Layoff மத்தியில் 2023ல புதிய வேலைவாய்ப்பில் சேர முடியுமா? ஐடி ஊழியர்கள் நிலைமை எப்படி இருக்கு..?!

கால் வைக்கும் இடமெல்லாமல் கண்ணிவெடி என்பது போல எந்த பக்கம் திரும்பினாலும் பணிநீக்க அறிவிப்புகள் வந்துக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் புதிய வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களின் நிலை என்ன..? வேலைவாய்ப்பு சந்தையின் நிலவரம் எப்படியிருக்கு..? குறிப்பாக டெக் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உள்ளதா..? இந்த பணிநீக்கம் நிறைந்த காலக்கட்டத்தில் பிரஷ்ஷர்களின் நிலை என்ன..?

2022 பிற்பகுதியில் இருந்து உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது முன்னணி டெக் நிறுவனங்கள் 2வது சுற்று பணிநீக்கத்தை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. இதில் முதல் கட்டமாக பேஸ்புக் அடுத்த 2 மாதத்தில் 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய டெக் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருக்கு தெரியுமா..?

பணிநீக்கம்

பணிநீக்கம்

2022 ஆம் ஆண்டில் சுமார் 1000 டெக் நிறுவனங்கள் சுமார் 1,54,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, 2023ல் இதுவரையில் 97,020 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் பணிநீக்கம் செய்ய நிறுவனங்கள் பல காரணங்களை கூறினாலும் அனைத்திற்கும் அடிப்படை காரணம் செலவுகளை குறைப்பது தான்.

Hiring உயர்வு

Hiring உயர்வு

உலகம் முழுவதும் பணிநீக்கம் அதிகமாக இருந்தாலும் இந்தியாவில் Hiring நடவடிக்கைகள் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தான் உள்ளது, பிப்ரவரி மாதம், ஜனவரி மாதத்தை விடவும் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதேபோல் ஐடி துறையில் 10 சதவீத வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக Naukri JobSpeak தரவுகள் கூறுகிறது.

ஐடி துறை

ஐடி துறை

ஐடி துறை கடந்த மாதமாக சரிவில் இருந்த வேளையில் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, இதன் மூலம் ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது தெரிகிறது என Naukri.com நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான பவன் கோயல் தெரிவித்துள்ளார்.

முக்கிய தொழில்நுட்பம்

முக்கிய தொழில்நுட்பம்

ஐடி துறையில் தற்போது Analytics Managers, Big Data Engineers, Cloud System Administrators, Augmented Reality Quality Assurance (QA) Testers பிரிவு ஊழியர்களுக்கான டிமாண்ட் 20 முதல் 30 சதவீதம் வரையில் உள்ளது. மறுபுறம் DevOps மற்றும் DevSec engineers பிரிவு ஊழியர்களுக்கு 19-18 சதவீத டிமாண்ட் அதிகரித்துள்ளது.

 பிற துறைகள்

பிற துறைகள்

இதை தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறையில் 13 சதவீதம், ஹாஸ்பிடாலிட்டி துறையில் 10 சதவீதம், ஹெல்த்கேர் துறையில் 10 சதவீதம் ஊழியர்கள் டிமாண்ட் அதிகரித்துள்ளது. மேலும் வங்கியில், பிபிஓ, ரீடைல் பிரிவில் 7 முதல் 9 சதவீதம் டிமாண்ட் அதிகரித்துள்ளது.

முக்கிய நகரங்கள்

முக்கிய நகரங்கள்

மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் 2 இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, இதேபோல் 2ஆம் தர நகரங்களான சண்டிகர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

பிரஷ்ஷர்களின் நிலை என்ன..?

பிரஷ்ஷர்களின் நிலை என்ன..?

பணிநீக்கம் நிறைந்த காலக்கட்டத்தில் கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளியில் வரும் மாணவர்கள் அனைவருக்கும் இது கடுமையான காலமாக தான் இருக்கும். ஆனால் நம்பிக்கை அளிக்கும் வகையில் சுமார் 62 சதவீத இந்திய நிறுவனங்கள் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க ஆர்வமாக உள்ளதாக டீம்லீஸ் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

திறன்

திறன்


இதேபோல் இந்த போட்டி நிறைந்த காலக்கட்டத்தில் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதன் மூலம் எளிதாக வேலை வாங்க முடியும். இது பிரஷ்ஷர்களுக்கு மட்டும் அல்லாமல் புதிய வேலைவாய்ப்புகளை தேடும் அனைவருக்கும் பொருந்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+