செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரிந்து விட்டால் மட்டுமே இந்த துறையில் இந்தியா தலைவராகி விட முடியாது என Perplexity நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் எங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான பார்வையை வழங்கியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இதுவரை இல்லாத ஒன்றை இந்தியர்களால் உருவாக்க முடியுமா என்பதுதான் உண்மையான பிரச்சனை என அவர் கூறியுள்ளார்.

அதாவது ஏற்கனவே உருவாகி இருக்கக்கூடிய ஒரு பொருளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு செயற்கை நுண்ணறிவு திறன் அடிப்படையில் புதிய படைப்புகளை நாம் உருவாக்க தொடங்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதை வைத்துக்கொண்டு மக்கள் தங்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைகளை செய்து வருகின்றனர் ஆனால் இது மட்டுமே நம்மை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தலைவராக மாற்றி விடாதே என குறிப்பிட்டு இருக்கிறார்.
நம்முடைய இலக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இதுவரை இல்லாத ஒன்றை உருவாக்க கூடியதாக இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இதுவரை இல்லாத ஒன்றை உங்களால் உருவாக்கி உலகெங்கிலும் உள்ள 100 மில்லியன் மக்களிடம் வழங்க முடியுமா, அப்படி செய்துவிட்டால் நீங்கள் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கியிருப்பீர்கள், அதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், பலரும் வருமானம் பெறுவதற்கு வழிவகை செய்வீர்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவில் எழுச்சி பெற மூன்று துறைகளில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என அவர் கூறியுள்ளார். மருத்துவ துறையில் நோயறிதல் அறிக்கைகளை விளக்கும் மற்றும் மருத்துவர்களுக்கு உதவக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் முகவர்களை உருவாக்கலாம் இது மருத்துவ துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் சிறு நிறுவனங்களுக்கு எளிதாக சாஃப்ட்வேர்களை உருவாக்கும் கருவிகளை கொண்டு வரலாம் என தெரிவித்திருக்கிறார். நிதி சார்ந்த ஆலோசனையில் செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்தும் வகையில் ஒரு தயாரிப்பைக் கொண்டுவர முடியும் என கூறுகிறார். அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போர்ட்போலியோக்களை ஆய்வு செய்வது, பங்குகள் தொடர்பான செய்திகளை பின்தொடர்வது, நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்வது, முதலீட்டாளர்களுக்கு தினசரி முதலீடு சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்குவது உள்ளிட்டவற்றை செய்தால் நல்ல வளர்ச்சி காண முடியும் என தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே உருவாகிய ஒன்றை பயன்படுத்துவது அதற்கான ஷார்ட் கட்களை உருவாக்குவது மட்டும் நம்முடைய ஏஐ புரட்சி கிடையாது நம் புதிய தயாரிப்பைக் கொண்டு வர வேண்டும் அதுதான் உண்மையான புரட்சி என கூறி இருக்கிறார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications