இந்திய குடிமக்களுக்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டுகள் தகுதியான குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்குகிறது. உணவுப் பொருட்களை வழங்குவதற்கு அப்பால் ரேஷன் கார்டு அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக செயல்படுகிறது. இது பல்வேறு அரசாங்கத் திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறுவதற்கும் அத்தியாவசியமான ஆவணமாக இருக்கிறது.
இந்தப் பதிவில் ரேஷன் கார்டின் முக்கியத்துவம், ரேஷன் ரேஷன் கார்டுகளின் வகைகள் மற்றும் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள், யார் யாரெல்லாம் ரேஷன் கார்டு பெற தகுதியுடையவர்கள் என்ற விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ரேஷன் கார்டு என்றால் என்ன?: ரேஷன் கார்டு என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இதன் மூலம் தனிநபர்கள் அல்லது குடும்பங்கள் அவரவருக்கு நியமிக்கப்பட்ட கடைகளில் இருந்து மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும்.
ரேஷன் கார்டு முக்கியமாக குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும் உதவுவதற்காக கொண்டு வரப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும் பொருட்கள் அந்த வீட்டின் வருமான நிலையைப் பொறுத்தே இருக்கும். ரேஷன் கடைகளில் தானியங்கள் சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் கிடைக்கிறது.
இந்தியாவில் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளின் வகைகள்: இந்தியாவில் ரேஷன் கார்டுகள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் பொருளாதார நிலையின் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டு: அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டு இந்தியாவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ரேஷன் கார்டுகள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 15,000 ரூபாய்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்காக வழங்கப்படுகிறது. தெருவோர வியாபாரிகள், செருப்புத் தொழிலாளிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோர் அடங்குவர். ரேஷன் கார்டு இந்தக் குடும்பங்களுக்கு அதிக மானியத்துடன் கூடிய உணவுப் பொருட்களை அரசு வழங்குகிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு BPL ரேஷன் கார்டு: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு BPL ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் கார்டுகள் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 24,200 ஆக இருக்கும் பட்சத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு APL ரேஷன் கார்டு: வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு APL ரேஷன் கார்டுகள் கிடைக்கும். ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1,00,000-க்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு APL ரேஷன் கார்டுகள் கிடைக்கும்.
AAY மற்றும் BPL வகைகளைப் போலன்றி, APL ரேஷன் கார்டுகள் சமூகத்தில் ஏழ்மையான பிரிவினருக்காக வடிவமைக்கப்படவில்லை. ஆனால் BPL மற்றும் AAY வகைகளின் கீழ் வராத குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்குகிறது. APL ரேஷன் கார்டு நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது.
ரேஷன் கார்டுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?: ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் ரேஷன் கார்டின் வகை வெவ்வேறு மாநிலங்களின் அடிப்படையில் மாறுபடும். பொதுவான விண்ணப்பதாரர்கள் குறித்த விபரங்களை பார்க்கலாம்.
சேரிகளில் இருப்பவர்கள், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ரேஷன் கார்டு பெறலாம். தங்குமிடம் இல்லாத நபர்கள் மற்றும் திருநங்கைகள், ஊனமுற்ற உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருமணம் ஆகாதவர்கள், பிரிந்து சென்றவர்கள் மற்றும் குடும்ப தலைவர்களாக இருக்கும் பெண்கள், பாதுகாப்பற்ற குழந்தைகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் ஆகியோர் ரேஷன் கார்டு பெறலாம்.
ரேஷன் கார்டு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ் தேவையில்லை, வருமானச் சான்றிதழ் ஆகியவைத் தேவைப்படலாம்.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அதில் 'smart card application services' என்பதன் கீழ் இருக்கும் 'apply new smart card' என்பதை கிளிக் செய்வும். மேலும் நீங்கள் உங்களுக்கு விருப்பனமான மொழியை இணையதளத்தின் வலதுபுறத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
ஸ்டெப் 3: அதன் பிறகு,குடும்பத் தலைவரின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படமும், தற்போது குடியிருக்கும் முகவரியின் சான்றை அந்த இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
ஸ்டெப் 4: நீங்கள் அந்த படிவம் முழுவதையும் பூர்த்தி செய்தவுடன், ஏதேனும் பிழைகள் உள்ளதா என சரிபார்க்க அதனை மறுமுறை மதிப்பாய்வு செய்யவும்.
ஸ்டெப் 5: அடுத்து, 'submit' என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: நீங்கள் அந்த படிவத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் (Reference number) வழங்கப்படும். அந்த ரெஃபரன்ஸ் நம்பரைப் பயன்படுத்தி உங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை சரி பார்க்க முடியும்.
More From GoodReturns

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications