இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் இன்று உலக நாடுகளின் கைகளில் ஜொலிப்பது போல, ஒரு நாள் உலகெங்கும் ஓடும் கார்களில் இந்திய தயாரிப்பிலான உதிரிபாகங்கள் இடம்பெறப் போகின்றன. அதற்கான ஒரு பிரம்மாண்ட ஐபோன் மாடல் வியூகத்தை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெறும் உற்பத்தியை மட்டும் பெருக்காமல், ஆப்பிள் நிறுவனம் கடைபிடிக்கும் அதே Zero Defect தரத்தை இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை ஒரு குவாலிட்டி ஹப்பாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம். மேட் இன் இந்தியா தயாரிப்புகள் இனி மலிவானவை மட்டுமல்ல, உலகிலேயே சிறந்தது என்ற பிம்பத்தை உருவாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்திய வாகனத் துறையின் இந்த குவாலிட்டி புரட்சி, முதலீட்டாளர்களுக்கு எந்த மாதிரியான ஜாக்பாட் வாய்ப்புகளைத் தரப் போகிறது என விரிவாகப் பார்ப்போம்.

மத்திய அரசின் திட்டம்?
மத்திய அரசின் இந்த திட்டமானது மெக்சிகோ, ஜப்பான் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலியில், இந்திய உற்பத்தியாளர்கள் இணைவதற்கு ஏதுவாக, சர்வதேச சந்தை தரத்தை எட்ட மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தியா 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன் ஏற்றுமதி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது., இதேபோன்றதொரு வெற்றிக் கதையைச் வாகன உதிரிபாக துறையிலும் உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கு நமது தரம் மற்றும் உற்பத்தி திறன் உலகளாவிய அளவுக்கு இணையாக இருக்க வேண்டும்.
இந்தியாவின் பங்கு கொஞ்சம் தான்?
நிதி ஆயோக் அறிக்கையின் படி, உலகளாவிய ஆட்டோமொபைல் ஏற்றுமதி தேவை சுமார் 2.2 டிரில்லியன் டாலராகும். ஆனால் இதில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 30 பில்லியன் டாலர் மட்டுமே., அதாவது வெறும் 1.4% மட்டுமே. இதற்கு உற்பத்தி திறனில் இருக்கும் சவால்கள் தான் காரணம். ஆக உற்பத்தி திறனை மேம்படுத்தி, தரத்தை உலகத் தரத்திற்கு இணையாக மாற்றினால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா தானாகவே ஒருங்கிணைக்கப்படும். தற்போது ஐரோப்பிய சந்தையில் இந்திய நிறுவனங்களின் பங்கு குறிப்பிட்ட அளவுக்கு உள்ளேயே இருக்கிறது. ஆக இந்திய அரசு, இந்திய நிறுவனங்கள் ஐரோப்பிய தரச் சான்றிதழ்களை பெற உதவி செய்தால், அதிக லாபம் தரும் ஐரோப்பிய சந்தைகளில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்புகள் அதிகம் இருக்கும். மேலும் உலகளாவிய நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவைத் தேர்வு செய்வது, இந்த நிறுவனங்களின் ஆர்டர் புக்கை பலப்படுத்தும். மேற்கொண்டு தொழில்நுட்ப மேம்பாடுகள், உற்பத்தி திறனை அதிகரித்து செலவுகள் குறைய வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும்.
இலக்குகள்?
இந்திய வாகன துறையின் வருவாய் வளர்ச்சியானது 2026ம் ஆண்டுக்குள் 200 பில்லியன் கோடி டாலர்கள் என்ற இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய 20 பில்லியன் மதிப்பிலான ஏற்றுமதி 2026-க்குள் 30 பில்லியனாகவும், 2030-க்குள் 100 பில்லியனாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு ஜப்பான் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ஏற்றுமதி மாதிரிகளைப் பின்பற்றி, இந்தியாவை ஒரு Global Auto Component Hub ஆக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இது நீண்ட கால அடிப்படையில் வேலை வாய்ப்பையும், அந்நிய நேரடி முதலீட்டையும் (FDI) ஈர்க்கும்.
இந்த சூழலில் முதலீட்டாளர்கள் சம்வர்த்தனா, யுனோ மிண்டா மற்றும் சோனா பி எல் டபள்யூ போன்ற பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications