சென்னை: ஐடி துறை மந்தமாக இருக்கும் நிலையிலும் இந்தியாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் 2025 ஆம் நிதி ஆண்டில் வருமானத்தை பெருக்கியுள்ளன. டிசிஎஸ், இன்போசிஸ் ,ஹெச் சி எல், விப்ரோ , டெக் மகேந்திரா ஆகிய ஐந்து நிறுவனங்கள் ஐடி துறையின் இந்தியாவின் பிக் பைஃவ் என அழைக்கப்படுகின்றன.
வருமானத்தை உயர்த்திய நிறுவனங்கள்: இதில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் ஆகிய மூன்று நிறுவனங்களும் 2025 ஆம் நிதி ஆண்டில் ஐடி துறை மந்தமாக இருந்த போதும் தங்களுடைய வருமானத்தை அதிகப்படுத்தி இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் வருமானம் அதில் பணி செய்யும் ஊழியர்கள் என்ற அளவை கொண்டு தலா ஒரு ஊழியருக்கு எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளது என்பதை கணக்கீடு செய்தால் டிசிஎஸ் நிறுவனம் 2025 ஆம் நிதியாண்டில் ஒரு ஊழியருக்கு தலா 49,902 டாலர்களை வருமானமாக பெற்றுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் ஒரு ஊழியருக்கு தலா 60 ,164 டாலர்களை வருமானமாக ஈட்டி இருக்கிறது, ஹெச்சிஎல் தலா 61,388 டாலரை வருமானமாக பெற்றிருக்கிறது.

எப்படி சாத்தியம்?: 2022ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது டிசிஎஸ் நிறுவனத்தின் வருமானம் 4.91%, இன்போசிஸ் நிறுவனத்தின் வருமானம் 5.79% , ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருமானம் 1.50 % அதிகரித்து இருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் விப்ரோ நிறுவனத்தின் ஒரு ஊழியருக்கான வருமானம் 47,000 டாலரில் இருந்து 45,000 டாலர்களாக குறைந்திருக்கிறது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் வருமானம் 44,000 டாலரில் இருந்து 42,500 டாலர்களாக குறைந்திருக்கிறது.
உற்பத்தி திறனை அதிகரித்தது எப்படி: இந்திய ஐடி நிறுவனங்கள் வருமானத்திற்காக அமெரிக்காவை சார்ந்துள்ளன. அங்கு இந்த ஆண்டு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலிலும் இந்த மூன்று நிறுவனங்களும் எப்படி வருமானத்தை அதிகப்படுத்தியுள்ளன. இந்த நிறுவனங்கள் பெரிய அளவில் ஊழியர்களை புதிதாக பணிக்கு தேர்வு செய்யவில்லை இருந்தாலும் இவற்றின் உற்பத்தி திறன் எப்படி அதிகரித்து இருக்கிறது என பார்த்தால் இந்த நிறுவனங்கள் ஸ்மார்டான முறையில் உத்திகளை கையாண்டு தங்களின் உற்பத்தி திறனை அதிகரித்து இருக்கின்றன.
கை கொடுத்த ஏஐ: குறைந்த ஊழியர்களை கொண்டு அதிக பணி. இந்த நிறுவனங்கள் பெருமளவில் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கவில்லை. மாறாக குறைந்த ஊழியர்களை கொண்டே பணிகளை செய்து வருகின்றன. இதற்கு இவை ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன. மென்பொருள் மேம்பாடு, கோடிங் உள்ளிட்ட பணிகளுக்கு ஏஐ கருவிகளை இவை ஒருங்கிணைத்துள்ளன.
ஏஐ மூலம் பணிகள்: ஏஐ கருவிகளோடு குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்களை கொண்டு பணி செய்து இவை பிராஜெக்டுகளை நிறைவேற்றி தருகின்றன., அந்த வகையில் ஏஐ ஒருங்கிணைப்பு இந்நிறுவனங்களின் வருமானத்திற்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளன. ஐடி நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு வேலை செய்வதே அவற்றின் ஒரு ஊழியருக்கான வருமானம் உயர்வதற்கு காரணம் என டச் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்.
மென்பொருள் விற்பனையில் அதிக லாபம்: ஏஐ தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு தவிர மூன்றாம் தரப்பு மென்பொருள் விற்பனையும் இவற்றுக்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளன. டிசிஎஸ், ஹெச்சிஎல், இன்போசிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் 2025ஆம் நிதியாண்டில் மூன்றாம் தரப்பு மென்பொருள் விற்பனையில் அதிக கவனம் செலுத்தி அதன் மூலம் விற்பனையை அதிகப்படுத்தியுள்ளன என மிண்ட் தளம் வெளியிடும் செய்தி கூறுகிறது. இந்த ,மூன்று நிறுவனங்களின் வருமானத்தில் 7% மென்பொருள் மற்றும் மென்பொருள் உரிமம் விற்பனையின் மூலம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications