குஜராத்: வாஷிங் பவுடர் நிர்மா என்ற விளம்பர பாடலை 90ஸ் கிட்ஸ்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. குறைந்த விலையில் துணிகளை சலவை செய்யும் பவுடர்களை உருவாக்கி மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கர்சன் பாய் படேல் உருவாக்கிய நிறுவனம் தான் நிர்மா .
கர்ஷன் பாய் படேல், வ1945 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். வேதியியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்த கர்சன் பாய் படேல் ஒரு ஆய்வகத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். 1969 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு யோசனை வந்தது.

மக்களுக்கு குறைந்த விலையில் அதே நிலையில் தரமான சலவை பவுடரை விற்பனை செய்ய வேண்டும் என எண்ணினார். அப்படிதான் அவர் 15,000 ரூபாய் முதலீடு செய்து சொந்தமாக டிடர்ஜென்ட் பவுடரை தயாரித்தார். அதற்கு அவருடைய மகளின் பெயரான Nirupama என்பதை சுருக்கி Nirma என பெயர் வைத்தார்.
அப்போது சஃர்ப் உள்ளிட்ட துணி துவைக்க பயன்படுத்தப்படும் பவுடர்கள் விலை அதிகமாக இருந்த நிலையில், இவர் ஒரு கிலோ கிராம் நிர்மாவின் விலை வெறும் 13 ரூபாய் மட்டுமே என நிர்ணயம் செய்தார். இதனை அடுத்து அவர் நிர்மா பவுடரை சைக்கிளில் இவ்வாறு நிர்மா பவுடரை வாங்கி பயன்படுத்தியவர்கள் வாய் வழியாக மற்றவர்களுக்கு தெரிவித்து படிப்படியாக வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.
நிர்மா நிறுவனம் இதனை அடுத்து தான் வாஷிங் பவுடர் நிர்மா என உருவாக்கிய விளம்பரம் நாடு முழுவதும் அனைவரும் மனதிலும் இடம் பிடித்தது. நிர்மா என்ற பிராண்டையும் மக்கள் மனதில் நிலை நிறுத்தியது.
டிமாண்ட் அதிகரித்ததை எடுத்து அவர் அடுத்ததாக சோப்பு மற்றும் பிற பொருட்களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். தற்போதைய சூழலில் நிர்மா லிமிடெட் நிறுவனம் 18 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த ஆண்டு வருமானம் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதன் மூலம் கர்சன் பாய் படேல் 34,000 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்துள்ளது. கர்சன் பாய் படேலை தொடர்ந்து அவரது மகன்களான ராகேஷ் படேல், கிரண் பாய் படேல் ஆகியோர் தற்போது நிர்மா நிறுவனத்தை கவனித்து வருகின்றனர்.
சர்வதேச நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் சொந்தமான குடிசை தொழிலாக நிர்மா பவுடரை தயாரித்து அதனை நாடு முழுவதும் கொண்டு சென்று , மக்களுக்கு தரமான பொருளை குறைந்த விலைக்கு வழங்கி தொழில் புரிய விரும்பும் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார் கர்சன் பாய் படேல்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications