கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டும் வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க நிற்கிறது, இதைத் தடுக்க அமெரிக்கா முதல் பல நாடுகள் முயற்சி செய்த முக்கியமான காரணம் உண்டு.
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என வல்லரசு நாடுகள் அனைத்தும் ரஷ்யா பொருளாதார வர்த்தகத் தடை விதிக்கத் தயாராக உள்ளது. இதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது ரஷ்யா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசிய, ஐரோப்பிய சந்தையும் பாதிக்கப்படும்.
இதன் வாயிலாக அமெரிக்காவும் பாதிக்கப்படும், இதனால் ஒட்டுமொத்த சர்வதேச பொருளாதாரமும் நங்கூரம் போட்டது போல் நின்றுவிடும் என்பது தான் உண்மை.
அப்படியென்றால் இந்தியா, ரஷ்யாவை எதற்காக நம்பியிருக்கிறது.
இந்தியா - ரஷ்யா
இந்தியாவில் மின்சார உற்பத்திக்குத் தற்போது அதிகளவில் நம்பியிருக்கும் ஒரு பொருளாக நிலக்கரி இருக்கும் வேளையில் 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா, ரஷ்யாவில் இருந்து சுமார் 1.8 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இது 2020ல் 2.5 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அளவீடு
இந்தியா எப்படித் தனது பெட்ரோல் தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பூர்த்திச் செய்கிறதோ, அதேபோலத் தான் நிலக்கரியும். இப்படியிருக்கையில் இந்தியா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் மொத்த நிலக்கரியில் 1.3 சதவீத நிலக்கரி ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
2020ல் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் அளவீடு 1.6 சதவீதமாக இருந்து, 2021ல் 1.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய்
இந்தியா அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது போல் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 43,400 பேரல் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1 சதவீதம் மட்டுமே.
இயற்கை எரிவாயு
நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது. 2021ல் இந்தியா செய்த மொத்த எரிவாயு இறக்குமதி அளவீட்டில் இது 0.2 சதவீதம் மட்டுமே.
மேலும் 2018ஆம் ஆண்டில் கெயில் நிறுவனம் Gazprom நிறுவனத்துடன் 2.5 மில்லியன் டன் LNG-ஐ இறக்குமதி செய்யும் 20 வருட ஒப்பந்தத்தைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போர்
தற்போது ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தால், ஒருபக்கம் ரஷ்யா மேற்கத்திய நாடுகளை எதிர்த்து போர் செய்ய வேண்டும், காரணம் உக்ரைன் நாட்டுக்கு அனைத்து வல்லரசு நாடுகளும் துணையாக நிற்கிறது. ஏற்கனவே உக்ரைன் நாட்டில் நேட்டோ படைகள் களமிறக்கப்பட்டு உள்ளது.
வர்த்தகத் தடை
இதைத் தாண்டி அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் இணைந்து ரஷ்யா மீது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடை விதிக்கும். அப்படித் தடை விதிக்கும் பட்சத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் நட்புறவு கொண்ட நாடுகள் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய முடியாது. இதனால் ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்படுவதோடு, ரஷ்யாவை பல்வேறு விஷயத்திற்காக நம்பியிருக்கும் பிற நாடுகளும் பாதிக்கப்படும்.
More From GoodReturns

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications