இந்தியா தனது பொருளாதாரத்தை 30 டிரில்லியன் டாலராக உயர்த்த இந்தியாவுக்கெனச் சொந்தமாக ஒரு ஆப்பிள், கூகுள், ஃபைசர், சாம்சங், ஹோண்டா, போயிங், சீமென்ஸ், டிஎஸ்எம்சி அல்லது ஹுவாய் போன்ற இன்னோவேஷன் சார்ந்த நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று zoho தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
ஆனால் அத்தகைய நிறுவனங்களை உருவாக்கும் பாதையில் இந்தியா இருக்கிறதா? என்றும் ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பி அதற்கான பதிலையும், காரணங்களைத் தனக்கே உரிதான வகையில் பதில் அளித்தார்.
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் முன்பு, இத்தகைய இன்னோவேஷன் நிறைந்த நிறுவனங்கள் ஒரு நாட்டுக்கு குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளுக்கு 'ஏன்' முக்கியம் என்பதை வேம்பு விளக்கினார்.
முக்கிய நிறுவனங்கள்
ஆப்பிள், கூகுள், ஃபைசர், சாம்சங், ஹோண்டா, போயிங், சீமென்ஸ், டிஎஸ்எம்சி அல்லது ஹுவாய் போன்ற நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முன்னணியில் உள்ளன, இது ஒரு நாட்டின் நவீன வாழ்க்கை மற்றும் தேச நலனுகர்கு மிகவும் முக்கியமானது.
பொருளாதாரம்
இந்த நிறுவனங்கள் அதன் தாய் நாட்டின் அல்லது தலைமையகம் அமைத்துள்ள நாட்டின் பொருளாதாரதின் மதிப்பை கூட்டுகிறது. மேலும் லாபம், வருவாய், வேலைவாய்ப்பு எனப் பல விதத்தில் முக்கியப் பங்கை வகிக்கிறது. இது மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டிலும் முக்கிய பங்குவகிக்கிறது.
பெரு நிறுவனங்கள்
இத்தகைய பெரு நிறுவனங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் தங்கள் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிப்பது மூலம் பணப்புழக்கத்தை அதிகரித்து அரசுக்கு அதிகப்படியான வரி வருவாயை அளிக்கும் பணிகளைச் செய்கிறது.
ஆர்&டி முதலீடு
அத்தகைய நிறுவனங்களை இந்தியா உருவாக்க, இந்திய தனியார் துறை ஆர்&டி -யில் அதிக முதலீடு செய்ய வேண்டும். வேறு வழியில்லை. R&D இல் முதலீடு செய்ய நிறுவனங்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். தொழில்துறை R&D என்பது academic research போன்றது அல்ல.
லாபம் மிகப்பெரியது
தனியார் துறையின் R&D முதலீட்டின் லாபம் மிகப்பெரியது. தனியார் துறையின் மொத்த வருமானம் தான் அதிகப்படியான GDP வளர்ச்சி மற்றும் அதிகப்படியான தனிநபர் வருமானத்தை உருவாக்கும். இந்திய 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வேண்டும் என்றால், நாம் தனியார் துறை R&D.
இன்னோவேஷன்
இந்த நிலையில் இத்தகைய இன்னோவேஷன் நிறுவனங்களை உற்பத்தி செய்யும் பாதையில் இந்தியா இருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் பதில் என zoho தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
தனியார் துறை முதலீடு
இந்திய தனியார் துறையும் நிறுவனங்களும் R&D இல் போதுமான அளவு முதலீடு செய்யவில்லை. R&D இயக்கப்படும் நிறுவனங்கள் என்ற கலாச்சாரம் மற்றும் மனப் பழக்கங்களை இந்தியாவில் யாரும் உருவாக்கவில்லை. முதலில் கலாச்சாரத்தைக் கட்டமைக்க வேண்டும், அது நம்மால் முடியும்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications