முகேஷ் அம்பானியுடன் போட்டியிடும் பெண்.. ரூ.7000 கோடி சாம்ராஜ்யத்திற்கு ஓனர்.. யார் இவர்?

வெளியூர்களுக்கு பயணம் செய்யும்போது கையில் தண்ணீர் எடுத்து செல்லாதவர்களும் உடனடியாக அருகில் இருக்கும் கடைகளில் வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்துவது வழக்கம். வாட்டர் பாட்டில்கள் என்று சொன்னதுமே நம் நினைவுக்கு வருவது பிஸ்லேரி என்னும் பிராண்டு. இந்த பிராண்டின் உரிமையாளரான ரமேஷ் சவுகானின் மகன் ஜெயந்தி சவுகான் இந்தியாவின் வாட்டர் பிராண்டின் எதிர்காலத்தை மாற்றிய ஆளுமைமிக்கத் தலைவராக உருவெடுத்துள்ளார்.

பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு ஜெயந்தி ஒரு தூணாக செயல்பட்டு வருகிறார். முதலில் தனது தந்தையான ரமேஷ் சவுகானின் தொழிலில் ஆர்வம் காட்டாத ஜெயந்தி, அதன் பிறகு படிப்படியாக தனது நிறுவனத்தில் ஈடுபடத் தொடங்கினார். நிதி நெருக்கடி ஏற்பட்டு பிஸ்லேரி நிறுவனத்தை விற்க முடிவு செய்யப்பட்ட இக்கட்டான நேரத்தில் தான் களத்தில் இறங்கி செயல்படத் தொடங்கினார். அவருடைய புதுமையான யோசனையும் தலைமத்துவமும் பிஸ்லேரி பிராண்ட் புதிய உயரங்களை அடைய உதவியுள்ளது.

 முகேஷ் அம்பானியுடன் போட்டியிடும் பெண்.. ரூ.7000 கோடி சாம்ராஜ்யத்திற்கு ஓனர்.. யார் இவர்?

50 ஆண்டுகால சாம்ராஜ்யம்: பிஸ்லேரி 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களிடையே தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் சிறந்த வாட்டர் பாட்டில் பிராண்டாக பிஸ்லேரி இருந்து வருகிறது. மேலும் 32 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 122-க்கும் மேற்பட்ட ஆலைகள் மற்றும் 4500-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களின் நெட்வொர்க்கை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அப்பால் துபாய், அபுதாபி வரை பிஸ்லேரி பிராண்ட் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.

2022 முதல் 2023-ஆம் நிதியாண்டில் பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனம் ரூ.2,300 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியதாக அறிவித்தது. இதனால் இந்த பிராண்டின் மொத்த மதிப்பு 7,000 கோடியாக உயர்ந்தது. ஆனால் குளிர்பான சந்தையில் அதிகரித்த போட்டியில் நிலவுகிறது. பிஸ்லேரி முன்னணியில் இருந்தாலும், ரிலையன்ஸ் நிறுவனம் தனது நுகர்வோர் தயாரிப்பான கேம்பா கோலாவை 2022-ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகம் செய்தது. அதோடு கொக்கோ கோலா, பெப்சிகோ மற்றும் டாடா கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் போன்ற பெரிய நிறுவனங்களும் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகின்றன.

கேம்பா கோலா விலையை எதிர்த்துப் போட்டியிட கொக்க கோலா தனது 400 மில்லி பாட்டிலின் விலையை 5 ரூபாய் குறைத்தது. ஏனெனில் கேம்பா கோலாவின் அரை லிட்டர் விலை வெறும் ரூ.20 மட்டுமே. இதைக் கருத்தில் கொண்டு கொக்க கோலா விலை குறைப்பை அறிவித்தது.

டாட்டா நுகர்வோர் தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க புதிய சுவையில் தங்களுடைய தயாரிப்புகளை வெளியிட்டன. அதே நேரம் பெப்சிகோ தனது விளம்பர நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் ஜெயந்தி தனது குடும்பத் தொழிலில் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை. இதனால் அவருடைய தந்தை பிஸ்லேரி நிறுவனத்தை டாடா குழுமத்திற்கு ரூ.7000 கோடிக்கு விற்கத் தயாரானார். இருப்பினும் தனது நிறுவனத்தின் பாரம்பரியத்தை தெரிந்து கொண்டு விற்க வேண்டாம் என்று முடிவு எடுத்த ஜெயந்தி பிஸ்லேரி நிறுவனத்தின் முழு பொறுப்பையும் ஏற்று நடத்த தொடங்கினார்.

ஃபேஷன் ஸ்டைலிங் மற்றும் போட்டோகிராபியில் ஆர்வம் மிகுந்த ஜெயந்தி தனது புத்திசாலித்தனமான வணிகத்தின் மூலமாக நிறுவனத்தை திறம்பட நிர்வகித்து வருகிறார். இன்று பிஸ்லேரி வாட்டர் பாட்டில்கள் பற்றி தெரியாத நபர்கள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் முன்னணி வாட்டர் பாட்டில் பிராண்டாக பிஸ்லேரி தனித்து நிற்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+