டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான நிலையில் நேற்று கையெழுத்திட்ட பல உத்தரவுகளில் என்ஆர்ஐ-களும், அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்ற கனவு கண்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது birthright citizenship ரத்து செய்யும் உத்தரவு என்றால் மிகையில்லை. டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் அதிபராக 2வது முறை திரும்பியதைக் குறிக்கும் வகையில் அதிகப்படியான உத்தரவுகளை செயல்படுத்த உத்தவிட்டார்.
birthright citizenship அதாவது பிறப்புரிமை மூலம் குடியுரிமை பெறும் வசதியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்முறையைத் தொடங்கும் உத்தரவில் தான் ஜனவரி 20 அன்று டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த நடைமுறை அமெரிக்காவில் 1868ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

பிறப்புரிமை மூலம் குடியுரிமை சட்டத்தின் கீழ் பெற்றோர்கள் யாராக இருந்தாலும், எந்த நாட்டவராக இருந்தாலும் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டோமேட்டிக் முறையில் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது.
இந்த முறையை தான் தற்போது டிரம்ப் திருத்த உத்தரவிட்டு உள்ளார். திருத்தப்படும் புதிய பிறப்புரிமை மூலம் குடியுரிமை கொள்கையின் கீழ் யாருக்கெல்லாம் குடியுரிமை கிடைக்கும்..? என்னவெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்..? இதனால் இந்தியர்களுக்கு என்ன பிரச்சனை..? எப்படியெல்லாம் பிரச்சனை வரும்..?
புதிய விதிமுறைகளின்படி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பின்வரும் சூழ்நிலைகளில் குடியுரிமை வழங்கப்படாது:
* குழந்தை பிறக்கும் போது தாய் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தால் மற்றும் தந்தை அமெரிக்க குடிமகனாக இல்லாவிட்டாலோ அல்லது சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளராக (permanent resident) இல்லாவிட்டாலோ குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது.
* குழந்தை பிறக்கும் போது தாய் அமெரிக்காவில் இருந்திருந்தாலும் அது தற்காலிகமாக இருந்திருந்தால் (விசா வைவர் திட்டத்தின் கீழ் அல்லது ஸ்டென்ட் விசா, வொர்க் விசா அல்லது டூரிஸ்ட் விசாவில் அமெரிக்காவிற்கு வந்திருந்தால்) மற்றும் தந்தை அமெரிக்க குடிமகனாக இல்லாவிட்டாலோ அல்லது சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளராக இல்லாவிட்டாலோ குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது.
புதிய விதிமுறைகளின்படி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பின்வரும் சூழ்நிலைகளில் குடியுரிமை வழங்கப்படும்:
* குழந்தை பிறக்கும் போது குறைந்தபட்சம் ஒரு பெற்றோர் அமெரிக்க குடிமகனாக இருந்தால் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
* குழந்தை பிறக்கும் போது குறைந்தபட்சம் ஒரு பெற்றோர் சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளராகவோ (கிரீன் கார்டு வைத்திருப்பவர்) இருந்தால் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
* குழந்தை பிறக்கும் போது குறைந்தபட்சம் ஒரு பெற்றோர் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி வருபவராக இருந்தால் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
மேலும், இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்பு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு பழைய முறையின் கீழ் குடியுரிமை வழங்கப்படும். அடுத்த 30 நாட்களுக்குள் இந்த புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இக்காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை அளிக்கப்பட உள்ளது.
இந்தியர்களை இது எப்படி பாதிக்கும்?: டொனால்டு டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்காவிற்கு அதிக அளவில் குடிப்பெயரும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் குடிமக்கள் birthright citizenship முறையை தவறாக பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டினார்.
வொர்க் விசா மற்றும் டூரிஸ்ட் விசா மூலம் அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் குடியுரிமை பெற்றுவருகின்றனர். இதை தான் டிரம்ப் குற்றம்சாட்டுகிறார்.
இந்தியர்களுக்கு பாதிப்பு: வேலைவாய்ப்பு விசாக்களில் (எச்-1பி விசா போன்றவை), கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கப்படுவதை இந்த புதிய விதிமுறை மூலம் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் குழந்தை அமெரிக்க குடிரியுமை கொண்டு இருந்தால் கிரீன் கார்டு பெறுவதில் சில முன்னுரிமை கிடைக்கும், இனி இதற்கும் வாய்ப்புகள் இல்லை என்பது தான் இந்தியர்களை அதிகம் பாதிக்கும் விஷயமாக உள்ளது. இதேபோல் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் காலம் அதிகரிக்கும்.
அமெரிக்காவில் இந்தியர்களின் ஆதிக்கம்: அமெரிக்காவில் 5.4 மில்லியனுக்கும் அதிகமான இந்திய அமெரிக்கர்கள் வசிக்கின்றனர் என 2024 ஆம் ஆண்டின் தரவுகள் காட்டுகிறது. இது அமெரிக்க மக்கள் தொகையில் 1.47% ஆகும். இதில் 34% பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள் ஆவர்.
டிரம்ப்-க்கு செக் வைத்த வழக்கறிஞர்கள்: இந்த புதிய மாற்றம் அடுத்த 30 நாட்களில் நடைமுறைக்கு வரும் வேளையில், டிரம்ப் பதவியேற்ற அதே நாள் மாலையில் 1868ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் birthright citizenship முறையை ரத்து செய்வதை எதிர்த்து குடிவரவு வழக்கறிஞர்கள் திங்கட்கிழமை மாலை வழக்கை தொடுத்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications