சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தொழில் ரீதியாகவும் உள்கடமைப்பு ரீதியாகவும் பெரிய அளவிலான மாற்றங்களை அடைந்து வருகிறது. விமான நிலையம், துறைமுகம் என பல சாதகமான அம்சங்கள் இருப்பதால் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் சென்னையை நோக்கி ஓடி வருகின்றன.
சென்னை ஐடி, ஜிசிசி என ஒரு புறம் வளர்கிறது, மறுபுறம் சரக்கு போக்குவரத்து, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, வாகன உற்பத்தி என கெத்து காட்டி வருகிறது. இந்த வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையில் மத்திய மாநில அரசுகள் சென்னை மற்றும் சென்னையை சுற்றி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு இண்டஸ்ட்ரியல் பவர் ஹவுஸ் ஆக மாறும் வகையில் சென்னை உருவெடுத்து வருகிறது.

சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே: சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு நகரங்களையும் இணைக்கக் கூடிய பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெறு வருகின்றன. இந்த திட்டம் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா என மூன்று மாநிலங்களை இணைக்கிறது. 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரக்கூடிய இந்த திட்டப்பணி மூலம் சென்னை பெங்களூர் இடையிலான பயண நேரம் வெகுவாக குறைய இருக்கிறது 2026 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த சாலை முழுவதுமாக பயன்பாட்டுக்கு வந்து விடும் என சொல்லப்படுகிறது.
சித்தூர் தாச்சூர் எக்ஸ்பிரஸ்வே: ஆறு வழி பாதையாக சித்தூர் தாச்சூர் எக்ஸ்பிரஸ்வே திட்டமிடப்பட்டிருக்கிறது. பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ்வேயில் இருந்து பிரியக்கூடிய இந்த சாலை சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு வழியாக காட்டுப்பள்ளி துறைமுகம் வரை செல்கிறது. இந்த திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2026 ஆம் ஆண்டின் மத்தியில் பணிகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரத்- சென்னை எக்ஸ்பிரஸ்வே: குஜராத் மாநிலம் சூரத்தையும் சென்னையும் இணைக்க கூடிய வகையில் எக்ஸ்பிரஸ்வே கட்டமைக்க அரசு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தொடங்கி திருப்பதி, கடப்பா, கர்நூல், கலாபுராகி, சோலாப்பூர்,நாசிக் ,சூரத் ஆகிய நகரங்களை இணைக்க கூடிய வகையில் இந்த எக்ஸ்பிரஸ்வே திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை மற்ற மாநிலங்களில் இதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடங்கி இருக்கின்றன.
சென்னை பெரிபெரல் ரிங் ரோடு: காட்டுப்பள்ளி துறைமுகத்தில் தொடங்கி மாமல்லபுரம் வரை இணைக்கக்கூடிய வகையில் பெரிபெரல் ரிங் ரோடு என்பது கட்டமைக்கப்பட்ட வருகிறது. பனப்பாக்கம் ,தாமரைப்பாக்கம், திருவள்ளூர் ,ஸ்ரீபெரும்புதூர் ,ஒரகடம், சிங்கப்பெருமாள் கோயில் என சென்னையில் உற்பத்தி ஆலைகள் அமைந்திருக்கக்கூடிய அனைத்து பகுதிகளையும் இணைக்கக்கூடிய வகையில் இந்த சாலை திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மதுரவாயல் - துறைமுகம்: சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் இடையே இரண்டடுக்கு மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. மதுரவாயிலில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை துறைமுகத்தை அடையும் வகையில் இந்த சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது. 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிந்துவிடும் என அரசு எதிர்பார்க்கிறது.

மெட்ரோ ரயில் திட்ட பணிகள்: சென்னையில் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதனை மேலும் அரசு விரிவாக்கம் செய்ய இருக்கிறது. 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 முக்கிய வழித்தடங்கள் அறிமுகம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மாதவரத்தில் இருந்து சிறுசேரி, மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர், பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் என மூன்று வழிதடங்களில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை அடுத்து விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை, கோயம்பேடு முதல் ஆவடி, பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் புதிய விமான நிலையம் வரை என மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்திருக்கிறது.
பரந்தூர் விமான நிலையம்: ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட தொழில் பூங்காக்களுக்கு அருகிலேயே சென்னையின் புதிய விமான நிலையம் அமைய இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பரந்தூர் விமான நிலையம் மற்றும் அதனை சுற்றி இருக்கக் கூடிய பகுதிகளில் பெரிய அளவிலான வளர்ச்சி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் தொழில் நிறுவனங்களும் ஆலைகளும் அதிகமாக உள்ளன, இது தவிர பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேயும் அமைய இருப்பதால் பிரம்மாண்ட வளர்ச்சிக்கான வாய்ப்புள்ளது.
இப்படி சாலை பணிகள், விமான நிலையம், மெட்ரோ பணிகள் என பல உள்கட்டமைப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இவை அனைத்துமே சரக்கு போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன என்பதால் அடுத்த 5முதல் 10 ஆண்டுகளில் இந்தியாவின் தொழில் மையமாக சென்னை மாற இருக்கிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications