கிரெடிட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து பணம் செலுத்துவது எளிதாகி உள்ளது. தேவையான நேரங்களில் கிரெடிட் கார்டுகளைப் பெற்று மக்கள் செலவழிக்க உதவிகரமானதாக இருக்கிறது. மேலும் அவசர காலங்களிலும் கை கொடுக்கும் வகையில் பலர் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவபவராக இருந்தால்.. இந்தியாவில் ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க முடியும்? என்று தெரிந்து கொள்வது அவசியம். நீங்கள் பல கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தால் அதற்கான நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் ஒருவர் ஒரே நேரத்தில் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க முடியும்?: கிரெடிட் கார்டுகள் என்பது குறுகிய கால கடன் என்று வைத்துக் கொள்ளலாம். ஷாப்பிங் செய்தல், பில் செலுத்துதல் போன்றவற்றிற்கு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம். ஒரு நபர் ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க முடியும். இதற்கான குறிப்பிட்ட வரம்பு என்று எதுவும் இல்லை. ஆனால் அதனை சரியான முறையில் நிர்வகித்து உரிய தேதிக்குள் முழுமையாக செலுத்துபவர்கள் மட்டுமே அதிக கிரெடிட் கார்டுகளைப் பெற வேண்டும்.

பல கிரெடிட் கார்டுகள் பெறுவதற்கான தகுதி: பெரும்பாலான கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 4 முதல் 5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிக சலுகைகளை வழங்குகின்றன. கிரெடிட் கார்டு பெறுவதற்கு.. விண்ணப்பதாரர் சம்பளம் பெறுபவராக அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும். அதிக கிரெடிட் ஸ்கோரும் அவசியம். ஏனெனில் இது விண்ணப்ப செயல் முறையை விரைவுப்படுத்தும்.
பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதன் நன்மைகள்: பல கிரெடிட் கார்டுகளைப் பெறுவது எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் செலவுகளுக்கான பாதுகாப்பை வழங்குகிறது. அதே போல ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஒவ்வொரு வகையான நன்மைகள் இருக்கும்.
அதன் மூலம் நீங்கள் அதிக அளவிலான பலன்களையும் பெற முடியும். சில கிரெடிட் கார்டுகளுக்கு இலவச ஓய்வறையை விமான நிலையங்களில் பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படும். சில கிரெடிட் கார்டுகளில் கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகள் வழங்கப்படும். கிரெடிட் கார்டுகளைப் பொறுத்து இந்த சலுகைகள் மற்றும் ரிவார்டுகள் மாறும்.
பல கிரெடிட் கார்டு வைத்திருப்பதன் தீமைகள்: பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதால் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் அதிக பில்களை செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். மேலும் சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியாவிட்டால் நிதிச் சுமை அதிகரிக்கும். ஏனெனில் கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது.
ஜாயினிங் கட்டணம் மற்றும் வருடாந்திர கட்டணங்கள் போன்ற சில கட்டணங்களையும் செலுத்த வேண்டி இருக்கும். குறுகிய காலத்தில் பல கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications