தற்போது கிரெடிட் கார்டு வழங்குனர்கள் அதிகரித்துவிட்டனர். அதற்கு மிக முக்கிய காரணம் தங்களுக்கு பணத் தேவை ஏற்படும்போது செலவுகளை சமாளிக்கும் பொருட்டு அதிக அளவில் கிரெடிட் கார்டுகளை மக்கள் தேர்வு செய்கின்றனர். இதன் காரணமாக பல கிரெடிட் கார்டு வழங்குனர்களும் பல்வேறு சலுகைகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். அதிலும் சில வழங்குனர்கள் கிரெடிட் கார்டு பெறாத வாடிக்கையாளர்களுக்கு கால் செய்து அவற்றின் சலுகைகளை எடுத்துக் கூறி கிரெடிட் கார்டுகளை பெற வைக்கின்றனர்.
இதனால் ஏராளமானோர் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர் .அதிலும் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கின்றனர். இந்த பதிவில் இந்தியாவில் பிறந்த ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க முடியும்? என்பது குறித்து பார்ப்போம்.

முன்பெல்லாம் பெரும்பாலான பணப்பரிவர்த்தனை ரோக்கமாக நடந்தது. ஆனால் தற்போது கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், யுபிஐ டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் என பலவற்றையும் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து வருகிறோம். எந்த ஒரு பொருட்களை வாங்குவதானாலும் சரி.. சேவையை பெறுவதானாலும் சரி.. கிரெடிட் கார்டுகள் வசதியான ஒன்றாக மாறியுள்ளன.
அதிலும் குறிப்பாக மொத்தமாக பணத்தை செலுத்தி எந்த பொருளையும் வாங்க முடியாதவர்களும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி EMI தவணையில் வாங்குகின்றனர். சில கிரெடிட் கார்டுகள் சிலவற்றுக்கு சலுகைகள் மற்றும் கேஷ் பேக்குகளை வழங்குகின்றன. இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பலரும் வைத்திருப்பார்கள். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்து இருக்கலாமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதற்கு எந்தவித வரம்பும் இல்லை ஒருவர் வைத்திருக்கக் கூடிய கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் பேங்க் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. தனிநபர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விரும்பும் கடன் வரம்புடன் கிரெடிட் கார்டுகளை பெறலாம். இதன் மூலம் டிராவல் ரிவார்ட்ஸ், தள்ளுபடிகள், கேஷ் பேக் ரிவார்ட்ஸ் போன்ற பல்வேறு சலுகைகளை கார்டுதாரர்கள் பெற முடியும். அதோடு மட்டுமின்றி கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதமும் பிற கடன்களை விட அதிகமாகும்.
எனவே சரியான முறையில் உங்கள் பில்லை செலுத்தும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கிரெடிட் கார்டுகள் கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. ஒருவரிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் எத்தனை கிரெடிட் கார்டுகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் மோசமான கிரெடிட் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு நீங்கள் விரும்பிய கிரெடிட் கார்டு கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications