வருடா வருடம் கோடைக் காலம் மோசமாகிக்கொண்டு இருக்கும் வேளையில், தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி வருவது 'வெப்ப அலைகள்' (Heat Waves) தான். கடும் வெப்ப நிலை காரணமாக ஏற்படும் இந்த வெப்ப அலைகள், எதிர்காலத்தில் இந்தியாவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என பருவநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், கோடை வெளியில் வெறும் அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், வணிகம், பொருளாதாரம் மற்றும் வீட்டு செலவுகளைக் கூட பாதிக்கும் அபாயம் உள்ளது. எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

அதிகரிக்கும் வெப்ப அலைகள்: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தலைமை இயக்குனர் திரு. மிருத்யுஞ்சய மொஹாபத்ரா அவர்கள், "வரும் மாதங்களில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஜூன் 30ம் தேதி வரையிலான மூன்று மாத காலகட்டத்தில், பல்வேறு பகுதிகளில் பொதுவாக ஏற்படும் 4 முதல் 8 நாட்கள் வெப்ப அலைகள், 10 முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும் அபாயம் உள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்." என்று கணித்துள்ளார்.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்: வெப்ப அலைகள் நீண்ட நாட்கள் நீடித்தால், அது பல்வேறு பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.
விவசாய பாதிப்பு: கடும் வெப்பம் காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்படும். இது உணவு உற்பத்தியைக் குறைத்து, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும்.
தண்ணீர் தட்டுப்பாடு: வெப்பம் அதிகரிப்பதால், தண்ணீர் ஆவியாதல் அதிகரிக்கும். இதன் காரணமாக நீர் நிலைகள் வறண்டு, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.
மின்சார தேவை அதிகரிப்பு: வெப்பம் அதிகரிக்கும் போது, ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பேன், ஏர் கூலர்களை அதிகம் பயன்படுத்தப்படும். இதனால் மின்சார தேவை அதிகரித்து, மின்சார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்சார உற்பத்திக்கு அதிக அளவு நிலக்கரி தேவைப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
வீட்டு செலவு அதிகரிப்பு: வெப்பம் அதிகரிப்பதால் விவசாய உற்பத்தி பாதித்து, விளைப்பொருட்கள் உயரும். வெயிலைத் தணிக்க ஏர் கண்டிஷனர்கள், பேன், ஏர் கூலர்களை அதிகம் பயன்படுத்துவதால் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கும் இதற்குக் காரணம். இது மொத்தமாக மாதாந்திர வீட்டு செலவுகளை அதிகரிக்கும்.
முன்னேற்பாடு அவசியம்: வெப்ப அலைகளின் தாக்கத்தைக் குறைக்க, தனிநபர் மற்றும் அரசு என அனைத்து தரப்பும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மரங்களை நட்டு வளர்ப்பது, நீர்வள மேலாண்மை மேம்படுத்துதல், மின்சார சேமிப்பு நடவடிக்கைகள் மூலம் ஆகியவை கணிசமான பாதிப்பை குறைக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications