மத்திய கிழக்கு பகுதியில் இருக்கும் ஒரு குட்டி நாடு தான் இந்த இஸ்ரேல், உலகளாவிய ஏற்றுமதி சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கை வைத்திருந்தாலும், இஸ்ரேல் நாட்டின் இன்னோவேஷன் மற்றும் தொழில்நுட்ப திறமைக்குப் பெயர்பெற்றது இந்த நாடு. குறிப்பாக சைபர் செக்யூரிட்டி, பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் கிங் மேக்கராக உள்ளது.
உலகின் ஒரே யூத நாடு என்றால் அது இஸ்ரேல் தான், மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையில் உள்ள இந்த குட்டி நாடு. கடந்த சில வருடங்களாக தனது எல்லை பகுதியில் இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் இது பெரும் தாக்குதலாக மாறியது. இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என கொன்று குவிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வந்த ஈரான், லெபனான், எகிப்து என பல நாடுகள் வந்த நிலையில் தற்போது மீண்டும் வளைகுடா பகுதியில் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. நேற்று ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதல் பெரும் பேசுபொருளாக இருக்கும் வேளையில் இஸ்ரேல் பதிலடி கொடுப்பதற்கும் தயாராக உள்ளது.
இஸ்ரேல் குட்டி நாடாக இருந்தாலும் ஒரு வலுவான பொருளாதாரம் கொண்ட நாடு, அந்நாட்டின் மொத்த ஜிடிபியில் சுமார் 40 சதவீதம் ஏற்றுமதியைச் சார்ந்துள்ளது, இதன் பெரிய பலம். உலக போரில் நாட்டையும், வீட்டையும் இழந்த யூத மக்கள் தஞ்சம் புகுந்த இடம் தான் பாலஸ்தீனம்.
முதல் உலகப் போரில், பாலஸ்தீனத்தில் யூத அரசை அங்கீகரிப்பதற்காக சியோனிஸ்டுகள் ஆங்கிலேயர்களிடம் வற்புறுத்தியது மூலம் இஸ்ரேலின் உருவானது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் பாலஸ்தீனத்தின் மீதான தங்களது கட்டுப்பாட்டை விலக்கிக்கொண்டனர். இதன் பின்பு யூதர்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கு பெரும் பிரச்சனை வெடித்த நிலையில், ஐநா சபை அந்த பகுதியை அரபு மற்றும் யூத நாடுகளாகப் பிரிக்க முடிவு செய்து அறிவித்தது. ஆனால் இந்த முடிவை அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன.
ஆயினும், இஸ்ரேலியர்கள் 1948 இல் சுதந்திரத்தை அறிவித்து, இஸ்ரேலை தனது நாடாக அறிவித்துக்கொண்டனர். அதன் பின்னர் தொடர்ச்சியான போர்களை சந்தித்து வரும் இஸ்ரேல் படிப்படியாக தனது ராணுவத்தையும், உளவு துறையும், தொழில்நுட்ப துறையும், எலக்ட்ரானிக்ஸ், சைபர் செக்யூரிட்டி துறையில் சிறந்து விளங்க துவங்கினர்.
இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் உலகளவில் மிகவும் திறன் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் அரசு அந்நாட்டு ராணுவத்திற்காக சுமார் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை நிதியாக ஒதுக்கி வருகிறது. இதை தாண்டி இஸ்ரேலும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கும் காரணத்தால் அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப உபகரணங்களுக்கான எளிதாக வாங்கவும், பயன்படுத்தவும் முடியும் வாய்ப்பை கொண்டு உள்ளது. மேலும், இஸ்ரேலின் இராணுவத்தின் இணையத் திறன்களும், சைபர் செக்யூரிட்டி அம்சங்களும் உலகளவில் போற்றப்படக்கூடிய ஓன்று.
ஏற்றுமதி இஸ்ரேல் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதன் GDP-யில் சுமார் 40% பங்களிப்பு செய்கிறது. 2022 ஆம் ஆண்டில், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு மட்டும் 166 பில்லியன் டாலர் மதிப்புடையதாக உள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சரி, அதன் வர்த்தகத்திற்கும் சரி முக்கிய வலிமைகளில் ஒன்று அதன் உயர் தொழில்நுட்ப, அறிவியல் அடிப்படையிலான தொழில்கள் ஆகும். 1990 களிலிருந்து, மின்னணுவியல், அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள், மென்பொருள் மற்றும் ஆயுதங்கள் போன்ற துறைகள் பெரிய அளவிலான தொழில்துறை வளர்ச்சியைக் கண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், வைரங்கள் தான் இஸ்ரேல் நாட்டின் முதன்மையான ஏற்றுமதியாகத் திகழ்கிறது. அதைத் தொடர்ந்து இண்டிகிரேடெட் சர்க்யூட்டுகள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம், மருத்துவ கருவிகள் மற்றும் பொட்டாசியம் உரங்கள் ஆகியவை இரண்டாம் நிலைகளை பிடிக்கிறது. இஸ்ரேலின் முதன்மையான ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா, சீனா, பாலஸ்தீனம், அயர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகியவை உள்ளது.
இஸ்ரேலின் ஏற்றுமதிப் பொருட்கள் பட்டியல் மிகப்பெரியது, வெட்டப்பட்ட வைரங்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம், மருந்துகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், மருத்துவ கருவிகள், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள், விவசாய பொருட்கள், வேதிப்பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடை ஆகியவற்றை உள்ளடக்கியது.
More From GoodReturns

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!



Click it and Unblock the Notifications