இந்திய ட்விட்டர் புளூடிக் பயனர்கள் $8 கட்டணம் செலுத்துவது எப்படி?

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் சிஇஓ பதவி நீக்கம் உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் ட்விட்டரில் உள்ள புளூடிக் பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் $8 செலுத்த வேண்டும் என்றும் எலான் மஸ்க் அறிவித்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள புளூடிக் பயனாளிகள் இந்த தொகையை எப்படி செலுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

உலகின் நம்பர்-1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முயற்சி செய்து வருகிறார். குறிப்பாக நிர்வாகத்தில் புதுமையை புகுத்துதல், போலி கணக்குகளை கண்டறிந்து அதனை நீக்குதல் உள்ளிட்டவற்றை செய்து வரும் நிலையில் அவருக்கு ட்விட்டர் பயனாளிகளிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

புளூடிக் கட்டணம்

புளூடிக் கட்டணம்

ஆனால் அதே நேரத்தில் திடீரென அவர் புளூடிக் வைத்திருக்கும் ட்விட்டர் பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் 8 டாலர் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள புளூடிக் பயனாளிகள் 8 டாலர் பணத்தை எப்படி செலுத்தலாம் என்பது குறித்து தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி திலீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யுபிஐ ஆட்டோ-பே

யுபிஐ ஆட்டோ-பே

இந்தியாவில் உள்ள ட்விட்டர் புளூடிக் பயனாளிகள் தங்களுடைய கட்டணத்தை யுபிஐ ஆட்டோ-பே மூலம் செலுத்தலாம் என திலீப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள புளூடிக் ட்விட்டர் பயனாளிகள் 8 அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும் என்றால் அது இந்திய மதிப்பில் சுமார் 650 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் சுமார் ஏழு மில்லியன் புளூடிக் பயனாளர்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டணம்

கட்டணம்

இந்தியாவில் உள்ள புளூடிக் ட்விட்டர் பயனாளிகள் தாங்கள் விரும்பியபடி மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என்று அவர் திலீப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஓடிடி தளங்கள்

ஓடிடி தளங்கள்

ஏற்கனவே வெளிநாட்டிலுள்ள ஓடிடி தளங்கள் யுபிஐ ஆட்டோ-பே முறையில்தான் இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்து வருகிறது. அதேபோல் ட்விட்டர் புளூடிக் பயனாளிகளும் யுபிஐ ஆட்டோ-பே மூலம் தங்களது கட்டணத்தை செலுத்தலாம்.

ரத்து செய்யலாமா?

ரத்து செய்யலாமா?

ஓடிடி தளத்தின் சேவை தேவை இல்லை என்றால் யுபிஐ ஆட்டோ-பே கட்டணத்தை ரத்து செய்வது போலவே புளூடிக் தேவைப்படாத ட்விட்டர் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் யுபிஐ ஆட்டோ-பே கட்டணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+