையில், இந்த லஞ்சம் மூலம் அதிக விலையில் சோலார் மின்சாரத்தை வாங்க ஒப்புதல் அளிக்கும்படி செய்தனர் என லின்கிடுஇன் தளத்தில் ஜெயந்த் முந்த்ரா பதிவிட்டுள்ளார்.
அதானி, 2021-ல் ஆந்திரப் பிரதேச அரசின் உயர் அதிகாரியை பலமுறை நேரில் சந்தித்து, ஆந்திரப் பிரதேசத்தின் மின் விநியோக நிறுவனங்களுடன் 7 கிகாவாட் சோலார் மின்சாரம் ஒப்பந்தம் செய்ய முயன்றார். இந்த ஒப்பந்தம் அதானி குழுமம் செய்த பிற மாநிலங்களை ஒப்பிடுகையில மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கிறது.
இதற்காக கௌதம் அதானி, பல்வேறு ஷெல் நிறுவனங்கள் மூலம் ஆந்திர மாநில அரசு அதிகாரிக்கு மட்டும் 4.4 மில்லியன் டாலர் தொகையை லஞ்சமாக கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஆலோசனை கட்டணம் மற்றும் பிற சட்டபூர்வமான பரிவர்த்தனைகளுக்காக நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதாக மறைக்கப்பட்டுள்ளது என்று ஜெயந்த் முந்த்ரா பதிவிட்டுள்ளார்.
இதேபோன்ற கட்டமைப்பில், சத்தீஸ்கர், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் ஒப்பந்தங்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்க அரசு இந்தியாவில் நடக்கும் இந்த பில்லியன் டாலர் சோலார் திட்டத்தில் நடக்கும் லஞ்சம் விவகாரத்தை ஏன் விசாரிக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. கௌதம் அதானி, 2020-23 க்கு இடையில் அமெரிக்க நிதி நிறுவனங்களில் இருந்து இந்த சோலார் திட்டத்தை அடிப்படையாக வைத்து 3 பில்லியன் டாலர் வரையில் பணத்தை திரட்டியுள்ளார். இந்த பணத்தை அவர் லஞ்சம் கொடுப்பதற்காக பயன்படுத்தியதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்க அரசின் கூற்றுப்படி, கௌதம் அதானி தானாகவே அமெரிக்காவிற்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து, தனது உண்மையான நோக்கத்தை மறைத்து 1.36 பில்லியன் டாலரை திரட்டியுள்ளார் என்று ஜெயந்த் முந்த்ரா பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் அமெரிக்க அரசால் கடுமையாக பிரச்சனையாகவும், முறைகேடாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது அதானி குழுமத்தின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
ஆனால், இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களுக்கு முன்பு தான், அதானி அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள டாலர் பத்திரங்கள் மூலம் முதலீட்டை திரட்டினார் என்றும் ஜெயந்த் முந்த்ரா தனது பதிவை முடித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்: தமிழ்நாடு பெயர் அடிப்படும் வேளையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, அதானி விவகாரத்தில் பல மாநிலங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது, ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 3 வருடத்தில் எவ்விதமான வணிக ரீதியிலான தொடர்பும் வைத்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications