ஆதார் கார்டு நம் நாட்டின் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இதில் தனி நபரின் பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், முகவரி போன்ற ஆதார் தகவல்கள் இருக்கும். இந்த தகவல்கள் அனைத்தும் துல்லியமானதாக இருக்க வேண்டும். தற்போது வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை இ-கேஒய்சி செயல்முறை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இந்த செயல்முறைக்கு கண்டிப்பாக ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பிற அரசாங்க ஆவணங்களில் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். இ-கேஒய் சி செயல்முறை மட்டுமின்றி பிற சேவையை பெறுவதற்கும் ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்படும்.
சில மாநிலங்களில் குடும்பப் பெயர் ஒரு தனி நபரின் பெயருக்கு பின்னால் சேர்க்கப்பட்டிருக்கும். அப்படி குடும்ப பெயரை பயன்படுத்துபவராக இருந்தாலும் பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆவணங்களில் ஒரே மாதிரியாக சீராக இருக்க வேண்டும். இல்லை எனில் பல்வேறு சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். ஒருவேளை உங்களுடைய ஆதார் கார்டில் ஏதேனும் தகவல்கள் பிழையாக இருந்தால் அதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதை நீங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செய்யலாம். இருப்பினும் சில தகவல்களை பாதுகாப்புக் கருதி ஆன்லைனில் மாற்ற இயலாது. இந்த பதிவில் எந்தெந்த தகவல்களை ஆன்லைனில் மாற்ற முடியாது என்பது குறித்து பார்ப்போம்.

ஆதார் என்பது நாட்டிலுள்ள தனி நபர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் ஒரு கார்டாகும், இதில் 12 இலக்க தனித்துவ எண் இருக்கும்.
பெயர் மாற்றம்: ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் ஆன்லைனில் செய்ய முடியாது. ஆஃப்லைனில் தான் செய்ய வேண்டும். அதற்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையங்களுக்கு செல்லலாம். செல்லும்போது அடையாள ஆவணங்களையும் எடுத்துச் சொல்லுங்கள். அதேபோல ஆதார் கார்டில் 2 முறை மட்டுமே பெயர் மாற்றம் செய்ய முடியும். திருமணத்திற்கு பின்பு சிலர் தங்களுடைய பெயரில் மாற்றம் செய்து கொள்வார்கள். இது போன்ற நபர்களும் 2 முறை மட்டுமே மாற்ற முடியும். ஒரு வேலை 3-வது முறையும் உங்கள் பெயரில் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதற்கு UIDAI-இன் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
ஆன்லைன் மாற்றங்கள்: தற்போது UIDAI இணையதளம் மூலமாக உங்கள் முகவரி விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். இதை பெரும்பாலும் மக்கள் தவிர்த்து விடுகின்றனர். ஒரு இடத்தில் இருந்து நீங்கள் இன்னொரு இடத்திற்கு குடிபெயரும்போது கண்டிப்பாக உங்கள் ஆதார் முகவரியை மாற்ற வேண்டும். அதேபோல முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு வரம்புகள் கிடையாது. ஆனால் பெயர், பிறந்த தேதி, பாலினம், பயோமெட்ரிக் விபரங்களான கைரேகைகள் கருவிழி ஸ்கேன், மொபைல் நம்பர் மற்றும் மெயில் ஐடி போன்ற விவரங்களை மாற்றுவதற்கு ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications