மும்பை: இந்திய திரையுலக நட்சத்திரங்கள் திரைப்படங்களில் மூலம் வரக்கூடிய வருமானத்தை தங்களுக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியோ அல்லது தங்களுக்கு என சொந்தமாக ஒரு லைப் ஸ்டைல் பிராண்டையோ உருவாக்கி முதலீடு செய்கின்றனர். பல்வேறு பிரபலங்களும் நல்ல வளர்ச்சி அடையக்கூடிய தொழில்களை தேடி தேடி முதலீடு செய்கின்றனர்.
அப்படி ஒரு பாலிவுட் பிரபலம் எப்படி தங்கம் 1 லட்சம் ரூபாய் முதலீடு 100 கோடி ரூபாயாக வளர்ந்தது என்பதை விவரித்துள்ளனர். ஜாக்கி ஷெராஃப் பாலிவுட்டின் பிரபலமான நடிகர். 13 மொழிகளில் 250க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் கூட இவர் ஆரண்ய காண்டம் , நடிகர் விஜய்யுடன் பிகில், ரஜினிகாந்தின் ஜெயிலர், அஜித்தின் குட் பேட் அக்லி என பல்வேறு படங்களில் தோன்றியிருக்கிறார் .

திரைப்படங்களில் இவர் நடித்து சம்பாதித்த பணத்தை விட ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து இவருடைய குடும்பம் பல கோடிகளை வருமானமாக ஈட்டியிருக்கிறது. ஜாக்கி ஷெராஃபின் மனைவி ஆயிஷாவும் ஒரு நடிகை தான். இந்த தம்பதிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதலீட்டு முடிவை எடுத்துள்ளனர். அது தான் அவர்களின் வாழ்க்கையையே மாற்றி அமைத்திருக்கிறது.
நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கு ஆயிஷா ஷெராஃப் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சோனி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் தங்களை சந்தித்து தங்களின் சோனி எண்டர்டெயிண்ட் டெலிவிஷன் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறியதாகவும் அப்பொழுதுதான் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்றால் என்ன அது எப்படி செயல்படுகிறது, ஒரு தொழில் எப்படி நடத்தப்படுகிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் என தெரிவித்திருக்கார்.

நாங்கள் இருவரும் நன்றாக யோசித்து பல மாதங்கள் கழித்து தான் இதில் முதலீடு செய்தோம். 15 ஆண்டுகளில் சோனி டிவி நிறுவனத்தில் எங்கள் வசம் இருந்த பங்குகளை விற்பனை செய்துவிட்டோம், ஆனால் அது எங்கலுக்கு தந்த லாபம் எவ்வளவு தெரியுமா எதிர்பாராத பல மடங்கு லாபம் கிடைத்தது இது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் செய்த சிறந்த முதலீடு என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு லட்சம் ரூபாய் நாங்கள் முதலீடு செய்திருந்தோம் என்றால் அது 100 கோடி ரூபாயாக எங்களுக்கு திரும்ப வந்திருக்கிறது எனில் எங்களின் முதலீடு எத்தனை மடங்கு உயர்ந்திருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார். அண்மையில் தான் இவர்கள் இந்த நிறுவனத்தில் தங்கள் வசம் இருந்த பங்குகளை விற்பனை செய்தனர். தற்போது ஜாக்கி ஷெராஃபின் சொத்து மதிப்பு 212 கோடி ரூபாய் ஆகும்.
சரியான நேரத்தில் சரியான நிறுவனம் அல்லது முதலீட்டை தேர்வு செய்து நாம் செய்யும் முதலீடுகள் நமக்கு எதிர்பாராத லாபத்தை தரும், என்பதற்கு இவர்களே உதாரணம். பங்குச்சந்தைகளில் ஜாம்பவான்களாக திகழும் பலரும் இப்படி தான் வெற்றி பெறுகிறார்கள்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications