மும்பை: எந்த ஒரு தொழிலிலும் நிலையான நீடித்த வளர்ச்சி தான் பெரிய அளவில் வெற்றியை அளிக்கும். இப்போது பெரிய நிறுவனங்களாக இருப்பவை எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே பணிபுரிந்து வந்த சிறு நிறுவனங்களாக தான் இருந்திருக்கின்றன. அப்படி சிறிய அளவில் தொடங்கப்பட்ட இக்ஸிகோ (Ixigo) நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளன.
Le Travenues Technology Ltd நிறுவனத்துக்கு சொந்தமான இக்ஸிகோ தளம் ஒரு டிராவல் புக்கிங் தளமாகும். ரயில் டிக்கெட், விமான டிக்கெட், பேருந்து டிக்கெட் மற்றும் வெளியூர்களில் ஹோட்டல்களை புக் செய்வது என ஒருங்கிணைந்த சேவையாக இந்த தளம் வழங்குகிறது. கடந்த வாரம் இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடப்பட்டது. செவ்வாய்க்கிழமை(ஜூன்18) இக்ஸிகோ ஐபிஓ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட போது இக்ஸிகோவின் பங்கு முதல் நாளிலேயே ஐபிஓ விலையான 93 ரூபாயில் இருந்து கூடுதலாக 78 சதவிகிதம் பிரீமியத்தில் வர்த்தகமானது. தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6,275.87 கோடி ரூபாய் ஆகும்.
தங்கள் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதையும் , முதன்முதலாக நிறுவனம் தொடங்கப்பட்டது குறித்தும் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான அலோக் பாஜ்பாய் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். Then Vs Now! என பதிவிட்டு இரண்டு படங்களையும் வெளியிட்டுள்ளார்.
கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களாக தங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என அவர் கூறியுள்ளார். அந்த படத்தில் அலோக் பாஜ்பாயும், ரஜினிஷ் குமாரும் ஒரு அறையில் இரண்டு கணினிகளை கொண்டு ஆரம்பக்காலத்தில் தங்கள் நிறுவனத்தை உருவாக்கிய படம் இடம்பெற்றுள்ளது. அதே போல நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலாகும் படமும் உள்ளது. இதில் இப்படி தான் தொடங்கியது என்றும், இப்போது இப்படி சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அலோக் பாஜ்பாயும், ரஜினிஷ் குமார் ஆகிய இருவரும் ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவர்கள் . இவர்கள் இருவரும் 2007ஆம் ஆண்டு இக்ஸிகோ என்ற டிராவல் புக்கிங் தளத்தை நிறுவினர்.
அப்போது முதலீட்டாளர்களை நாடி தங்களுக்கு மூலதன அளிக்கும்படி கேட்டதற்கு பலர், இதெல்லாம் வெற்றி அடையாது நீங்கள் இதனை கைவிட்டுவிடுங்கள் என கூறினார்களாம்.
ஆனால் இருவரும் மனம் தளராமல் தன்னம்பிக்கையோடு பணியாற்றி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் அளவுக்கு நிறுவனத்தை வளர்த்துள்ளனர். ஜூன் 19ஆம் தேதி பங்குச்சந்தையில் இந்த பங்கின் விலை 185.20 ரூபாய் என வர்த்தகமாகி வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications