நம் நாட்டில் ஆதார் கார்டு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பல பணிகளுக்காக தேவைப்படும் முக்கியமான அடையாள ஆவணமாக செயல்பட்டு வருகிறது. வங்கி சேவைகளை பெறுவது முதல் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. எனவே ஆதார் கார்டை உங்கள் மொபைல் நம்பருடன் இணைப்பதும் கட்டாயம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆதார் தொடர்பான பல சேவைகளை ஆன்லைனில் தான் பெறுகிறோம். இந்நிலையில் ஒரே ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுவதால் OTP சரிபார்ப்பு செயல்முறையை செய்வதற்கு கண்டிப்பாக ஆதார் கார்டுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு மொபைல் நம்பருடன் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம்?: ஆன்லைன் ஆதார் சேவைகளைப் பெற, உங்கள் மொபைல் நம்பருடன் ஆதார் கார்டை இணைப்பது அவசியம். அப்படியானால் ஒவ்வொரு ஆதார் அட்டைதாரருக்கும் தனித்தனி மொபைல் நம்பர் தேவையா? என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில் இல்லை என்பதே.
எந்த குடும்ப உறுப்பினரின் ஆதார் கார்டை வேண்டுமானாலும் ஒரே மொபைல் நம்பருடன் இணைக்க முடியும். ஒரே மொபைல் நம்பருடன் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ஆதார் இணைப்பிற்கு ஒரு முக்கிய உறுப்பினரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம்.
மொபைல் நம்பரை ஆதாருடன் இணைப்பதன் நன்மைகள்: உங்கள் மொபைல் நம்பரை ஆதார் கார்டுடன் இணைப்பது, OTP அடிப்படையிலான செயல்முறையை எளிதாக்கும். பல்வேறு ஆன்லைன் சேவைகளுக்குத் தேவையான OTP-களை பெறுவதற்கு கண்டிப்பாக மொபைல் நம்பர் தேவை.
எனவே அனைத்து ஆதார் அட்டைதாரர்களும் தங்கள் மொபைல் நம்பரை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று UIDAI பரிந்துரைக்கிறது. கார்டுதாரரிடம் மொபைல் ஃபோன் இல்லையென்றால், ஆதார் இணைப்புக்கு அவர்கள் குடும்ப உறுப்பினரின் எண்ணைப் பயன்படுத்தலாம்.
ஒரே நம்பரை பயன்படுத்துவதன் விளைவுகள்: ஒரே ஒரு மொபைல் நம்பரை பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் கார்டை இணைத்துக் கொள்ளலாம் என்று UIDAI அறிவித்தாலும்.. சில நேரங்களில் OTP செயல்முறையை முடிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
உதாரணமாக குடும்ப உறுப்பினரின் ஒரே ஒரு மொபைலில் நம்பரைக் கொண்டு ஆதார் கார்டை இணைத்த மற்றொரு நபர் ஏதேனும் சேவையைப் பெற OTP தேவைப்பட்டால்.. அந்த நேரத்தில் போன் செய்து கேட்டு அதன் பிறகு செயல்முறையை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
இதனால் காலதாமதம் ஆகலாம். அதுவும் சில OTP நம்பரை குறிப்பிட்ட வினாடிக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லை எனில் அவை எக்ஸ்பைரி ஆகிவிடும். இதுபோன்ற சிக்கல் இல்லாமல் இருந்தால் ஒரே ஒரு நம்பரை வைத்து எத்தனை ஆதார் கார்டை வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications