தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இருந்து வருகிறது எல்டிஐ மைன்ட் டிரீ நிறுவனம். எல்&டி என்றாலே கட்டுமான மற்றும் பொறியியல் பணிகளுக்கும் நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளுக்கும் பெயர் போன நிறுவனம் என்பது தான் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தங்களுடைய அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்காக எல்&டி நிறுவனம் ஐடி துறையிலும் கால் பதிக்க விரும்பியது.
ஐடியில் கால்பதிக்க விருப்பம்: ஏற்கனவே ஐடித்துறையில் கால் பதித்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்த நிறுவனத்தை மிகச் சரியாகத் திட்டமிட்டு தட்டி தூக்கியது எல்&டி. எல்&டி நிறுவனம் ஐடி துறையில் கால் பதித்தது 2019 ஆம் ஆண்டு தான். இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமாக இருந்த எல்&டி ஐடி துறையில் நுழைய முடிவு செய்தது. ஆனால் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு ஐ டி துறையில் பெரிய அளவில் அனுபவம் கிடையாது .எனவே ஆரம்பத்திலிருந்து ஒரு நிறுவனத்தை தொடங்குவது என்பது இவர்களுக்கு சரிப்பட்டு வராது என்பதால் ஏற்கனவே இதில் வளர்ந்து வரக்கூடிய ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தலாம் என திட்டம் தீட்டியது.

4 நண்பர்கள் தொடங்கிய மைண்ட் டிரீ: அப்பொழுதுதான் மைண்ட் டிரீ என்ற ஒரு நிறுவனம் படிப்படியாக ஐடி துறையில் வளர்ச்சி அடைந்தது எல்&டி கவனத்திற்கு சென்றது. 1999 ஆம் ஆண்டு கிருஷ்ணகுமார் நடராஜன் , ராஸ்டோ ராவணன், சுப்ரதோ பாக்சி, பார்த்தசாரதி ஆகிய நான்கு நண்பர்கள் இணைந்து மைண்ட் ட்ரீ என்ற ஒரு ஐடி சேவை நிறுவனத்தை தொடங்கினார்கள். சிறிய அளவில் தொடங்கப்பட்டு படிப்படியாக வளர்ந்தது. நிறுவனத்தை தொடங்கிய நான்கு நண்பர்களுமே தங்கள் வசம் 13. 3% பங்குகளையும் மீதமிருந்த பங்குகளை முதலீட்டு நிறுவனங்களும் வைத்திருந்தன.
சரியாக திட்டமிட்டு நடத்து காட்டிய எல்&டி: இந்த சூழலில் எல்&டி நிறுவனத்தில் அதிகளவு பங்கு வைத்திருந்த காஃபி டே நிறுவன உரிமையாளர் சித்தார்த்தாவுக்கு மிகப்பெரிய கடன் பிரச்சனை ஏற்பட்டது . தன்னுடைய கடனை தீர்ப்பதற்காக மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் தன் வசம் இருந்த 20 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக அவர் அறிவித்தார் .இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது எல்&டி நிறுவனம். 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எல்&டி நிறுவனம் சித்தார்த்தாவிடமிருந்து 20 சதவீத பங்குகளையும் 3000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது . இதன் மூலம் மைண்ட் டிரீ நிறுவனத்தில் அதிக பங்குகளை கொண்டிருக்கும் ஒரு பங்குதாரராக எல்&டி மாறியது.

3 மாதங்களில் வாங்கியது: இதன் பிறகுதான் எல்&டி நிறுவனம் பங்குச்சந்தையில் மைண்ட் டிரீ நிறுவனத்தின் பங்குகளை படிப்படியாக வாங்க தொடங்கியது. இந்த முயற்சியை எதிர்த்து மைண்ட் ட்ரீ நிறுவனர்கள் போராடினர். ஆனால் எல்&டி தான் வென்றது. 2019 ஜூன் மாதம் எல்&டி நிறுவனம் மைண்ட் டிரீ நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனக்கு சொந்தமானதாக மாற்றி இருந்தது. நிறுவனத்தை தொடங்கிய கிருஷ்ணகுமார் நடராஜன், ராவணன், சுப்ரதோ பாக்சி , பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரும் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். கிட்டதட்ட 20 ஆண்டு காலமாக தாங்கள் கட்டி எழுப்பிய கோட்டையை எல்&டி இடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் கனத்த இதயத்துடன் வெளியேறும் சூழல் உண்டானது.
2019ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த கையகப்படுத்தலை ஆங்கிலத்தில் Hostile take-over என அழைக்கின்றனர். அதாவது ஒரு நிறுவனத்தை நிறுவியவர்களின் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அவர்களிடம் இருந்து பறிப்பது என அர்த்தம்.


Click it and Unblock the Notifications