உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், லாப அளவுகளை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஊழியர்களை ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்தது. இதோடு உலகம் முழுவதும் ரெசிஷன் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் டெக் நிறுவனங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தது.
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் இதுவரையில் எவ்விதமான பணிநீக்கத்தையும் அறிவிக்கவில்லை, ஆனால் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்ட வங்கி நெருக்கடிகள் இந்திய ஐடி துறையில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
சொல்லப்போனால் வங்கி நெருக்கடிகள் இந்திய ஐடி துறையின் மீது கூடுதல் சுமையை உருவாக்கியுள்ளது. வங்கி நெருக்கடிகள் இந்திய ஐடி துறையை பாதிக்க என்ன காரணம்..?
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் வர்த்தகம், வருவாய் குறித்த அச்சம் அதிகரித்துள்ள வேளையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் துவங்க உள்ள 2024 ஆம் நிதியாண்டில் Hiring அளவு பாதியாக குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்களின் ஸ்டக்ச்சர் அடிப்படையாக மாற உள்ளது.
வங்கி நெருக்கடிகள்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்ட வங்கி நெருக்கடிகள் இந்திய ஐடி நிறுவனங்களை ஏன் பாதிக்கிறது..? இந்திய ஐடி நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாயில் சுமார் 40 சதவீதம் BFSI துறையை மட்டுமே சார்ந்துள்ளது. இதேபோல் இந்திய ஐடி நிறுவனங்களின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 80 சதவீதம் அமெரிக்க, ஐரோப்பிய சந்தையை சார்ந்துள்ளது.
வங்கி திவால்
இப்படியிருக்கும் வேளையில் அமெரிக்காவில் சில்வர்கேட், சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி திவால், ஐரோப்பிய சந்தையில் UBS- கிரெடிட் சூயிஸ் இணைப்பு. ஆகியவை அமெரிக்க, ஐரோப்பிய சந்தையில் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் புதிதாக டெக் சேவைகளுக்கு முதலீடு செய்வோர் எண்ணிக்கையும், அளவீடும் குறையும்.
BFSI பிரிவு
இதேவேளையில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் பணியாற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 30- 40 சதவீதம் ஊழியர்கள் BFSI பிரிவில் பணியற்றி வரும் காரணத்தால், சப்ளை - டிமாண்ட் அடிப்படையில் புதிய வர்த்தக கிடைக்காத பட்சத்தில் கட்டாயம் சில காலம் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் வர்த்தகத்தை இயக்கிவிட முடியும், ஆனால் அதன் பின்பு லாபத்தில் ஓட்டை விழும் போது இந்திய ஐடி நிறுவனங்கள் வேறு வழி இல்லாமல் பணிநீக்கம் செய்ய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
பிராந்திய வங்கிகள்
அமெரிக்காவில் தற்போது தடுமாற்றத்தில் உள்ளது தேசிய வங்கிகள் இல்லை, பிராந்திய வங்கிகள் தான், அந்த வகையில் அமெரிக்க பிராந்திய வங்கிகள் பிரிவில் இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ் கணிசமான வர்த்தகத்தை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications