அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

உலக நாடுகளின் வர்த்தகத்தை ஒற்றை ஆளாக தீர்மானிக்கும் அமெரிக்க டாலரின் சாம்ராஜ்யம் சரிய தொடங்கிவிட்டதா? உலக பொருளாதாரத்தையே தன் பிடிக்குள் வைத்திருக்கும் வாஷிங்டனுக்கு, சத்தமே இல்லாமல், ஒரு மிகப்பெரிய ஸ்கெட்ச் போட்டுள்ளன ஈரானும் சீனாவும்.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் இதயத்துடிப்பாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை மையமாக வைத்து, அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட துணிந்து விட்டன இந்த இரண்டு நாடுகள். டாலரை தவிர்த்துவிட்டு, தங்களுக்குள்ளேயே உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வதன் மூலம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை தூக்கி எறிய ஈரான் கைகோர்த்துள்ளது.

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

இந்த முக்கிய ஆட்டத்தில் ஈரானுக்கு பின்னால் இருந்து மூளையாக செயல்படுவது சீனாவா? டி-டாலரைசேஷன் (De-dollarization) என்ற பெயரில் உலக நாடுகளை தன் பக்கம் இழுக்கும் இந்த வியூகம், அமெரிக்க வல்லரசை எந்த அளவுக்கு பாதிக்கும்? ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் காட்டும் இந்த அதிரடி விஸ்வரூபத்தின் முழு பின்னணி என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போரானது இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் சற்றே ஆறுதல் அடைய தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா போன்ற அதிக இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு, மிகப்பெரிய ஆறுதலை கொடுத்துள்ளது. மறுபக்கம் இந்தியாவை விட பெரிய நுகர்வோரான சீனா சத்தமே இல்லாமல், அமெரிக்காவுக்கு எதிராக காய்களை நகர்த்தி கொண்டுள்ளது. சொல்லப்போனால் இதில் ஈரானும் பங்களித்துள்ளது.

ஈரான் மற்றும் சீனா டாலர் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தும் இந்த போர், இந்தியா போன்ற பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு ஒரே நேரத்தில் நன்மைகளையும் சவால்களையும் தரக்கூடிய ஒரு இரட்டை முனை கத்தி போன்றது. ஏனெனில் டாலர் ஆதிக்கம் குறைந்தால், இந்தியா ஈரானிடம் இருந்து நேரடியாக இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்க வழி பிறக்கும். இது டாலருக்கான தேவையை குறைத்து, இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தும். அதோடு டாலரை தவிர்த்து வர்த்தகம் செய்யும் போது, ஈரான் இந்தியாவுக்கு கணிசமான தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்க வாய்ப்புள்ளது. இது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க உதவும். பணவீக்க அச்சத்தில் இருந்தும் விடுபடலாம்.

ஆனால் அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பயப்படாமல், மாற்று நாணய முறையை பயன்படுத்தி தடையின்றி எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும். இதில் கவலையளிக்கும் விஷயம் , இந்தியா டாலரை தவிர்த்து வர்த்தகம் செய்தால், அமெரிக்காவுடனான ராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இது இந்திய ஐடி உள்ளிட்ட ஏற்றுமதி துறைகளை பாதிக்கக்கூடும்.

ஆனால் சீனா இதற்கெல்லாம் ஒரு துளி கூட தயக்கம் காட்டாமல் தன் ஆட்டத்தை ஏற்கனவே ஆடத் தொடங்கி விட்டது. பல ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கு எதிராக போட்டியாளர்களாக இருக்கும் நாடுகளை, பொருளாதார தடை போன்ற சில அம்சங்களால் முடக்குவதே அமெரிக்காவின் பாணி. கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாக்கி தங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ளும். ஆனால் இனி அந்த ஆட்டம் எல்லாம் செல்லுபடியாகாது எனலாம்.

ஏனெனில் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவின் டாலருக்கு நாணயத்திற்கு மாற்றாக சீன யுவானை (Yuan) முன்னிறுத்த, தெஹ்ரானும், பெய்ஜிங்கும் இந்த ஜலசந்தியை ஒரு கருவியாக பயன்படுத்த தொடங்கியுள்ளன.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் ஈரானிய அதிகாரிகளின் அதிகாரப்பூர்வமற்ற சுங்கச்சாவடி முறையின் கீழ், அந்த வழியாக செல்லும் வணிக கப்பல்களுக்கு சீன யுவானில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது சீனாவின் கரன்சி வலுவடைந்து, சீன பொருளாதாரத்துக்கு சாதகமாக மாறலாம். இதன் மூலம் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையையும் தாண்டி, வெற்றிகரமாக வலம் வர முடிகிறது. இதுவே அமெரிக்காவின் போருக்கு மற்றொரு மறைமுக காரணம் எனலாம். தொடர்ந்து ஈரான் சீனாவை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு சலுகைகளையும் கொடுத்து வருகிறது. மறுபுறம் சீனாவோ பிரிக்ஸ் நாடுகளையும் தன்னுடைய பாதைக்கு வர வலை வீசி வருகிறது. இது சீனா மற்றும் ஈரான் என இரு நாடுகளுக்குமே வெற்றி தான்.

அமெரிக்காவின் பெட்ரோடாலர் முறையின் முக்கியத்துவத்தை ஈரான் தெளிவாக புரிந்து கொண்டுள்ளது. அதேசமயம் சீனாவின் நோக்கமும் டாலரை போல வளர்ந்து வரும் நாடுகளில் தங்களது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும் என்பது தான். ஏற்கனவே ஈரானின் பெரும்பகுதி எண்ணெயை யுவான் அடிப்படையில்,தள்ளுபடி சலுகைகளுடன் சீனா வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஈரானுக்கும் அதற்கு பதிலாக சீனாவில் இருந்து முக்கிய அம்சங்களை இறக்குமதி செய்து கொள்கிறது. ஆக ஈரான் - அமெரிக்கா இடையே போர் சூழல் இருந்தாலும், எரிபொருள் விலை உயர்ந்தாலும், அதனால் சீனாவுக்கும் பிரச்சனையில்லை. ஈரானுக்கும் நிதி ரீதியாக பிரச்சனை இல்லை. கடந்த இரு வாரங்களில் மட்டும் 1.2 கோடி முதல் 1.37 கோடி பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதில் பெரும்பகுதி சீனாவுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் கடந்த 2024ல் ஆற்றிய ஒரு உரையில், யுவான் ஒரு பொதுவான சர்வதேச வர்த்தக நாணயமாகவும், உலகளாவிய கையிருப்பு நாணயம் ஆகவும் மாற வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கான செயல்பாடுகளைத் தான் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார் எனலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+