ஸ்மார்ட் போன் இல்லாமல் ஒரு நாள் கூட வாழ முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவை நம் வாழ்வில் ஒரு அங்கம் ஆகிவிட்டன. ஸ்மார்ட் போன் உபயோகிப்பதற்கு சிம் கார்டு அவசியமான ஒன்று. இதனால் பலரும், பல சிம்கார்டுகளை வைத்திருக்கின்றனர். அதிகப்படியாக சிம் கார்டுகளை வைத்திருந்தால், அவை பெரும் பிரச்சனையாக மாறிவிடலாம். எனவே, இந்தப் பதிவில் ஒருவர் எத்தனை சிம் கார்டுகள் வைத்திருக்க முடியும் என்பதைப் பார்ப்போம்.
அபராதம் மற்றும் தண்டனைகள்: ஜூன் 26, 2023 அன்று, டெலிகாம் சட்டம் அமலுக்கு வந்தது. DoT விதிமுறைகளின்படி ஒரு நபர் தனது ஆதாருடன் 9 சிம்களை (SIM) மட்டுமே வாங்க முடியும். ஒருவரிடம் 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருந்தால், அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.

அடுத்தடுத்தும் இதே போல் சிம் கார்டுகளை வாங்கி குவித்தால் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும்,மோசடி முறையில் சிம் கார்டுகளை பெற்றால் ரூ. 50 லட்சம் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு உங்கள் ஆதாருடன் எத்தனை சிம் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் ஒரு சிம் கார்டை பயன்படுத்தவில்லை என்றால், அந்த சிம் கார்டை உங்கள் ஆப்ரேட்டரிடம் கூறி துண்டித்து விடலாம்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட சிம் கார்டுகள் : உங்கள் ஆதாருடன் எத்தனை சிம் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை பற்றியும், அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றியும், நீங்கள் உபயோகிக்காத சிம் கார்டுகளை எவ்வாறு டிஆக்டிவேட் செய்வது என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
DoT-இன் புதிய இணையதளத்தைப் பயன்படுத்தி இந்த செயல் முறையை சில நிமிடங்களில் செய்து முடிக்கலாம். DoT-இன் சஞ்சார்சதி (Sancharsathi.gov.in) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலம் பயனர்கள் அவர்களின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய அனைத்து சிம் கார்டு நம்பரையும் சரி பார்த்துக் கொள்ள முடியும்.
உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களின் எண்ணிக்கையை எவ்வாறு கண்டுபிடிப்பது?:
ஸ்டெப் 1: நீங்கள் முதலில் அரசு தொடங்கியுள்ள https://sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தின் உள்ளே செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அதில் கொடுக்கப்பட்டிருக்கும் "Know your mobile connection" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: அதில் உங்களுடைய மொபைல் நம்பர், கேப்ட்ச்சா கோடை (Captcha) என்டர் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: நீங்கள் என்டர் செய்த மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 5: அதில் உங்கள் ஆதார் நம்பருடன் தொடர்புடைய அனைத்து எண்களையும் காண்பிக்கும்.
இதே இணையதளத்தின் உதவியால் உங்களுக்கு தேவைப்படாத அல்லது நீங்கள் பயன்படுத்தாத நம்பரை பிளாக் செய்யலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications