கிண்டர் ஜாய் (Kinder Joy) சாக்லெட்டை பிடிக்காது என எந்த குழந்தைகளும் சொல்ல மட்டார்கள். சாக்லெட் மட்டுமில்லாமல் அதில் கிடைக்கும் சர்ப்பிரைசான பொம்மைகள் குழந்தைகளுக்கு ஆசையை தூண்டும். இதே எமோஷனை 90ஸ் கிட்ஸ்களுக்கு கொண்டு செல்ல கிண்டர் ஜாய் நிறுவனம் Harry potter தீம்-ல் அறிமுகம் செய்தது. இதை குழந்தகளை தாண்டி 90ஸ் கிட்ஸ்கள் தான் அதிகம் வாங்கி மிகப்பெரிய அளவில சக்சஸ் ஆனது.
கடந்த சில வாரங்களாக இணையதளத்தில் டிரெண்டானது மூலம் Harry potter எடிஷன் கிண்டர் ஜாய் சாக்லேட் கடைகளிலேயே கிடைக்காத அளவுக்கு சென்றது. பல 90ஸ் கிட்ஸ் Harry potter பொம்மைகளுக்காகவே அதிகப்படியான கிண்டர் ஜாய் சாக்லேட்களை வாங்கியதும் நடந்தது.

சாக்லெட் உடன் சர்ப்பிரைசான பொம்மைகள் அதுவும் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் பொம்மைகள் கிடைப்பதால் உலகம் முழுவதுமே கிண்டர் ஜாய் சாக்லெட்டுக்கு வரவேற்பு உண்டு. முட்டை வடிவிலான அமைப்பில் ஒரு பக்கம் சாக்லெட் மறுபக்கம் பொம்மை என வடிவமைத்து விற்பனை செய்கின்றனர்.
இத்தாலியை சேர்ந்த ஃபெரெரோ என்ற நிறுவனம் தான் கிண்டர் ஜாய் சாக்லெட் முட்டைகளை தயாரித்து விற்பனை செய்கிறது. 2001ஆம் ஆண்டு முதலில் இத்தாலியில் இது அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. பின்னர் 170 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. இந்தியாவிலும் அனைத்து கடைகளிலும் இதனை காண முடியும்.
குழந்தைகளுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காகவே ஃபெரெரோ நிறுவனம் தனி கவனம் செலுத்தி இந்த சாக்லெட் முட்டைகளை வடிவமைக்கிறது. அறிவியல் , தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களையும் குழந்தைகளின் மனநிலை பற்றி புரிந்த நிபுணர்களையும் பணிக்கு அமர்த்தி தான் கிண்டர் ஜாய் நிறுவனம் பொம்மைகளை தயாரிக்கிறது.
அண்மையில் இவர்கள் தங்கள் சாக்லெட் முட்டைகளில் ஒரு புது யுக்தியை கொண்டு வந்து கிண்டர்ஜாய் உற்பத்தியை அதிகரிக்க செய்தனர். அது தான் நம் நினைவுகளை தூண்டும் வியாபார யுக்தி. ஹாரி பாட்டர் புத்தகமும் அதில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் 90ஸ் கிட்ஸ்களின் மனதில் இருந்து நீங்காதவை. அந்த நினைவுகளை தூண்டி தான் பல கோடி ரூபாய் வருவாயை பெருக்கியுள்ளது கிண்டர்ஜாய்.
குழந்தைகளோடு நின்றுவிடாமல் அவர்களின் பெற்றோராக இருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கும் பிடித்தமானதாக கிண்டர் ஜாய் மாற வேண்டும் என ஹாரி பாட்டர் கதாபாத்திர பொம்மைகளை கொண்ட சாக்லெட் முட்டைகளை விற்பனை செய்ய தொடங்கினர்.
அப்படி 10 மில்லியன் ஹாரி பாட்டர் பொம்மை கொண்ட சாக்லெட் முட்டைகளை விற்பனை செய்த கிண்டர்ஜாய் அதில் 8 மில்லியனை விற்பனை செய்து லாபம் பார்த்துள்ளது. இந்தியாவில் மட்டும் 150 கோடி ரூபாய் என்ற அளவில் விற்பனை நடந்துள்ளது.
இதில் மகாராஷ்ட்ராவில் மட்டும் 35 கோடி ரூபாய், தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய், உத்தரபிரதேசத்தில் 28 கோடி ரூபாய், கர்நாடகாவில் 25 கோடி ரூபாய், மேற்கு வங்கத்தில் 20 கோடி ரூபாய் என ஹாரிபாட்டர் பொம்மை கொண்ட சாக்லெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பிளிங்கிட், ஸெப்டோ, இன்ஸ்டாமார்ட் ஆகிய தளங்களில் தான் அதிக ஆர்டர்கள் குவிந்தனவாம். இந்நிறுவனம் அமெரிக்காவில் ஹாரிபாட்டர் பொம்மை கொண்ட சாக்லெட்டுகள் விற்பனை செய்து 170 கோடி ரூபாயையும் , ஆஸ்திரேலியாவில் 100 கோடி ரூபாயும் வருமானம் ஈட்டியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications