கோடை காலம் வந்துவிட்டால் போதும் ஏர் கண்டிஷனர்கள், ஃபேன் போன்றவை இல்லாமல் இருக்க முடியாது. இன்னும் சில வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 24 மணி நேரமும் ஏசி ஆனில் இருக்கும். ஏசி வாங்கும்போது நிறுவனங்களின் தரப்பில் எக்ஸ்பைரி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவற்றின் செயல் திறன் அடிப்படையில் பார்க்கும்போது காலப்போக்கில் ஏசி-யின் திறன் குறைவதைக் காண முடியும்.
சிலர் செகண்ட் ஹாண்ட் ஏசி அல்லது பழைய ஏசியை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற பழுதடைந்து அல்லது பழைய ஏசி-களைப் பயன்படுத்துவதால் அதிக மின்சாரக் கட்டணம் வருவதோடு அடிக்கடி பழுது செலவுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

ஏசிக்கு காலாவதி தேதி உண்டா?: ஏசிகளில் அதிகாரப்பூர்வமாக எக்ஸ்பைரி தேதி குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் அதற்காக அவை என்றென்றும் நிலைத்து ஓடிக்கொண்டே இருக்கும் என்று கூறிவிட முடியாது. பிற எலக்ட்ரானிக் சாதனங்களைப் போலவே ஏர் கண்டிஷனர்களும் காலப்போக்கில் பழைய பொருளாக மாறும். இதனால் அவற்றின் செயல் திறனும் குறையத் தொடங்கும். பழைய ஏசி-யைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அவற்றின் திறன் குறைந்து அதிக மின்சார செலவுகள் ஏற்படும். அதோடு பாதுகாப்பு குறித்த அச்சங்களும் எழலாம்.
ஒரு ஏசி எவ்வளவு காலம் நீடிக்கும்?: தொழில் வல்லுனர்கள் கூற்றுப்படி ஒரு ஏர் கண்டிஷனரின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 15 ஆண்டுகள். ஆனால் உண்மையான ஆயுட்காலம் ஏசியின் வகை, உங்களுடைய பராமரிப்பு பழக்க வழக்கங்கள், பயன்படுத்தும் முறைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். தொடர்ந்து சர்வீஸ் செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தால் 15 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும். இவற்றோடு ஒப்பிடுகையில் விண்டோ ஏசிகள் குறைவான ஆயுட்காலத்தை கொண்டவை. இவை 8 முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட வேண்டும்.
உங்கள் ஏசியை எப்போது மாற்ற வேண்டும்?:
அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகள்: உங்களுடைய பழைய ஏசியில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு நீங்கள் அதற்கான மெக்கானிக்கை தொடர்ந்து அழைக்க வேண்டிய நிலை இருந்தால்.. புதிதாக ஒன்றை வாங்குவது நல்லது. இது உங்கள் ஏசி எக்ஸ்பயரி ஆனதற்கான அறிகுறி என்று வைத்துக் கொள்ளலாம். பழுது பார்க்க மீண்டும் மீண்டும் செலவழிப்பதற்கு பதிலாக ஒரு புது ஏசியை வாங்கலாம்.
குறைந்த காற்று: உங்கள் வீட்டின் ஏசி ஏற்கனவே குளிரூட்டியது போல அல்லாமல் குறைந்த காற்றை வெளியே அனுப்பினால் கம்ப்ரஸர் பலவீனமடைந்து விட்டது என்று அர்த்தம். இத்தகைய சந்தர்ப்பங்களில் புது ஏசி வாங்குவதைக் கருத்தில் கொள்ளலாம்.
அதிக மின்சாரக் கட்டணம்: பழைய ஏசிகள் அதிக மின்சாரத்தை எடுக்கும். தற்போது குறைந்த மின்சாரத்தை எடுக்கும் 5 ஸ்டார் ஏசிகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே எலக்ட்ரிசிட்டி பிரச்சினை இருந்தால் புத்திசாலித்தனமாக புது ஏசி வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
சத்தங்கள்: ஏசியிலிருந்து விசித்திரமான சத்தம் வருவது அல்லது இரைச்சல் ஏற்படுவது போன்றவை இருந்தால்.. இவை உங்கள் ஏசி எக்ஸ்பயரி ஆனதை குறிக்கும்.
நீர்க்கசிவு: உங்கள் ஏசியில் இருந்த நீர் கசிந்தால் உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும். ஒருவேளை கசிவுகள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் அந்த ஏசியை மாற்றுவது தான் சிறந்த வழி.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications