இந்தியாவின் எரிசக்தி துறையில் ஒரு மாபெரும் புரட்சி அரங்கேற போகிறது. இந்தியாவின் முன்னணி தனியார் மின் உற்பத்தி நிறுவனமான ஜே.எஸ்.டபள்யூ எனர்ஜி (JSW Energy), வரும் 2030-ம் ஆண்டுக்குள் தனது முதல் அணுமின் நிலையத்தை அமைக்க போவதாக அறிவித்துள்ளது.
இதுவரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்த அணுசக்தி துறையில், தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் மத்திய அரசின் புதிய கொள்கை முடிவுகளுக்குப் பிறகு, களமிறங்கும் முதல் பெரிய தனியார் நிறுவனம் இதுவாகும். நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், நிலக்கரிக்கு மாற்றாக இந்த அணுமின் திட்டம் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சுமார் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இந்தத் திட்டம், பசுமை ஆற்றல் சந்தையில் JSW நிறுவனத்தின் பங்குகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க நகர்வு!
தொழிலதிபரான சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம், 2030-ம் ஆண்டுக்குள் தனது முதல் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் (NPCIL மூலம்) மட்டுமே இருந்து வந்த அணுசக்தி துறையில், மத்திய அரசு தனியார் முதலீடுகளை அனுமதிக்கும் முடிவை எடுத்த பிறகு, ஒரு தனியார் நிறுவனம் அணுமின் திட்டத்தை அறிவிப்பது இதுவே முதல்முறை. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகர்வாகும். இந்த திட்டமானது கார்பன் உமிழ்வை குறைத்து, 2070-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இந்தியாவின் இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த திட்டத்திற்காக சுமார் 40,000 கோடி ரூபாய் வரை இத்திட்டத்திற்காக முதலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு முக்கிய திட்டங்கள்!
அணுமின் நிலையத்தை அமைக்க ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம் தற்போது இரண்டு வகை தொழில் நுட்பங்களை ஆராய்ந்து வருகிறது. ஒன்று 700 மெகாவாட் PHWR. இது இந்தியாவின் சொந்த தொழில் நுட்பம். இந்தியாவில் ஏற்கனவே பல இடங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், அதற்கான உதிரிபாகங்கள் மற்றும் விநியோக சங்கிலி நம் நாட்டிலேயே வலுவாக உள்ளது. ஆக இதன் மூலம் கட்டுமான செலவையும், கால அவகாசத்தையும் குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. இரண்டாவது 1000 மெகாவாட் பெரிய அணு உலைகள். இவை பெரும்பாலும் சர்வதேச தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்தவை. அதிக அளவு மின்சாரத்தை ஒரே இடத்தில் உற்பத்தி செய்ய இது உதவும். ஆக இந்த இரு திட்டங்களையும் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.
என்ன திட்டம்?
இந்த திட்டத்தை சரியான நேரத்தில் முடிப்பதும், செலவைக் கட்டுக்குள் வைப்பதும் மிக முக்கியம். இதை உறுதி செய்த பிறகே எந்த தொழில்நுட்பம் மற்றும் எத்தனை உலைகள் என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறும் அணுசக்தி பிரிவு தலைவர் நீரஜ் அகர்வால் தெரிவித்துள்ளார். இருப்பினும் நேரடியாக பெரிய ஆலையை தொடங்காமல், முதலில் ஒரு சிறிய பைலட் (Pilot) நிலையத்தை அமைத்து, அதன் செயல்பாடுகளை புரிந்து கொண்ட பின்னரே பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஒரு மெகாவாட்டுக்கு சுமார் 16 முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுமானத் தொடக்கம் எப்போது?
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத் தேர்வு முடிந்தவுடன், கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ள நிறுவனம், அணுமின் நிலையங்களை பொறுத்தவரை, கட்டுமான காலக்கெடுவை சரியாக பின்பற்றுவது தான் மிகப்பெரிய சவால் என கூறியுள்ளது. மொத்த முதலீட்டை பொறுத்த வரையில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் திட்டத்தின் அளவைப் பொறுத்தே மொத்த முதலீட்டு தொகை எவ்வளவு என்பது தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications