இந்திய வரலாற்றில் பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பெரும் தோல்வி எனச் சொல்லும் அளவிற்கு எவ்விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாத ஒன்றாக உள்ளது. இதற்கு மாற்றாக இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை இதன் மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
ரத்தமும், பணமும்
நம்முடைய உடலுக்கு எந்த அளவிற்கு ரத்தம் முக்கியமோ, அதேபோல் ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்குப் பணப் புழக்கம் மிகவும் முக்கியம். இந்தப் பணப் புழக்கத்தின் வாயிலாகத் தான் பெட்டி கடையில் 1 ருபாய்க்கு கடலை மிட்டாய் வாங்குவதில் இருந்து பல பில்லியன் டாலருக்கு கச்சா எண்ணெய் வாங்குவது வரையில் இயங்கும்.
இந்திய பொருளாதாரம்
இந்த நிலையில் நம்முடைய உடலில் 85 சதவீத ரத்தத்தை எடுத்துவிட்டு ஒவ்வொரு வாரமும் 5 சதவீத ரத்தத்தைச் செலுத்தினால் என்ன ஆகுமோ, அதே தான் இந்தியப் பொருளாதாரத்திற்கும் நடந்துள்ளது.
85 சதவீத பணம்
மோடி அரசு இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கும் போது நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அளவீடு மட்டும் 85 சதவீதம், இதில் ஒவ்வொரு வாரமும் 5 சதவீத தொகையை மக்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டு வந்தது.
மோடி அரசு
மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்கூட்டியே திட்டமிட்டு அறிவித்து நடைமுறைப்படுத்தி இருந்தால், எளிதாகச் செய்திருக்க முடியும், ஆனால் திடீரென எவ்விதமான முன் ஏற்பாடும் செய்யாமல், இதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகள் தெரியாமல் செய்த காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
வகைப்படுத்தாத துறை
இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையில் பெரும் பகுதி வகைப்படுத்தாத துறை தான், இந்தத் திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இத்துறையின் வர்த்தகம் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்ட காரணத்தால் வர்த்தகம் மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பு சந்தையும் பாதிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு சந்தை
இந்தியாவில் 94 சதவீதம் வேலைவாய்ப்பு சந்தை வகைப்படுத்தாத துறையைச் சார்ந்து தான் இருந்தது. குறிப்பாகச் சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் அனைத்து பணத்தின் வாயிலாகத் தான் வர்த்தகத்தைச் செய்கிறது. இப்பிரிவில் வங்கியின் பயன்பாடு 5 வருடங்களுக்கு முன்பு மிகவும் குறைவு.
பொருளாதார வளர்ச்சி
ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட 2016-17ல் தான் இந்தியப் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முக்கியக் காரணம் வகைப்படுத்தாத துறையின் வளர்ச்சி அளவீடுகள் தெரியாத காரணத்தால் வகைப்படுத்தப்பட்ட துறையின் வளர்ச்சி மட்டுமே காட்டப்பட்டுப் பொருளாதார வளர்ச்சி காரணிகள் கணக்கிடப்பட்டது.
தொடர் சரிவு
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவில் நீண்ட கால வர்த்தகப் பாதிப்பை உருவாக்கியது, 2016 முதல் இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் ஜிஎஸ்டி மூலம் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் மோசமடைந்தது. இதன் பின்பு கொரோனா...
தோல்வி
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மோடி அரசு செய்யப்போவதாக அறிவித்த எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும், அனைத்தும் தோல்வி. 5 வருடங்களுக்குப் பின் பார்க்கும் போது இந்தப் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு, மக்களின் தனி நபர் வருமானம் எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்பதைப் பார்க்கும் போதும் அதிர்ச்சியாக உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications