சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல்கள் இந்தியாவை சேர்ந்த உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் , பிராண்டுகளும் தங்களுக்கான பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்துதான் இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றன.
ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரியை விதித்தார். இதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்களும் பிராண்டுகளும் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இதற்கு முன்பு செலவு செய்ததை விட பல மடங்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தயக்கம் காட்டுகின்றன.

சீனா அமெரிக்கா இடையிலான இந்த வர்த்தக மோதல் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் இதுநாள் வரை சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களை எல்லாம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றன. சர்வதேச வர்த்தக ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா 148 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்து இருக்கிறது. இதில் சீனாவில் இருந்து மட்டும் 105.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது.
அதாவது 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா இறக்குமதி செய்த பொருட்களில் 72% சீனாவில் இருந்து தான் வந்திருக்கிறது. அதே வேளையில் அமெரிக்கா இந்தியாவிலிருந்து 4.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது . அமெரிக்காவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் இந்தியாவிலிருந்து வந்த பொருட்கள் 2.9 சதவீதம் ஆகும். டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை காரணமாக இந்த 100 மில்லியன் டாலர்கள் மதிப்பில் உள்ள வர்த்தகமும் இந்தியாவை நோக்கி திரும்ப இருக்கின்றன. இது இந்தியாவை சேர்ந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை தொடங்கி அமெரிக்க சந்தையில் பிரதானமாக தேவைப்படும் அனைத்து பொருட்களையும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாம். சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அதிக வரியை செலுத்த வேண்டியதற்கு பதிலாக அமெரிக்க நிறுவனங்கள் தற்போது குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இடத்தை தேடி வருகின்றன. எனவே இந்தியாவிற்கு புதிதாக 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வணிக வாய்ப்பு திறக்கப்பட்டு இருக்கிறது என சொல்லப்படுகிறது.
மத்திய மாநில அரசுகள் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை சேர்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவி செய்து அவை அமெரிக்காவிற்கு தங்களுடைய பொருட்களை ஏற்றுமதி செய்ய தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் அவ்வாறு செய்யும்போது இந்தியாவின் ஏற்றுமதியில் கூடுதலாக 100 பில்லியன் டாலர்கள் சேர வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக அமெரிக்காவில் பட்டாசு சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்து பயன்படுத்தப்படுகிறது. அப்போது பட்டாசுகளின் விலை 15லிருந்து 60 டாலராக இருந்தது. தற்போது வரிவிதிப்புக்கு பிறகு இறக்குமதி செய்து விற்பனை செய்தால் அதன் விலை 135 டாலராக உயரும். எனவே இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் சிவகாசி பகுதியில் அதிகளவு பட்டாசுகளை உற்பத்தி செய்து அவற்றை அமெரிக்காவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும்போது ஒட்டுமொத்தமாக சிவகாசியின் பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
அதே போல 80% சமையல் அறை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அமெரிக்கா சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. தற்போது அந்த வாய்ப்பு இந்திய உற்பத்தியாளர்களுக்கு கிடைத்திருக்கிறது .
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications