சுதந்திரத்துக்குப் பிறகு பெண்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்களைச் சார்ந்து இருக்கிறார்கள் என்ற கவலையில் பண்டித ஜவஹர்லால் நேரு தான் ஒரு மேக்கப் பிராண்டை உருவாக்கும் யோசனையை முன்வைத்தார் என்பது பலருக்குத் தெரியாது.
இதற்கு முக்கியமான காரணம் வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்களை இறக்குமதி செய்து வாங்குவதற்கு அதிகப்படியான டாலர், பவுண்ட் தொகையை செலவிட வேண்டியிருந்தது. இதை குறைக்கும் விதமாக தான் ஜவஹர்லால் நேரு உள்நாட்டு உற்பத்தியை தூண்டிவிட்டார்.

ஜே.ஆர்.டி.டாடாவிடம் ஜவஹர்லால் நேரு, இந்தியப் பெண்களின் சருமத்தின் மற்றும் பிற தேவைகளைக் கருத்தில் கொண்டு அழகு சாதனப் பொருட்களை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, ஜேஆர்டி டாடா 1952 இல் டாடா ஆயில் மில்ஸின் துணை நிறுவனமான லாக்மே-யைத் தொடங்கினார்.
இந்தியாவின் முதல் ஒப்பனை பிராண்டுக்கு Lakme என்ற பெயரிடப்பட்ட பின்னணி லட்சுமி தேவியை குறிப்பதாகும். சுவாரஸ்யமாக, டாடா குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஒன்று பாரிஸுக்கு அனுப்பப்பட்டு, பிராண்டுக்கான பெயரைக் கொண்டு வர, அவர்களின் பிரெஞ்சு சகாக்களுடன் ஆலோசனை செய்து வந்தது.
தற்செயலாக, குழு பிரபல பிரெஞ்சு இசையமைப்பாளரான லியோ டெலிப்ஸை சந்தித்தது. டெலிப்ஸ் ஒரு ஓபராவில் இசைத்தும் நடித்து கொண்டு கொண்டிருந்தார், இது ஒரு பெண் கதாநாயகியை மையமாகக் கொண்டது.
ஒரு இந்தியப் பெண்ணின் செல்வம் மற்றும் செழிப்புக்கான இந்திய தெய்வமான லட்சுமி தேவியின் பெயரால் அந்த ஓபரா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பிராண்டின் பெயரைக் கண்டுபிடித்துவிட்டோம் என குழு முடிவு எடுத்தது. லாக்மே இந்தியக் கடவுளான லக்ஷ்மியின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்து ஈர்க்கப்பட்டு, இந்தியச் சூழலில் அழகைப் பொருத்தமாக அடையாளப்படுத்தியது.
இந்த பிராண்ட் 1952 இல் தொடங்கப்பட்டது. இந்திய பெண்களின் தேவைகளை புரிந்து கொண்டதால் மிக விரைவாக விரிவடைந்தது. படிப்படியாக, லாக்மே பிராண்ட் இந்திய வீட்டுப் பெயராக மாறியது. நகர்ப்புற பெண்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக இருந்தது.
சிமோன் டாடா 1961 இல் லாக்மே நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகு, பிராண்ட் சில கடுமையான மாற்றங்களைக் கண்டது. அது அதை அதிக உயரத்துக்கு கொண்டு சென்றது.
சிமோன் டாடா தயாரிப்பு விலைகள், பிராண்டின் தரத்தை மாற்றினார்.
அவர் 1982 இல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரங்களுக்காக லாக்மே பிராண்ட் நிறைய செலவழித்தது. டிஜிட்டல் விளம்பரத்துக்காக ஒரு மாடலை -- பிராண்டின் முகத்தை-- உருவாக்கும் யோசனையை லாக்மே கொண்டு வந்தது.
அந்த நேரத்தில் பிரபல மாடலான ஷியமோலி வர்மாவை தங்கள் விளம்பரங்களுக்காக லாக்மே வேலைக்கு அமர்த்தியது. இந்த விளம்பரம் மிகவும் பிரபலமானது, ஷியாமலி வர்மா "லாக்மே பெண்" என்று பரவலாக அறியப்பட்டார்.
ரேகா, ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் கரீனா கபூர் உட்பட பல முன்னணி பாலிவுட் நடிகைகள் பிராண்டுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
காலப்போக்கில் லாக்மே இந்தியாவின் முன்னணி அழகுசாதனப் பிராண்டுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. லாக்மே கூட்டு முயற்சியில் அதன் 50 சதவீத பங்குகளை விலக்கி அதன் பிராண்டுகளை ஹிந்துஸ்தான் யூனிலீவருக்கு 1998 இல் விற்றது டாடா குழுமம்.
Story Written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications