கௌதம் அதானியின் சொத்து மதிப்பு உயர.. இந்த 6 நிறுவனங்கள் தான் காரணமாம்!!

குஜராத்: அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கூடிய விரைவில் இவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என சர்வதேச நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன.

62 வயதாகும் கௌதம் அதானி , ஒட்டு மொத்த அதானி குழும நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் 1988 ஆம் ஆண்டு கமாடிட்டி டிரேடிங் நிறுவனமாகத் தான் அதானி குழுமத்தை தொடங்கினார்.

கௌதம் அதானியின் சொத்து மதிப்பு உயர.. இந்த 6 நிறுவனங்கள் தான் காரணமாம்!!


தற்போது இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனமாக அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சிமெண்ட் என பல்வேறு துறைகளிலும் தனது கிளைகளைப் பரப்பி மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

அண்மையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் கௌதம் அதானியன் சொத்து மதிப்பு 6, 75,790 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்களை இயக்கும் ஒரு குழுமமாக அதானி குழுமம் இருக்கிறது. அதானிக்கு இவ்வளவு பெரிய சொத்து சேர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது 6 நிறுவனங்கள் தான்.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் அதானிக்கு 75 சதவீத பங்குகள் இருக்கின்றன. அதானி பவரில் 72 சதவீதம், அதானி டோடல் கேஸில் 37 சதவீதம், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 73 சதவீதம், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் 66 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜியில் 56 சதவீதம் பங்குகள் அதானிக்கு சொந்தமாக இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர உயர அதானியின் சொத்து மதிப்பும் உயர்ந்து வருகிறது.

அதானி குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு மட்டுமே 3.63 லட்சம் கோடி ஆகும். இந்த நிறுவனம்தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்களை மேலாண்மை செய்து வருகிறது.

அது மட்டும் இன்றி மிகப்பெரிய அளவில் நிலக்கரி வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தை பொருத்தவரை 2023-24 ஆம் நிதி ஆண்டில் 11.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்தை ஈட்டி உள்ளது.

குஜராத்தை மாநிலத்தை சேர்ந்த கௌதம் அதானி கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டவர். மும்பையில் வைர வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர் பின்னர் குஜராத்துக்கு திரும்பினார். அங்கே தன்னுடைய சகோதரரின் தொழிலுக்கு உதவும் போக்கில் பிவிசி இறக்குமதி செய்து தன்னுடைய தொழில் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 1988 ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தை நிறுவினார். தற்போது இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றாக அதானி மாறியுள்ளது. Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+