செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால் இந்தியாவில் 54 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட பிபிஓ துறையே மிகப்பெரிய மாற்றம் கண்டு வருகிறது. பிஸ்னஸ் ஸ்டாண்டர்டில் இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
உலகளவில் பல்வேறு நிறுவனங்களும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்யக்கூடிய வேலைகளில் மனிதர்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறி போன வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது பிபிஓ எனப்படும் Business Process Outsourcing துறை.

இந்தியாவின் பிபிஓ துறையின் மதிப்பு 54 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். கிட்டத்தட்ட கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் வலுவான வேலை வாய்ப்பு கொண்ட ஒரு துறையாக பிபிஓ துறை செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிபிஓ துறையில் ஏஐ பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வந்து விட்டது . செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதன் மூலம் உருவாக்கப்படும் ஏஜெண்டுகள் மனிதர்கள் செய்து வந்த வேலைகளை செய்ய தொடங்கிவிட்டன.
இதன் காரணமாக இந்த துறைகளில் எல்லாம் மனிதர்களுக்கு மாற்றாக நிறுவனங்கள் ஏஐ ஏஜெண்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டன. மனிதர்களைப் போலவே ஒரு முடிவினை எடுப்பது, ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட செயல்களை ஏஐ ஏஜெண்டுகள் திறம்பட செய்வதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பிபிஓ துறை பெரிய மாற்றத்தை காணத் தொடங்கி விட்டது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலேயே குறிப்பிட்ட டொமைன்களுக்கு என தனித்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு ஏஜென்டுகள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக ஜென் பேக்ட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான சஞ்சய் தெரிவித்திருக்கிறார்.
பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி பேங்க், ஜே பி மார்கன், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர் சேவைகளுக்கு இந்தியாவிலிருந்து பிபிஓ சேவைகளையே பயன்படுத்தி வந்தன. ஆனால் தற்போது அவை பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானியங்கு நடைமுறைக்கு மாறுகின்றன என அவர் கூறுகிறார். இந்தியாவில் பிபிஓ துறை 54 பில்லியன் டாலர்கள் கொண்டதாக இருக்கிறது. 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படிப்படியாக இவர்களின் வேலை வாய்ப்புகளை பறித்து வருகிறது என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. மனிதர்களின் தலையீடு தேவைப்படாத அனைத்து பிரிவுகளிலும் படிப்படியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டது என டெக் மகேந்திரா நிறுவனத்தின் பிசினஸ் ப்ராசஸ் பிரிவு தலைவர் தெரிவிக்கிறார்.
குறிப்பிட்ட டொமைன்களுக்கு என உருவாக்கப்படும் ஏஐ ஏஜெண்டுகள் அந்த துறை சம்பந்தப்பட்ட தரவுகள் வழங்கப்பட்டு முறையான பயிற்சி பெறப்பட்டு பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தான் பயன்பாட்டுக்கு வருகின்றன எனக் கூறுகிறார் . இந்தியாவில் சாட் அடிப்படையிலான பெரும்பாலான சேவைகள் ஏஐ மூலம் மாற்றப்பட்டு விட்டது என கூறும் அவர், விரைவில் வாய்ஸ் சேவைகளும் மாற்றப்படும் என்கிறார்.
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications