ஆதார் கார்டு நம் நாட்டில் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை தான் அதிகாரிகள் கேட்கின்றனர். அரசாங்க மானியங்கள், சலுகைகள் என பலவற்றுக்கும் ஆதார் கார்டு இன்றியமையாததாக மாறிவிட்டது. இந்நிலையில் பலருக்கும் ஒரு கேள்வி எழலாம். அது என்னவென்றால் ஒரே ஒரு மொபைல் நம்பரை வைத்து எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம்? அதே வேலை ஒரு ஆதார் கார்டுக்கு எத்தனை ஆதார் நம்பரை இணைக்கலாம்? என்று.. இதற்கான பதிலை இந்த பதிவில் பார்ப்போம்.
ஒரே ஒரு மொபைல் நம்பரை எத்தனை ஆதார் கார்டுடன் இணைக்கலாம்?: இதற்கு எந்தவித வரம்பையும் UIDAI வைக்கவில்லை. அதாவது ஒரே ஒரு மொபைல் நம்பரை குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரே ஒரு நம்பரை வைத்து OTP பெறுவது தான். சில சேவைகளை பெறுவதற்கு OTP விவரங்கள் தேவைப்படும்.

OTP விவரங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த OTP எக்ஸ்பைரி ஆகிவிடும். உதாரணமாக ஒருவருடைய நம்பரை மற்றொருவரும் ஆதார் கார்டில் இணைத்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சிம் கார்ட் OTP பெறுபவரிடம் இருந்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை. அதுவே வேறு ஒருவரிடம் இருந்து OTP பெற்று அதனை தொலைபேசியில் கேட்டு பயன்படுத்த வேண்டும் எனும் பட்சத்தில் சில சிக்கல்கள் எழலாம்.
ஒரு ஆதார் கார்டுடன் எத்தனை மொபைல் நம்பரை இணைக்கலாம்?: சிலருக்கு என்னிடம் 2 மொபைல் நம்பர்கள் உள்ளன. இரண்டையும் ஆதார் கார்டுடன் சேர்க்கலாமா? என்ற குழப்பம் வரும். அப்படி செய்ய முடியாது. ஒரு ஆதார் கார்டுக்கு ஒரே ஒரு நம்பரை மட்டும்தான் இணைக்க முடியும். எந்தவித சேவையை பெற வேண்டும் என்றாலும் அந்த ஒரு நம்பருக்கு தான் OTP அனுப்பப்படும். உங்களிடம் 2 சிம் கார்டுகள் இருந்தாலும்.. அதில் ஏதேனும் ஒன்றைத்தான் ஆதாருடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
ஆனால் நீங்கள் தற்போது ஆதாருடன் இணைத்திருக்கும் நம்பர் ஏதேனும் பிரச்சினை காரணமாக நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு பதிலாக வேறொரு நம்பரை இணைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு ஆதார் கார்டுக்கு ஒரே ஒரு நம்பர் தான். 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் கார்டு விவரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு UIDAI பரிந்துரைக்கிறது.
இதற்கான முக்கிய காரணம் சிலர் வீடு மாறி இருப்பார்கள், சிலர் திருமணம் ஆகி தங்கள் கணவரின் பெயரை பயன்படுத்த தொடங்கி இருப்பார்கள், இப்படி சில சூழ்நிலைகளில் ஆதார் கார்டு தகவல்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும். உங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி போன்ற அரசாங்க ஆவணங்களில் அனைத்து தகவல்களும் துல்லியமானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் இ-கேஒய்சி செயல்முறை செய்வதில் சிக்கல்கள் எழலாம். இதன் காரணமாக வங்கிகளில் உங்களுடைய அக்கவுண்ட் பிளாக் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications