பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பிப்ரவரி 12ஆம் தேதி காலை வர்த்தகத்தில் சுமார் 1 சதவீதம் வரை சரிந்து, தொடர்ந்து ஆறாவது நாளாக நஷ்டத்தை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் இந்திய நிறுவனங்களின் மந்தமான வருவாய் ஆகியவை இந்திய சந்தை மீதான முதலீட்டு வாய்ப்புகளை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது.
இன்று மட்டும் முதலீட்டாளர்கள் சந்தை மூலதனத்தில் ரூ.7 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இந்த ஆறு வர்த்தக அமர்வுகளில் மொத்த இழப்பு ரூ.24 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த 6 நாட்களில் பெரிய நிறுவனங்களை விட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடுகள் இரண்டும் 2-3 சதவீதம் வரை சரிந்து, கரடியின் பிடியில் இந்திய பங்குச்சந்தை மாட்டிக்கொண்டு உள்ளது. அதாவது, அவற்றின் உச்சபட்ச புள்ளிகளிலிருந்து 20 சதவீதம் வரை சரிந்துள்ளன. மிட்கேப் குறியீடு இப்போது செப்டம்பர் 2024 இல் அதன் அதிகபட்ச புள்ளியிலிருந்து 18 சதவீதத்திற்கும் அதிகமாகவும், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு டிசம்பர் 2024 இல் அதன் உச்சத்திலிருந்து 20 சதவீதத்திற்கும் அதிகமாகவும் குறைந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வரும் வேளையில், ஏன் பங்குச்சந்தை சரிவடைகிறது. இதற்கு முக்கியமான காரணம் FPI எனப்படும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களும், FII எனப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் தான்.
டிரம்ப்-ன் ஆட்டம்
டிரம்ப் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து டாலர் மதிப்பை அதிகரிப்பது வாயிலாகவும், சர்வதேச முதலீட்டு மற்றும் வர்த்தக சந்தையை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புதிய உச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என தீர்க்கமாக நம்புகிறார்.
முதலீட்டு சந்தையில் இப்போ என்ன நடக்குது..?
இந்த நிலையில் தான் அமெரிக்க மற்றும் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் முதலீட்டாளர்களின் வெளிநாட்டு முதலீட்டை தாய் நாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில் பல அதிரடியான அறிவிப்புகளை கொண்டு வந்தார். இதில் முக்கியமாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் நாடுகள் மீதும் அதிகப்படியான வரி விதிப்பது மூலம் அந்த நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதாரம் குறையும்.
இதேவேலையில் வரியை தாண்டி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் போது அமெரிக்க அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இது இரண்டும் முதலீட்டாளர்களுக்கு சிக்கல், இதனால் டிரம்ப்-ன் மறைமுகமான மிரட்டல் FPI மற்றும் FII முதலீட்டாளர்களை வெளிநாட்டில் செய்திருந்த முதலீட்டை அமெரிக்க பத்திர சந்தையிலும், நாணய சந்தையிலும், தங்கத்திலும் முதலீடு செய்ய வைத்துள்எளது. இதன் வாயிலாகவே இந்திய பங்குச்சந்சையில் இருந்து FPI மற்றும் FII முதலீட்டாளர்கள் முதலீட்டை வெளியேற்றிய காரணத்தால் சென்செக்ஸ் மற்றும் தடுமாறுகிறது.
வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம்:
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIகள்) இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றனர். இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் ரூ.7,300 கோடிக்கு மேல் (சுமார் $840 மில்லியன்) முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.
உலகளாவிய வர்த்தக பதற்றங்கள், குறிப்பாக அமெரிக்கா கனடா, மெக்சிகோ மற்றும் சீனா போன்ற நாடுகள் மீது விதித்துள்ள வரிகள் காரணமாகவே இந்த தொடர்ச்சியான முதலீட்டு வெளியேற்றம் நிகழ்கிறது.
ஜனவரி மாதம் முழுவதும் ரூ.78,027 கோடி வெளியேற்றப்பட்ட நிலையில், இது மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு முன், டிசம்பரில் FPIகள் ரூ.15,446 கோடியை முதலீடு செய்திருந்தனர். குறிப்பாக, பிப்ரவரி முதல் வாரத்தில் மட்டும் FPIகள் இந்திய பங்குகளிலிருந்து ரூ.7,342 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்:
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FIIகள்) இன்னும் இந்திய பங்குகளில் சுமார் 800 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்திருந்தாலும், அவர்களின் தொடர்ச்சியான விற்பனை பங்குச் சந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய பங்குச்சந்தை வலுவான உள்நாட்டு முதலீட்டின் காரணமாக உறுதியாக இருந்தாவும், FIIகள் சந்தையில் கணிசமான பங்குகளை வைத்திருப்பதால், இவர்களின் தொடர்ச்சியான விற்பனை சந்தை ஸ்திரத்தன்மையை பாதித்துள்ளது.
FIIகளுக்கு முக்கிய கவலையாக இருப்பது அமெரிக்காவில் அதிகரித்து வரும் கடன் பத்திர முதலீட்டின் மீதான லாபம் தான். இந்த அதிக லாபம் அமெரிக்க சொத்துக்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது. இதனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகள் மீதான கவர்ச்சி குறைந்து முதலீட்டை வெளியேற்ற தூண்டுகிறது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications