விளாடிமிர் புதின் சகாப்தம் முடிந்தது..? 2 வருடம் தான்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வல்லரசு நாடுகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இன்னும் எத்தனை வருடம் ஆட்சியில் இருப்பார் என்ற கேள்விக்கு டிராகன்ஃபிளை என்னும் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் பகுப்பாய்வு நிறுவனம் முக்கியமான ஆய்வு செய்து பதிலை அறிவித்துள்ளது.

 

உக்ரைன் மீதான போரின் மூலம் ரஷ்யாவின் ஆதிக்கம், புதின் ஆதிக்கம் இரண்டையும் உலக நாடுகளுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டு உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய நாடுகள் தொடர்ந்து தடை விதித்த போதிலும், ரஷ்யா தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.

ரஷ்யாவுக்கு விழுந்த அடுத்தடுத்த அடி.. புதின் அரசுக்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன? ரஷ்யாவுக்கு விழுந்த அடுத்தடுத்த அடி.. புதின் அரசுக்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

டிராகன்ஃபிளை

டிராகன்ஃபிளை

டிராகன்ஃபிளை-யின் கணிப்புகளைப் பிரிட்டன் பத்திரிக்கை டெய்லி மிரர் வெளியிடப்பட்டது, பிப்ரவரி 24 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது படையெடுப்பு மூலம் தனது அதிபர் பதவியின் எதிர்காலத்தைப் பணயம் வைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

வல்லரசு நாடுகள்

வல்லரசு நாடுகள்

பல வல்லரசு நாடுகளின் எதிர்ப்பையும் தாண்டி உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது மூலம் அதற்கான விலையைப் புதின் கொடுக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளது டிராகன்ஃபிளை கணிப்புகள். இந்தக் கணிப்பு ரஷ்ய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளாடிமிர் புதின்
 

விளாடிமிர் புதின்

ரஷ்யாவின் அரசியல் பிரச்சனைக்கு மத்தியில் முதல் முறையாக டிசம்பர் 1999 முதல் மே 2000 தற்காலிக அதிபராக இருந்த புதின், மே 2000 முதல் மே 2008 மீண்டும் அதிபரானார். இதன் பின்பு மே 2012 முதல் ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் இருக்கிறார்.

அதிக்கம்

அதிக்கம்

இதற்கு முன்பு ஆகஸ்ட் 1999 - மே 2000 மற்றும் மே 2008 - மே 2012 என இரு முறை ரஷ்யாவின் பிரதமராக இருந்தார். இதன் முன் ரஷ்ய பாதுகாப்புத் துறையில் பல பரிவில் முக்கியப் பதவிகளில் இருந்துள்ளார் விளாடிமிர் புதின். அரசியல், பாதுகாப்புத் துறை எனப் பலவற்றில் சிறந்து விளங்குபவர் புதின்.

நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் விதித்துள்ள காரணத்தால் ரஷ்யாவில் நிதி நெருக்கடிக்கு வழிவகுத்தால், புடின் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்க மாட்டார் என்று டிராகன்ஃபிளை கணித்துள்ளது எனத் தி சன் பத்திரிக்கை கூடத் தெரிவித்துள்ளது.

 அமெரிக்க, பிரிட்டன், ஐரோப்பா

அமெரிக்க, பிரிட்டன், ஐரோப்பா

அமெரிக்க, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய 3 பெரிய வல்லரசு நாடுகளும் கடுமையான தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளதன் மூலம் ஏற்கனவே கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் நிதி நெருக்கடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

மாற்று வழிகள்

மாற்று வழிகள்

ஆனால் இதே வேளையில் ரஷ்யா தனது வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தப் பல புதிய திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது. இதனால் நிதி நெருக்கடி போன்ற மோசமான பிரச்சனைகள் வராது என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா, சீனா

ரஷ்யா, சீனா

இதேபோல் புதின் ஆட்சியை இழந்தால் புதிய அதிபரால் உலக நாடுகளின் தடை எதிர்த்து ரஷ்யாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர முடியுமா என்பது கேள்விக்குறி தான். இதேவேளையில் சீனாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது, அதாவது ஜி ஜின்பிங் அதிபர் பதவியில் இருந்த மார்ச் 2023ல் விலகுகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How longer Vladimir Putin be in Superpower? What Dragonfly decodes

How longer Vladimir Putin be in Superpower? What Dragonfly decodes விளாடிமிர் புதின் சகாப்தம் முடிந்தது..? 2 வருடம் தான்..!!
Story first published: Tuesday, April 12, 2022, 1:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X